Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
New Year 2023 Vastu Tips: புத்தாண்டு அன்று இந்த பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்தால் செல்வம் பெருகுமாம்...
வாஸ்து சாஸ்திரத்தில் புத்தாண்டு பிறக்கும் நாளில் சில பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்தால், வறுமை நீங்கி செல்வம் பெருகும். மேலும் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பி, வீட்டில் உள்ளோரின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
2022 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில வாரங்களே உள்ளன. அனைவருமே வரக்கூடிய புத்தாண்டு சிறப்பாக இருக்க வேண்டுமென விரும்புவோம். இதுவரை நீங்கள் பல கஷ்டங்களை அனுபவித்திருந்தால், வரக்கூடிய புத்தாண்டில் அனைத்து வகையான செல்வத்தையும் பெற சில வாஸ்து குறிப்புகள் உள்ளன. புத்தாண்டை வரவேற்க வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்களைப் பின்பற்றினால், பல நன்மைகளைப் பெறலாம்.

வாஸ்து சாஸ்திரத்தில் புத்தாண்டு பிறக்கும் நாளில் சில பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்தால், வறுமை நீங்கி செல்வம் பெருகும். மேலும் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பி, வீட்டில் உள்ளோரின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். இப்போது 2023 புத்தாண்டு அன்று வீட்டிற்கு எந்த பொருட்களை கொண்டு வந்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பதைக் காண்போம்.

மகாலட்சுமி யந்திரம்
புத்தாண்டிற்கு பலரும் வீட்டை சுத்தம் செய்வார்கள். அப்படி நீங்கள் உங்கள் வீட்டை சுத்தம் செய்துவிட்டால், மகாலட்சுமி யந்திரங்களை வாங்கி வந்து வீட்டில் வையுங்கள். இப்படி இந்த யந்திரத்தை வைப்பதன் மூலம், ஒருவர் அனைத்து வழிகளிலும் செல்வத்தை பெறுவதோடு, ஆண்டு முழுவதும் அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார். மொத்தத்தில் வாழ்க்கை செல்வ செழிப்போடு இருக்கும்.

பிரமீடு
வாஸ்து சாஸ்திரத்தில் பிரமீடுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. பிரமீடு இருக்கும் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியிருக்கும் மற்றும் எதிர்மறை ஆற்றல் நுழையாது. முக்கியமாக ஒருவரது வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், இந்த பிரமீடை வீட்டில் வைத்திருக்கும் போது, வாஸ்து தோஷம் நீங்குவதாக கருதப்படுகிறது. அதுவும் வெள்ளி, பித்தளை, தாமிரம் அல்லது படிக பிரமீடுகளை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது. எனவே உங்கள் வீட்டில் பிரமீடு இல்லாவிட்டால், இந்த புத்தாண்டில் பிரமீடுகளை வாங்குங்கள்.

சோழி
சோழி என்பது ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இந்த சோழியை ஒருவர் புத்தாண்டிற்கு முன் வீட்டிற்கு கொண்டு வந்தால், வாழ்வில் செல்வம் பெருகும். அதுவும் வாஸ்து சாஸ்திரப்படி 7 சோழியை சிவப்பு துணியில் வைத்து கட்டி, வீட்டின் பிரதான வாசலில் கட்ட வேண்டும். இப்படி செய்வதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் நுழையாது. மேலும் இந்த சோழியை சிவப்பு துணியில் கட்டி பணப்பையில் வைத்தால், நல்ல அதிர்ஷ்டத்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

மண் குடம்
புத்தாண்டை முன்னிட்டு உங்கள் வீட்டிற்கு ஒரு மண் குடத்தை வாங்குவது மிகவும் நல்லது. அதுவும் இந்த மண் குடத்தை வீட்டின் வடக்கு திசையில் வைத்தால், வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கும். மேலும் இது ஜாதகத்தில் உள்ள புதன் மற்றும் சந்திரனின் நிலையை சரிசெய்கிறது. ஆகவே புதனால் சந்திக்கும் பிரச்சனையை தவிர்க்க வேண்டுமானால், நீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தை வடக்கு திசையில் வையுங்கள். இதனால் இந்த கிரகங்கள் வலுபெறும்.

உலோக யானை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உலோகத்தால் செய்யப்பட்ட யானையின் சிலையை வீட்டில் வைத்திருப்பது நல்லதாக கருதப்படுகிறது. ஏனெனில் இது வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் தீய ஆற்றலை அழிக்கிறது. எனவே உங்கள் வீட்டில் இதுமாதிரியான யானை இல்லாவிட்டால், இந்த புத்தாண்டில் வெள்ளி யானையை வாங்குங்கள். இது வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும்.

மயில் இறகு
மயில் இறகு வீட்டில் இருப்பது மிகவும் நல்லது மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக கிருஷ்ணருக்கு மயிர் இறகு மிகவும் பிடிக்கும். அந்த மயில் இறகை வீட்டில் வைத்திருக்கும் போது, அந்த வீட்டில் லட்சுமி தேவி குடிபுகுவாள் என்பது நம்பிக்கை. எனவே இந்த புத்தாண்டில் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் நிலைத்திருக்க விரும்பினால், மயில் இறகை வீட்டிற்கு வாங்கி வாருங்கள். குறிப்பாக 1-3 மயில் இறகுகளை வீட்டிற்கு வாங்கி வர வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications