Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் அறிவுரை கூறியே கழுத்தறுப்பாங்களாம்... இவங்ககிட்ட உஷாராவே இருங்க...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் மற்றவர்கள் தங்களின் சொல்பேச்சை கேட்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஒருவர் கூறும் செய்தி எவ்வளவு முக்கியமானது என்பது முக்கியமல்ல, ஆனால் அது அறிவுறையாக கூறப்படும் போது அதனை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதில்லை. சிலர் அறிவுரை என்பதையும் தாண்டி தங்களின் சிந்தனைகளை மற்றவர்கள் மீது திணிப்பாக்கள். இவர்களை பிரசங்கம் செய்பவர்கள் என்று கூறுவார்கள். இவ்வாறு அறிவுரை கூறுபவர்கள் தங்களை உயர்ந்தவர்களாக எண்ணிக் கொள்வார்கள்.

திறந்த மற்றும் நேர்மையான உரையாடலைக் கொண்டிருப்பது பெரும்பாலும் ஒருவரிடம் பேசுவதை விட சிறப்பாக பலன்களை வழங்கும். இவர்கள் எல்லோரும் தாங்கள் சொல்வதை கடைபிடிக்க வேண்டும் என்றும் நினைப்பார்கள். இவ்வாறு இருப்பது மோசமான ஒன்றல்ல ஆனால் மற்றவர்கள் தங்களின் சொல்பேச்சை கேட்க வேண்டும் என்று நினைப்பார்கள் அவ்வளவுதான்.ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் இந்த குணத்தை கொண்டிருப்பார்கள். அவர்கள் யார் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் வசீகரிக்கும் பேச்சாளர்கள் ஆவார்கள், எனவே அவர்களின் நோக்கத்திற்கு மற்றவர்களின் ஆதரவை எப்படி பெறவேண்டும் என்று இவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் சிலசமயம் தங்களின் நோக்கத்திற்காக தங்களது எல்லைகளை விட்டு இவர்கள் கீழே இறங்கி வந்து விடுவார்கள். மற்றவர்கள் அவர்களின் பிரச்சினைகளை தானாக பார்த்து கொள்வதற்கு அனுமதிப்பதற்கு பதிலாக இவர்கள் தங்களின் கருத்துக்களை அவர்கள் மேல் திணித்து அவர்கள் நினைப்பதற்கு நேர்மாறாக அவர்களை செய்ய வைப்பார்கள். தங்களின் கருத்துக்களையும், அறிவுரைகளையும் மற்றவர்கள் கேட்க வேண்டும் அதன்படிதான் நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சிலசமயம் தங்களை மிகவும் உயர்ந்தவர்களாக எண்ணிக்கொள்வார்கள். இந்த அணுகுமுறையால் அவர்கள் உங்கள் விஷயங்ளில் தலையிடுவார்கள். அவர்களின் உயர்ந்தவர் என்ற நினைப்பு இவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. உங்களின் வார்த்தைகள் அவர்களுக்கு உபயோகமாக இல்லையெனில் நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள போவதில்லை. இவர்களின் அணுகுமுறையை கொஞ்சம் மென்மையாக்கிக் கொண்டால் இவர்களின் பேச்சை மற்றவர்கள் கேட்பதற்கு சிறிது வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசிக்காரர்கள் தாங்கள் நம்பும் ஒன்றை மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுவதுடன் அவர்களும் அதனை நம்பவேண்டும் என்று கூறுவார்கள். ஒருவரை எவ்வளவுதான் மற்றவர்கள் பின்பற்றினாலும் அவர்கள் கூறுவதை அனைத்தும் தானும் நம்ப வேண்டுமென்ற அவசியமில்லை. இவ்வாறு மற்றவர்களின் மீது தனது கருத்தை திணிப்பது அவர்களின் மீது அனைவர்க்கும் வெறுப்பை ஏற்படுத்தும். மகர ராசிக்காரர்கள் மற்றவர்களின் மீதி தங்கள் கருத்தைத் திணிக்கும் அவர்களுக்கான மதிப்பை இழப்பார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ஆழமான சிந்தனை கொண்டவர்களாகவும், தத்துவரீதியாக பேசக்கூடியயவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அனைத்து தருணங்களிலும் இவர்களின் கருத்துக்களை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் இவர்கள் தங்களின் கருத்துக்களை அனைவரும் ஒப்புக்கொள்ளும் வரையில் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்களாக நான் ஒப்புக்கொள்கிறேன் என்றும் கூறும் வரை இவர்கள் அவர்களை விடமாட்டார்கள். இவர்கள் சொல்வதை மற்றவர்கள் கவனிப்பார்கள் ஆனால் அதனை புரிந்து ஒப்புக்கொள்வதா? இல்லையா? என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

துலாம்
சரியா அல்லது தவறா என்று முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் துலாம் ராசிக்காரர்கள் பிரசங்கம் செய்பவர்களாக நடந்து கொள்வார்கள். இவர்கள் தங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் கட்டாயப்படுத்திக் கூறுவார்கள். அதற்குப்பின் தனது கருத்தை முடிக்க இவர்கள் நீண்ட நேரம் எடுத்துக்கொள்வார்கள். இவர்களின் கருத்துக்கள் மற்றவர்களுக்கு போரடிப்பதாக இருப்பதை பற்றி இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். இவர்கள் தங்களின் கருத்துக்களை மற்றவர்கள் கேட்க விரும்பினால் சொல்வதை கொஞ்சம் சுவாரஸ்யமாக சொல்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications











