Latest Updates
-
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
புத்தாண்டு நாளில் இந்த பொருட்களை பர்ஸில் வைத்தால், பணம் அதிகம் குவியுமாம்.. ட்ரை பண்ணி பாருங்க..
வரக்கூடிய புத்தாண்டில் உங்கள் பர்ஸில் எப்போதும் பணம் நிரம்பியிருக்க வேண்டுமானால், லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படும் சில பொருட்களை உங்கள் பர்ஸில் வைத்திருங்கள்.
New Year 2023: நாம் ஒவ்வொருவருமே புத்தாண்டில் நுழைய தயாராக உள்ளோம். அனைவரும் பலவித எதிர்பார்ப்புகளுடன் புத்தாண்டில் நுழையவிருக்கிறோம். குறிப்பாக பலரும் 2023 ஆம் ஆண்டு நமக்கு அதிர்ஷ்டமானதாக இருக்க வேண்டும், பண பற்றாக்குறை வந்துவிடக்கூடாது என்று விரும்புவோம். அதற்காக பல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். வாஸ்துப்படி ஒருவர் அதிக பணப்பிரச்சனைகளை சந்திப்பதற்கு அவரைச் சுற்றி எதிர்மறை ஆற்றல் சூழ்ந்திருப்பது காரணமாக இருக்கும்.

நீங்கள் என்ன சம்பாதித்தாலும், உங்கள் பர்ஸில் பணம் நிலைத்திருப்பதில்லையா? அப்படியானால் வரக்கூடிய புத்தாண்டில் உங்கள் பர்ஸில் எப்போதும் பணம் நிரம்பியிருக்க வேண்டுமானால், லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படும் சில பொருட்களை உங்கள் பர்ஸில் வைத்திருங்கள். இதனால் இந்த பொருட்கள் பணத்தை ஈர்த்து, பர்ஸில் எப்போதும் பணம் நிலைத்திருக்கச் செய்யும். இப்போது 2023 ஆம் ஆண்டு முழுவதும் பர்ஸில் பணம் நிரம்பியிருக்க எந்த பொருட்களை பர்ஸில் வைத்திருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

தாமரை விதைகள்
தாமரை மலர் லட்சுமி தேவியுடன் தொடர்புடையது. அந்த தாமரை மலரின் விதைகள் அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. எனவே உங்கள் பர்ஸில் பணம் நிலைப்பதில்லை என்று நீங்கள் வருந்தினால், சிறிது தாமரை விதைகளை பணம் வைக்கும் பர்ஸில் எப்போதும் வைத்திருங்கள். இதனால் பணம் அதிகம் சேரும்.

அரிசி
21 அரிசிகளை எடுத்து ஒரு வெள்ளை காகிதத்தில் வைத்து மடித்து, அவற்றை உங்கள் பர்ஸில் வையுங்கள். இதனால் தேவையற்ற பணச் செலவுகள் குறையும். அதுவும் அந்த அரிசிகளை லட்சுமி தேவிக்கு படைத்து வணங்கிவிட்டு பின், அவற்றை பணம் வைக்கும் பர்ஸில் வையுங்கள்.

வெள்ளி நாணயம்
உங்களிடம் வெள்ளி நாணயம் இருந்தால், அவற்றை உங்கள் பர்ஸில் வையுங்கள். ஆனால் அந்த நாணயத்தை பர்ஸில் வைக்கும் முன், அதை லட்சுமி தேவிக்கு முன் சிறிது நேரம் வைத்து, பின்னர் அதை எடுத்து பர்ஸில் வைக்க வேண்டும். இப்படி செய்வதனாலும் பர்ஸில் பணம் அதிகம் சேரும்.

அரச மர இலை
அரச மரம் ஒரு புனிதமான மரமாக கருதப்படுகிறது. அந்த அரச மரத்தின் ஒரு நற்பதமான இலையை நீரில் கழுவி விட்டு, பின் அதை பர்ஸில் வைக்க வேண்டும். இதனால் பர்ஸில் பணம் அதிகம் சேரும். வேண்டுமானால் இந்த வழியை முயற்சிப் பாருங்கள்.

சோழி
சோழி செழிமைக்காக வாஸ்துவில் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் பர்ஸில் பணம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டுமானால், 7 மங்சள் நிற சோழிகளை பர்ஸில் வைத்திருங்கள். இது உங்கள் பர்ஸின் குளிர்ச்சியைப் பராமரிக்க உதவுகிறது.

லட்சுமி தேவி போட்டோ
செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியின் போட்டோவை பர்ஸில் வைத்திருப்பதன் மூலம், பணம் அதிகம் சேர்வதோடு, பணப்பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். ஆனால் லட்சுமி தேவி அமர்ந்த நிலையில் உள்ள போட்டோவைத் தான் வைத்திருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
