Latest Updates
-
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
வாஸ்துப்படி இந்த பொருட்களை யாருக்கும் தானமா கொடுத்துடாதீங்க.. இல்லன்னா கஷ்டப்படுவீங்க...
ஜோதிடத்தில் தானம் செய்யக்கூடாத பொருட்கள் என்று சில உள்ளன. அந்த பொருட்களை தானம் செய்தால், அது வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
பொதுவாக தானம் செய்வது ஒருவருக்கு புண்ணியத்தை சேர்க்கும் என்பார்கள். இந்து மதம் மற்றும் ஜோதிடத்தில், தானம் செய்லது மிகவும் மங்களகரமான செயலாக கருதப்படுகிறது. தானம் செய்வதால் தெய்வங்கள் மகிழ்ச்சி அடைவதோடு, ஒருவருக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தானம் என்பது நம்மிடம் இருக்கும் பொருட்களை மற்றவர்களுக்கு அல்லது இல்லாதவர்களுக்கு கொடுப்பதாகும்.

ஆனால் ஜோதிடத்தில் தானம் செய்யக்கூடாத பொருட்கள் என்று சில உள்ளன. அந்த பொருட்களை தானம் செய்தால், அது வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். குறிப்பாக பண நெருக்கடியை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. அதேப் போல் நாம் பயன்படுத்தும் சில பொருட்களை மற்றவர்களுடன், ஏன் நம் வீட்டில் உள்ளோருடன் கூட பகிர்ந்து கொள்ளக்கூடாது. அது தரித்ரியத்தை தான் ஏற்படுத்தும். இப்போது எந்த பொருட்களை தானம் செய்யக்கூடாது மற்றும் எந்த பொருட்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதைக் காண்போம்.

பிளாஸ்டிக் பொருட்கள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவருக்கு எப்போதும் பிளாஸ்டிக் பொருட்களை மட்டும் தானம் செய்யக்கூடாது. இல்லாவிட்டால், அது வீடு மற்றும் வியாபாரத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.

இரும்பு பொருட்கள்
இரும்பு பாத்திரங்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பது அசுபமாக கருதப்படுகிறது. ஜோதிடத்தின் படி, இரும்பு பொருட்களை தானம் செய்வதால் வீட்டின் அமைதிக் கெடும். குறிப்பாக வீட்டு உறுப்பினர்களிடையே சண்டைகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடிகாரம்
நேரம் பார்க்க நாம் கைகளில் கட்டும் கடிகாரத்தை எப்போதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஜோதிடத்தின் படி, கடிகாரம் ஒருவரின் நேரத்தில் இருந்து பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட கடிகாரத்தை பகிரும் போது, அது வாழ்வில் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். குறிப்பாக தொழில் வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

துடைப்பம்
வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பத்தை எப்போதும் தானமாக வழங்கக்கூடாது. அவ்வாறு செய்வது அசுபமாக கருதப்படுகிறது. ஏனெனில் துடைப்பமானது வீட்டின் லட்சுமி தேவி வாசம் செய்யும் பொருளாக கருதப்படுகிறது. அதை தானம் செய்தால் பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே மறந்தும் துடைப்பத்தை தானம் செய்துவிடாதீர்கள்.

கத்தி, கத்தரிக்கோல்
வீட்டில் காய்கறிகளை வெட்ட பயன்படுத்தும் கத்தி மற்றும் துணிகளை வெட்ட பயன்படுத்தும் கத்தரிக்கோலை தானம் செய்வது மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. இந்த பொருட்களை மற்றவர்களுக்கு தானம் செய்தால், அது குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சனைகளை ஏற்படுத்தி பிரிவை ஏற்படுத்திவிடுமாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
