Latest Updates
-
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
புத்தாண்டின் போது உலகின் மற்ற நாடுகளில் மக்கள் அதிர்ஷ்டத்துக்காக இந்த உணவுகளை சாப்பிடுவாங்களாம்...
உலகின் சில நாடுகளில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் குறிப்பிட்ட உணவுகளை உண்ணும் வழக்கம் காலங்காலமாக மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்போது உலகெங்கிலும் உள்ள புத்தாண்டு உணவுப் பாரம்பரியங்கள் சிலவற்றைக் காண்போம்.
2022 ஆம் ஆண்டு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையவுள்ளது. 2023 ஆம் ஆண்டில் புதிய நம்பிக்கைகள் மற்றும் கனவுகளுடன் நுழையப் போகிறோம். கடந்த சில ஆண்டுகளாக நாம் புத்தாண்டுகளை கோவிட் தொற்றின் காரணமாக ஒருசில கட்டுப்பாடுகளுடன் கொண்டாடி வருகிறோம். 2023 ஆம் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடலாம் என்று நினைத்தால், கோவிட் ஓமிக்ரானின் BF.7 மாறுபாடு பல நாடுகளில் பரவி வழக்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.

எதுவாயினும், புத்தாண்டின் போது இந்த புதிய ஆண்டை வரவேற்கும் வகையில் நாம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கேக்குகளை வெட்டி அல்லது இனிப்புக்களைப் பகிர்ந்து கொண்டாடுவோம். அந்த வகையில் உலகின் சில நாடுகளில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் குறிப்பிட்ட உணவுகளை உண்ணும் வழக்கம் காலங்காலமாக மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்போது உலகெங்கிலும் உள்ள புத்தாண்டு உணவுப் பாரம்பரியங்கள் சிலவற்றைக் காண்போம்.

12 திராட்சைகள், ஸ்பெயின்
ஸ்பெயினில் புத்தாண்டு பிறக்கும் போது நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகளை சாப்பிடும் ஒரு பாரம்பரிய வழக்கம் உள்ளது. அவ்வாறு சாப்பிடாவிட்டால், அது அந்த ஆண்டில் துரதிர்ஷ்டத்தை தருமாம். அதில் அவர்களுக்கு இனிப்பு திராட்சை கிடைத்தால், அது அதிர்ஷ்டமாகவும், புளிப்பு திராட்சை கிடைத்தால், அது துரதிர்ஷ்டத்தை தருவதாகவும், அந்நாட்டு மக்கள் நம்புகின்றனர்.

தமலேஸ், மெக்சிகோ
மெக்சிகோவில் புத்தாண்டு பிறக்கும் போது தமலேஸ் என்னும் ரெசிபியை மக்கள் வீட்டில் செய்து, அவற்றை தங்களின் நண்பர்கள், குடும்பத்தினருக்கு வழங்குவார்கள். தமலேஸ் என்பது சோள மாவில் இறைச்சி மற்றும் சீஸை வைத்து வாழை இலையில் வைத்து சுற்றி செய்யும் ஒரு உணவாகும்.

பச்சை முட்டை, எல் சால்வடார்
எல் சால்வடாரில் உள்ள மக்கள், பாரம்பரியமாக புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன் ஒரு டம்ளர் நீரில் முட்டையை உடைத்து ஊற்றுவார்கள். மறுநாள் காலையில் எழுந்து அந்த டம்ளரில் உள்ள மஞ்சள் கரு எப்படி உள்ளதோ, அதை வைத்து அவர்களுக்கு அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தீர்மானிப்பார்களாம்.

பருப்புகள், இத்தாலி
இத்தாலி மக்கள் புத்தாண்டு அன்று பருப்பை நாணயம் போன்ற வட்ட வடியில் உட்கொள்வார்களாம். ஏனெனில் பருப்புக்களானது ஆண்டு முழுவதும் செழிப்பைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. அதுவும் இந்த பருப்பை போர்க் சாசேஜ் உடன் சாப்பிடுவார்களாம்.

குகு சப்ஜி, ஈரான்
இது முட்டை மற்றும் நற்பதமான மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஒரு ஃப்ரிட்டாட்டா ஆகும். மேலும் இது நவ்ரூஸில் ஒரு பாரம்பரிய உணவாகும். குகு சப்ஜி உண்பதன் மூலம், ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் மற்றும் நில வளம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.

மாதுளை, துருக்கி
துருக்கி நாட்டு மக்கள் புத்தாண்டு அன்று தங்கள் வீட்டு வாசலில் மாதுளையை அடித்து நொறுக்குவார்களாம். அப்படி செய்யும் போது, அதிலிருந்து தெறிக்கும் விதைகள் போன்று, அந்த ஆண்டில் அதிக அதிர்ஷ்டம் வரும் என்று நம்பப்படுகிறது.

சர்க்கரையால் ஆன பன்றி, ஜெர்மனி
ஜெர்மனியில் பன்றிகள் பணத்திற்கு சமமாக கருதப்படுகின்றன. எனவே ஜெர்மனியில் புத்தாண்டின் போது அந்நாட்டு மக்கள் சர்க்கரை மற்றும் பாதாம் பேஸ்ட்டால் ஆன பன்றியை செய்து, அதை புத்தாண்டு பிறந்ததும் சாப்பிடுவார்களாம். இதனால் அந்த புத்தாண்டு இனிமையாக இருக்கும் என்று அந்நாட்டு மக்கள் நம்புகின்றனர்.

விஸ்கி, ஸ்காட்லாந்து
ஸ்காட்லாந்தில், புத்தாண்டு கொண்டாட்டமானது ஸ்காட்டிஷ் விஸ்கி இல்லாமல் முழுமையடையாது. மேலும் அந்நாட்டில் மக்கள் மசாலா பழ கேக் செய்தும் சாப்பிடுவார்களாம். இவை புத்தாண்டை இனிமையாகவும், ஆண்டு முழுவதும் போதுமான உணவு கிடைக்க செய்யும் என்று மக்களால் நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications
