For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரி 2020: துர்காஷ்டமி எப்போது? எப்படி பூஜை செய்வது?

நவராத்திரியின் எட்டாம் நாள் அஷ்டமி ஆகும். பக்தர்களுக்கு இந்த நாள் மிகவும் சிறப்பான நாளாகும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் இந்த நாளை ஒவ்வொரு விதமாக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

|

உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினரால் கொண்டாடப்படும் ஒரு மிகப்பெரிய விழா நவராத்திரி. புரட்டாசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் 9 நாட்களை நவராத்திரி என்று குறிப்பிட்டு, அந்த நாட்களில் இந்த விழாவை கொண்டாடி மகிழ்வார்கள். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

Navratri 2020: When Is Ashtami 2020? Date, Time, Puja, Prasad For Durga Ashtami

'நவ' என்பது எண் ஒன்பதைக் குறிக்கும். ராத்திரி என்பது இரவைக் குறிக்கும். மகிஷாசுரனை போரில் வீழ்த்திய தேவி துர்க்கையை கௌரவிக்கும் விதமாக இந்த ஒன்பது இரவுகளும் கொண்டாடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒன்பது அவதாரம்

ஒன்பது அவதாரம்

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை போற்றிப் பாடுவது இந்து மரபு.

முதல் நாள் - தேவி ஷைலபுத்ரி

இரண்டாம் நாள் - தேவி பிரம்மச்சாரிணி

மூன்றாம் நாள் - தேவி சந்திரகாந்தா

நான்காம் நாள் - குஷ்மாந்தா

ஐந்தாம் நாள் - ஸ்கந்தமாதா

ஆறாம் நாள் - தேவி காத்யாயனி

ஏழாம் நாள் - காலராத்ரி

எட்டாம் நாள் - மகாகௌரி

ஒன்பதாம் நாள் - சித்திதாத்ரி

பாரம்பரியம்

பாரம்பரியம்

இந்த விழாக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் பாராம்பரிய பழக்கத்தின் படி இந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள். தற்போது எல்லா ஊர்களிலும் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் நவராத்திரி விழாவிற்கான சிறப்பு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர். ஆலயத்திற்கு சென்று வழிபட முடியாத மக்கள் வீட்டில் இருந்தபடி தேவி துர்க்கையை வழிபட்டு வருகின்றனர். துர்கா தேவி உலகில் அவதரித்த சிறப்பான காலமாக நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஒன்பது நாட்களும் பக்தர்களுடன் துர்காதேவி இருப்பதாக ஐதீகம் உள்ளது. அதிகாலையில் பக்தர்கள் எழுந்து தேவியை வழிபட்டு, பிரசாதம் படைத்து தேவியின் அருளை பெறுகின்றனர். நவராத்திரி காலத்தில் விரதம் இருந்து தேவியை வழிபடுபவர்களும் உண்டு.

துர்காஷ்டமி

துர்காஷ்டமி

நவராத்திரியின் எட்டாம் நாள் அஷ்டமி ஆகும். பக்தர்களுக்கு இந்த நாள் மிகவும் சிறப்பான நாளாகும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் இந்த நாளை ஒவ்வொரு விதமாக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்ரி அஷ்டமி , 24 அக்டோபர் 2020 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.

அஷ்டமி நாள், நேரம், பூஜை நேரம்

அஷ்டமி நாள், நேரம், பூஜை நேரம்

அஷ்டமி திதி தொடங்கும் நேரம் - காலை 06:57, அக்டோபர் 23, 2020

அஷ்டமி திதி முடியும் நேரம் - காலை 06:58 அக்டோபர் 24, 2020

துர்காஷ்டமி நாளின் சிறப்பம்சம்

துர்காஷ்டமி நாளின் சிறப்பம்சம்

அஷ்டமி நாளன்று பல்வேறு பூஜை சடங்குகள் நடைபெறும். பல இந்து குடும்பங்களில் கன்னி புஜை மற்றும் கன்னி விருந்து நடைபெறும். பருவம் அடையாத 9 சிறு பெண் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு அல்வா, பூரி, சுண்டல் போன்ற சுவையான விருந்து கொடுத்து உபசரிப்பார்கள். இந்த பெண் பிள்ளைகள் துர்கா தேவியின் அவதாரமாக கருதப்படுகிறார்கள். அவர்களுடைய பாதங்களைக் கழுவி, கை மணிக்கட்டில் சிவப்பு கயிறு கட்டி, அவர்களுக்கு பென்சில் பாக்ஸ், க்ளிப், தண்ணீர் பாட்டில் போன்ற சிறு பரிசு பொருட்களைக் கொடுத்து அனுப்பி வைப்பார்கள்.

வங்காளத்தில் துர்காஷ்டமி பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். ஷஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி ஆகிய முக்கிய ஐந்து நாட்களுள் மிகவும் முக்கியமான ஒரு நாளாக கருதப்படுவது அஷ்டமி. இந்த நாளில் சந்தி பூஜை நடைபெறும். 108 விளக்குகள் ஏற்றி, 108 தாமரை மலர்கள் மற்றும் வில்வ இலைகள் கொண்டு துர்கா தேவியை வழிபடுவர். புராணங்களின்படி, மகிஷாசுரனுக்கும் துர்கா தேவிக்கும் இடையில் நடந்த போரில், விதியை மீறிய மகிஷாசுரனை கண்டு, கோபம் கொண்ட தேவி துர்க்கையின் மூன்றாவது கண்ணிலிருந்து காளி தேவி வெளிப்பட்ட நாள் என்று அஷ்டமி நாள் கருதப்படுகிறது.

பிரசாதம்

பிரசாதம்

துர்காஷ்டமி நாளில் துர்கா பூஜையில் அளிக்கப்படும் பிரசாதம் மற்ற நாட்களைக் காட்டிலும் மிகவும் சிறப்பானது. பெரிய பெரிய பாத்திரங்களில் சுண்டல், பன்னீர் , கிச்சடி, தக்காளி சட்னி, அப்பளம், சாலட், பாயசம் போன்ற சிறப்பு உணவுகள் தேவிக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri 2020: When Is Durga Ashtami 2020? Date, Time, Puja, Prasad For Durga Ashtami

Navratri 2020: When Is Ashtami 2020? Date, Time, Puja, Prasad For Durga Ashtami. Read on...
Desktop Bottom Promotion