For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரி பற்றி பலருக்குத் தெரியாத சுவாரஸ்யமான 3 கதைகள்!

நவராத்திரி குறித்த சில சுவாரஸ்ய கதைகள் நம்மிடையே உள்ளன. இந்த கதைகள் மூலம் இந்துக்கள் நவராத்திரி விழாவை 9 நாட்கள் கொண்டாடுவதற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

|

நவராத்திரியின் பாரம்பரியம் மிகவும் பழமையானது. இந்த விழா எப்போது தொடங்கப்பட்டது என்பது குறித்து சரியாக கூற முடியாது. நவராத்திரி விழா என்பது பழங்கால அறுவடை திருவிழா என்றும் சிலர் நம்புகின்றனர். மதம் சார்ந்த திருவிழாக்களில் பல சூரியன், சந்திரன் ஆகியவற்றுடன் தொடர்புடையது மட்டுமில்லாமல் நட்சத்திர நிலையையும் பொறுத்து கொண்டாடப்படுகிறது. மற்ற விழாக்களை போல் நவராத்திரியும் இந்திய ஜோதிடத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

Navratri 2020: Three Intriguing Stories For Navratri In Tamil

நன்மை மற்றும் தீமைக்கு இடையில் நடக்கும் போர்களை பற்றி விவரிக்கக்கூடிய மதம் சார்ந்த முதன்மை நூல்களாக அறியப்படுபவை சண்டி பாடம், ராமாயணம், மகாபாரதம் போன்றவையாகும். இந்த நூல்களில் நவராத்திரி குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் முதன்மையானதும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதுமாக இருப்பது சண்டி பாடம்.

MOST READ: நவராத்திரி எதற்காக கொண்டாடப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?

நவராத்திரி குறித்த சில சுவாரஸ்ய கதைகள் நம்மிடையே உள்ளன. இந்த கதைகள் மூலம் இந்துக்கள் நவராத்திரி விழாவை 9 நாட்கள் கொண்டாடுவதற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஒரு எழுத்து, மொத்த நிகழ்வையும் மாற்றி அமைத்தது:

1. ஒரு எழுத்து, மொத்த நிகழ்வையும் மாற்றி அமைத்தது:

ஒருமுறை இலங்கை மன்னன் ராவணன் சண்டி யாகம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அனுமன் ஒரு பிரமாண சிறுவன் போல் வேடமணிந்து யாகத்தில் பங்குபெற்ற பிராமணர்களுக்கு சேவை செய்தார். அவருடைய சேவையில் மகிழ்ச்சி அடைந்த பிராமணர்கள் அனுமனின் விருப்பம் ஒன்றை நிறைவேற்றுவதாக சத்தியம் செய்தனர். அப்போது அனுமன் தாழ்மையான குரலில் அவர்கள் கூறும் மந்திரத்தில் ஒரு எழுத்தை மாற்ற விரும்புவதாக கூறினார். பிராமணர்களுக்கு அனுமன் கூறியது முழுவதும் விளங்கவில்லை என்றாலும் "அப்படியே ஆகட்டும்" என்று வரம் அளித்தனர். அனுமன் இப்போது ‘பூர்த்திஹாரிணி' என்ற வார்த்தையில் உள்ள ‘ஹா' என்ற வார்த்தைக்கு மாற்றாக ‘கா' என்ற எழுத்தை மாற்றி பூர்த்திகாரிணி என்று கூற வேண்டும் என்றார். அதனால் பூர்திஹாரிணி என்ற சொல் பூர்த்திகாரிணி என்று ஆனது.

சண்டி தேவியின் கோபம்

சண்டி தேவியின் கோபம்

பூர்த்திஹாரிணி என்பது துன்பங்களில் இருந்து காப்பாற்றுபவள் என்ற பொருள். அதுவே பூர்த்திகாரிணி என்பது துன்பங்களை உருவாக்குபவள் என்று பொருள். ஒரு எழுத்து மாறுவதால் அதன் முழு அர்த்தமும் தலைகீழாக மாறியது. இதனால் கோபம் கொண்ட சண்டி தேவி ராவணனை சபித்துவிட்டார். இப்படி சண்டி தேவியின் அருளை பெறுவதற்காக நடத்தப்பட்ட சண்டி யாகம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது.

2. சண்டி தேவிக்காக தன்னுடைய கண்களை இழக்கத் துணிந்த ஸ்ரீராமர்

2. சண்டி தேவிக்காக தன்னுடைய கண்களை இழக்கத் துணிந்த ஸ்ரீராமர்

ராவணனுடன் போர் செய்யக்கூடிய காலகட்டத்தில் ஸ்ரீராமரிடம் சண்டி தேவியை வழிபடுமாறு பிரம்மர் அறிவுறுத்தினார். சண்டி தேவியை வழிபடுவதால் ராவணனை வதைக்கும் வலிமையைப் பெற முடியும் என்றும் பிரம்ம தேவர் கூறினார். பிரம்ம தேவரின் அறிவுரையைப் பின்பற்றி 108 நீல தாமரை மலர்கள் கொண்டு ஸ்ரீராமர் சண்டி தேவிக்கான பூஜை சடங்குகளை மேற்கொள்ளத் தொடங்கினார். மறுபுறம், ராவணன் சாகாவரம் பெறுவதற்காக சண்டி யாகத்தை நடத்தி வந்தான். ராவணன் சண்டி யாகம் நடத்தும் செய்தியை ஸ்ரீராமருக்கு தெரியப்படுத்த இந்திர தேவன் வாயு பகவானை ஸ்ரீராமரிடம் அனுப்பி வைத்தார் . ஸ்ரீ ராமர் எந்த ஒரு படாடோபம் இல்லாமல் அமைதியான முறையில் பூஜையை தொடங்கி சண்டி தேவியை வழிபடுமாறு இந்திர தேவன் எச்சரிக்கை விடுத்தார் . திடீரென்று நீல தாமரையில் ஒன்று காணாமல் போய்விட்டது. இதற்கு காரணாம் ராவணனின் மந்திர ஜாலமாகும். ஸ்ரீராமரின் வழிபாட்டில் இதனால் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக சண்டிதேவியின் கோப பார்வைக்கு ஸ்ரீராமர் இலக்காகும் சூழ்நிலை உருவானது.

தாமரை விழியோன்

தாமரை விழியோன்

நீல தாமரை என்பது கிடைத்தற்கரிய ஒரு பொருள் என்பதால் உடனடியாக மற்றொரு மலர் எடுத்து வருவது சற்று இயலாத காரியம் ஆகும். உடனே ஸ்ரீராமரின் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. மக்கள் ஸ்ரீராமரை ‘தாமரை விழியோன்' என்று அழைப்பார்கள். அவருடைய கண்கள் தாமரை மலர் போல் இருக்கும். அதனால் ஸ்ரீ ராமர் தன்னுடைய கண்களில் ஓன்றை தாமரை மலருக்கு மாற்றாக கொடுக்க எண்ணினார். உடனே தன்னுடைய ஒரு கண்ணை நோக்கி அன்பை குறி வைத்தார். அப்போது சண்டி தேவி தோன்றி ஸ்ரீராமரை தடுத்து நிறுத்தினார். ஸ்ரீராமரை சண்டி தேவி ஆசிர்வதித்து போரில் அவர் வெற்றி மாலை சூடுவார் என்று வாழ்த்தி விட்டு மறைந்தார்.

3. தேவர்கள் துர்க்கையை உருவாக்கினர்

3. தேவர்கள் துர்க்கையை உருவாக்கினர்

மகிஷாசுரன் என்னும் அரக்கனை வீழ்த்த துர்கா தேவி தோன்றினார். இது நவராத்திரி குறித்த மற்றொரு முக்கிய கதையாகும்.

மகிஷாசுரன் என்னும் அரக்கன் சாகாவரம் வேண்டி நீண்ட காலம் தவமிருந்தான். அவனுடைய தவத்தால் மகிழ்ந்த தேவர்களும் அவன் விரும்பிய வரத்தை அவனுக்கு அளித்தனர். வரத்தைப் பெற்ற மகிஷாசுரன் அந்த வரத்தை துஷ்பிரயோகப்படுத்தத் தொடங்கினான். மகிஷாசுரன் சொர்க்கலோகத்தை முற்றுகையிட்டு, தேவர்களை பூமிக்கு விரட்டினான். இதனால் தேவர்கள் அனைவரும் சேர்ந்து துர்கா தேவையை உருவாக்கி அவர்கள் அனைவரின் சக்தியையும் துர்கா தேவிக்கு கொடுத்தனர். தேவர்கள் அவர்களுடைய ஆயுத களஞ்சியத்தையும் துர்க்கைக்கு கொடுத்தனர். மகிஷாசுரன் மற்றும் தேவி துர்க்கை ஆகியோருக்கு இடையில் 9 நாட்கள் தொடர்ந்து போர் நடந்தது. இறுதியாக மகிஷாசுரனை வீழ்த்தி ‘மகிஷாசுர மர்த்தினி' என்ற பெயர் பெற்றார் தேவி துர்க்கை. இவருடைய வெற்றியை குறிப்பதற்காகவே 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri 2020: Three Intriguing Stories For Navratri In Tamil

Navratri 2020: Here are three intriguing stories for navratri in tamil. Read on...
Desktop Bottom Promotion