For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவ துர்கைகள் யார்யார்? அம்பிகையும், துர்கையும் ஒன்றா?

பெரும்பாலும் அம்பாள், துர்கை, காளி போன்ற தெய்வங்களை பெரும்பாலானோர், பார்வதி தேவியுடன் ஒப்பிட்டும் கூறுகின்றனர். இன்னும் சிலர், சிவபெருமானில் சரிபாதியாகவும் தவறாக கருதுகின்றனர்.

|

நவராத்திரி எப்போதுமே நவதுர்கா உற்சவம் என்று குறிப்பிடப்படுகிறது. இது துர்கா தேவியை போற்றி வழிபடும் ஒரு திருவிழாவாகும். ஆனால் பெரும்பாலும் அம்பாள், துர்கை, காளி போன்ற தெய்வங்களை பெரும்பாலானோர், பார்வதி தேவியுடன் ஒப்பிட்டும் கூறுகின்றனர். இன்னும் சிலர், சிவபெருமானில் சரிபாதியாகவும் தவறாக கருதுகின்றனர்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் வித்தியாசங்கள் இருக்க தான் செய்கின்றன. நாம் தான் அனைத்து தெய்வமும் ஒன்று என கருதுகின்றோம். வாருங்கள். இப்போது அந்த வித்தியாசங்கள் பற்றி சற்று விளக்கமாக பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அம்பிகை யார்?

அம்பிகை யார்?

சிவ புராணத்தின் படி, கடவுளானவர் மனித உருவெடுத்ததன் நோக்கமே அந்த தோற்றத்தை மென்மேலும் பெருக்க வேண்டும் என்பதே. பர பிரம்மவான சிவபெருமான், தனது சொந்த வடிவத்திலிருந்து சக்தியை ஒரு தனி உருவாக உருவாக்கியிருந்தார். இவ்வாறு செய்யாமிருப்பின், சக்தி அவரிடம் இருந்து ஒருபோதும் பிரிந்து செல்லாதிருப்பார். அவர் தான் அம்பிகையே தவிர, சதி அல்லது பார்வதி தேவி அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அம்பிகைக்கு, பிரகிருதி, சர்வேஷ்வரி, நித்யா என்றும் சில சமயங்களில் ஜகதம்பாள் என்றும் அழைக்கப்படுவார். அம்பிகையானவர், எட்டு கரங்களைக் கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார்.

துர்கை யார்?

துர்கை யார்?

ஹிரண்யக்ஷ குலத்தில், துர்கமாசுரர் என்ற ஒரு தெய்வம் இருந்தது. அவர் குருவின் மகனாவார். துர்கமாசுரன், இந்திரனின் தலைநகரான அமராவதி மீது படையெடுத்து சென்று, தேவர்களிடமிருந்து அதனை கைப்பற்றினான். அமராவதியில் இருந்து வெளியேற்றப்பட்ட தேவர்கள், பின்னர் அம்பிகையிடம் சென்று வணங்கி உதவி கோரினர். இது குறித்து அறிந்த துர்கமாசுரன், இந்த முறை துர்கா தேவி மீது போர் அறிவித்தார். துர்கமாசுராவின் அனைத்து சக்திகளையும் படை பலத்தையும் துர்கா தேவி போரில் அழித்தார். இந்த போருக்கு பிறகு தான், அம்பிகையாவனர், துர்கையாக அழைக்கப்பட்டார். நவராத்திரி விழாக்களின். கொலுவில் மையத்தில் இருக்கும் போர் கடவுளே துர்கா தேவி தான்.

சதி யார்?

சதி யார்?

சிவன் தட்ச மன்னனின் மகள் தட்சாயினியை திருமணம் செய்து கொண்டார். அவர் தான், சதி என்றும் அழைக்கப்படுகிறார். கணவர் அவமானப்படுவதைக் கண்ட சதி, தட்சனால் நிகழ்த்தப்பட்ட யாகத்தின் யாக குழியில் குதித்து தனது மனித வடிவத்தை தியாகம் செய்தாள். தீயில் எரிந்த சதியின் சிதைந்த உடலை சிவபெருமான் தனது தோள்களில் சுமந்து செல்கிறார். அப்போது, சதியின் உடல் பாகங்கள் எங்கெல்லாம் விழுந்ததோ, அவை அனைத்தும் இப்போது சக்தி பீடங்களாக உள்ளன. இந்தியா முழுவதும் மொத்தம் 52 சக்தி பீடங்கள் உள்ளன. அந்த சம்பவத்திற்கு பிறகு, சதியானவர் பார்வதியாக மறுபிறவி எடுக்கிறார். இறுதியில் சிவனை சமாதானப்படுத்த கடுமையான தவத்தை மேற்கொண்டு மீண்டும் அவரை திருமணம் செய்துகொண்டார். பார்வதியை கௌரி மற்றும் மஹாகௌரி என்றும் அழைக்கிறார்கள்.

நவதுர்கா யார்?

நவதுர்கா யார்?

சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாந்தா, குஷ்மாந்தா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி: இவை தான் நவ துர்கைகளாவர். துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள். நவராத்திரியின் ஒன்பது இரவுகளில் வழிபடப்படுபவர்கள். பார்வதியின் பெயர்களில் சைலபுத்ரி ஒன்றாகும், இதன் பொருள் "மலைகளின் மகள்". சிவனை அடைவதற்கு கடுமையாக வணங்கி பிரம்மச்சாரினி என்ற பெயரைப் பெற்றார். சந்திரகாந்தா என்றால் சிவனைப் போலவே தலையில் சந்திரனைத் தாங்கியவர் என்று பொருள். பிரம்மந்தா அல்லது பிரபஞ்சம் அனைத்தையும் கொண்டவர் குஷ்மந்தா என்று அழைக்கப்படுகிறார். ஸ்கந்தரின் தாயாக இருந்ததால், ஸ்கந்தமாதா என்ற பெயரைக் பெற்றார். மகரிஷி கத்யாயனாவின் மகள் என்பதால் அவருக்கு காத்யாயினி என்ற பெயரைக் கொடுத்தார். அவருடைய அழகான தோற்றத்திற்காக மஹாகௌரி என்ற பெயர் கொடுக்கப்பட்டது. இதேப்போல், சித்திதாத்ரி மற்றும் காளராத்திரி போன்ற பெயர்கள் அவரது பல்வேறு வடிவங்களுக்காகவும், சிந்திகளை வழங்கி, துன்பங்களை தீர்க்கக்கூடியவர் என விவரிக்கின்றன.

சாமுண்டி யார்?

சாமுண்டி யார்?

நாம் மேலே பார்த்தபடி, அம்பிகையானவர் பிரதான தெய்வம் மற்றும் துர்கை கூட அம்பிகையின் ஒரு வடிவம் தான். சண்டிகா மற்றும் மஹா காளியும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான். சாந்தா மற்றும் முண்டா என்ற அசுரர்களைக் அழித்ததன் காரணமாக சாமுண்டி என்ற பெயர் வந்தது. மார்க்கண்டேய புராணத்தைப் பொறுத்தவரை, அம்பிகைவின் மற்றொரு வடிவமான மகாமயா, கைதாபா என்றும் அழைக்கப்படுகிறார். கைதாபா என்ற அசுரனைக் கொன்றதற்காக அவருக்கு இந்த பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது.

இவை அனைத்தும் ஒன்றல்ல

இவை அனைத்தும் ஒன்றல்ல

இவை அனைத்தும் நிச்சயமாக ஒன்று இல்லை மற்றும் இந்துக்களின் தேவி புராணம் இதுப்போன்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நவராத்திரியின் போது வணங்கப்படும் ஆதி சக்திக்கு இன்னும் சில பெயர்களும் உண்டு. அவை: காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, சின்னமாஸ்தா, திரிபுரபைர்வி, துமாவதி, பாக்லமுகி, மாதங்கி மற்றும் கமலா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri 2020: Differences Between Amba, Kali And Durga In Tamil

Navratri 2020: Did you know the difference between amba, kali and durga in tamil? Read on...
Desktop Bottom Promotion