Latest Updates
-
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
New Year 2023 Vastu Tips: 2023-ல் உங்க வருமானம் அதிகரிக்கணுமா? அப்ப வாஸ்துப்படி இத செய்யுங்க...
வரக்கூடிய 2023 புத்தாண்டில் ஒருவரது வாழ்க்கையில் அனைத்தும் நல்லதாக நடக்க எந்த வாஸ்து பரிகாரங்களை ஆண்டின் தொடக்கத்திற்கு முன் செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.
New Year 2023 Vastu Tips: நாம் அனைவருமே 2023 புத்தாண்டில் நுழைய தயாராகிக் கொண்டிருக்கிறோம். வருகிற புத்தாண்டு நம் அனைவருக்குமே மங்களகரமான ஆண்டாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். ஜோதிடத்தின் படி, சிலருக்கு 2023 ஆம் ஆண்டில் பல ராசிக்காரர்களின் ஆசைகளும், கனவுகளும் நிறைவேறவுள்ளது. கடந்த ஆண்டில் கஷ்டப்பட்ட பல ராசிக்காரர்கள் இந்த புத்தாண்டில் நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். வாஸ்து சாஸ்திரத்தில் வரக்கூடிய புத்தாண்டு மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமானதாகவும் இருக்க சில பரிகாரங்கள் உள்ளன.

குறிப்பாக உங்கள் வருமானம் அதிகரிக்க வேண்டுமென்று விரும்பினால், அந்த வாஸ்து பரிகாரங்களை செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். இப்போது வரக்கூடிய 2023 புத்தாண்டில் ஒருவரது வாழ்க்கையில் அனைத்தும் நல்லதாக நடக்க எந்த வாஸ்து பரிகாரங்களை ஆண்டின் தொடக்கத்திற்கு முன் செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.

புத்தாண்டிற்கு முன் இதை செய்யுங்கள்
வேத ஜோதிடத்தில், எந்த ஒரு நல்ல காரியத்தை செய்வதற்கு முன்பும் விநாயகர் கட்டாயம் வழிபடப்படுகிறார். ஏனெனில் விநாயர் எந்த வகையான தடையையும் உடைத்தெறிவார். எனவே ஒரு புதிய ஆண்டில் நுழையும் முன், உங்கள் வீட்டின் பிரதான வாசலில் விநாயகரின் சிலையை வையுங்கள். மேலும் குதிரை காலணியையும் வீட்டின் பிரதான வாசலில் வையுங்கள். ஏனெனில் குதிரை காலணி உள்ள வீடுகளுக்குள் எதிர்மறை ஆற்றல் நுழையாது என்பது நம்பிக்கை. எனவே வரக்கூடிய புதிய ஆண்டு முழுவதும் செல்வம், அதிர்ஷ்டம், முன்னேற்றம், மரியாதை போன்றவை நிறைந்திருக்க விநாயகரின் சிலையுடன் குதிரை காலணியை வீட்டின் வாசலில் வையுங்கள்.

லட்சுமி தேவி போட்டோ
நீங்கள் வியாபாரம் செய்கிறீர்களா? வரக்கூடிய புத்தாண்டு உங்களுக்கு நல்லதாகவும், லாபகரமாகவும் இருக்க வேண்டுமானால் லட்சுமி தேவி போட்டோவை வாங்கி உங்கள் பணியிடத்தில் வையுங்கள். செல்வத்தின் அதிபதியாக லட்சுமி தேவி கருதப்படுகிறார். எனவே லட்சுமி தேவியை ஆண்டின் தொடக்கத்தில் கொண்டு வருவதன் மூலம், செல்வம் பெருகும்.

மூங்கில் செடி
ஃபெங் சூயி மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில், மூங்கில் செடி மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஆரோக்கியத்தின் சின்னமாக கருதப்படுகிறது. மூங்கில் செடி எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும் திறன் கொண்டது. மேலும் வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தாலும், மூங்கில் செடியை வீட்டில் வளர்த்தால், தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. எனவே வரக்கூடிய 2023 புத்தாண்டில் உங்கள் வீடு செல்வம் நிறைந்து செழிப்பாக இருக்க விரும்பினால், ஒரு மூங்கில் செடியை வாங்கி வளர்த்து வாருங்கள்.

வின்ட் சைம்
வாஸ்து சாஸ்திரத்தில், வின்ட் சைம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை அகற்றுவதில் சிறந்ததாக கருதப்படுகிறது. வீட்டினுள் காற்றோட்டம் சிறப்பாக இருக்கும் போது, வீட்டில் வின்ட் சைம் இருந்தால், அது எழுப்பும் ஒலி வீட்டினுள் உள்ள எதிர்மறை ஆற்றலை நுழையவிடாமல் தடுக்கும். எனவே வரக்கூடிய புத்தாண்டில் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்க வின்ட் சைம் வாங்கி வையுங்கள். முக்கியமாக இது வீட்டில் இருந்தால், பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

சிரிக்கும் புத்தர்
ஃபெங் சூய்யில் சிரிக்கும் புத்தர் மங்களகரமான மற்றும் செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே 2023 ஆம் ஆண்டு சிரிக்கும் புத்தரை உங்கள் வீட்டின் பிரதான அறையில் கதவுக்கு எதிரே சிரிக்கும் புத்தரை வையுங்கள். வாஸ்துவில் கூட சிரிக்கும் புத்தர் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த புத்தர் சிலை வீட்டில் இருந்தால் வருமானத்தில் உள்ள தடை நீங்கி, வீடு செழிப்பாக இருக்கும்.

மீன் தொட்டி
பொதுவாக மீன்கள் மங்களரமான மற்றும் ஆடம்பரத்தின் சின்னமாக கருதப்படுகிறது. எனவே 2023 ஆம் ஆண்டு உங்களுக்கு அற்புதமாக இருக்க வேண்டுமானால், வீட்டில் ஒரு மீன் தொட்டியை வாங்கி வையுங்கள். வீட்டில் மீன்களை வளர்க்கும் போது, அது வீட்டில் உள்ள நெருக்கடியை உள்வாங்கிக் கொள்கின்றன. ஆகவே வீட்டில் செழிப்பும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்க மீன் தொட்டியை வீட்டில் வைத்திருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications