For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாதாள பச்சை நிற குழந்தைகள் முதல் ஜனாதிபதி மரணத்தை வீடியோ எடுத்த பெண் வரை உலகின் தீர்க்கமுடியாத மர்மங்கள்...!

|

நமது உலகம் நம்பமுடியாத பல ஆச்சரியங்களும், மர்மங்களும் நிறைந்தது. இந்த மர்மங்களை தேடிச்சென்றால் நாம் முடிவிலா ஒரு பயணத்தில் மாட்டிக்கொள்வோம். மர்மங்கள் மீது அனைவருக்குமே ஒரு இனம் புரியாத ஆர்வம் இருக்கும். உங்களுக்கு துப்பறியும் திறன், மர்மத்தின் மீது ஆர்வம் மற்றும் தெரியாதவர்களைக் கண்காணிப்பதில் விருப்பம் இருந்தால் உங்கள் ஆர்வத்தை பலமடங்கு அதிகரிக்கும் தகவல்களை தெரிந்து கொள்ள தயாராகுங்கள்.

பல தனிநபர்கள் வரலாற்றில் தங்கள் ரகசிய நடவடிக்கைகளால் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்களைப் பற்றிய உண்மைகளை தற்போது தெரிந்து கொள்வது கடினம், குறைந்தபட்சம் அவர்கள் யார், அவர்கள் செய்த மர்மமான செயல்கள் என்னவென்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தி மேன் வித் தி மாஸ்க்

தி மேன் வித் தி மாஸ்க்

1703 இல், லூயிஸ் XIV ஒரு மனிதனை பாஸ்டில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். எந்நேரமும் முகமூடியால் மூடியிருந்த அவரது முகத்தை யாரும் பார்க்கவில்லை என்பதுதான் விசித்திரம். தான் சந்திக்க முயன்ற ஆளுநரைத் தவிர மற்றவர்கள் தன்னைப் பார்க்கவோ, நெருங்கிப் பழகவோ அவரே அனுமதிக்கவில்லை. அவரது மரணத்திற்குப் பிறகு அவரது உடைமைகள் அனைத்தும் எரிக்கப்பட்டன, ஆனாலும் கடைசிவரை அவரது முகத்தை யாரும் பார்க்க முடியவில்லை.

கில் பெரெஸ்

கில் பெரெஸ்

மெக்சிகோவில், 1593 ஆம் ஆண்டு, கில் பெரெஸ் என்ற மனிதனின் எதிர்காலத்தைக் கணித்தார், அவர் எதிர்கால விஷயங்களைப் பார்ப்பதில் வல்லமை படைத்தவர். அவர் சென்ற இடங்களைப் பற்றிய கதைகளை அவர் மெக்சிகன்களிடம் கூறினார், மேலும் அவர் நாடுகளுக்கிடையே நொடிகளில் பயணிக்க முடியும் என்று மக்கள் நம்பினர். அவர் பிலிப்பைன்ஸ் மன்னரின் மரணம் பற்றி அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே நகர மக்களுக்கு சரியாகக் கூறினார்.

கவுண்ட் செயின்ட் ஜெர்மைன்

கவுண்ட் செயின்ட் ஜெர்மைன்

செயின்ட் ஜெர்மைன் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்த ஒரு மனிதர். அவர் ஒரு இசைக்கலைஞர், ஓவியர், விஞ்ஞானி மற்றும் ஒரு மர்மமான மனிதர். அவர் உலகம் முழுக்க பயணம் செய்தார் அவர் ஸ்பானியர், போலந்துக்காரர் மற்றும் ஆங்கிலேயர் என்று கருதப்பட்டார் மற்றும் அனைவராலும் ஜென்டில்மேன் என்று அழைக்கப்பட்டார். இருப்பினும், அவரது தோற்றம் மற்றும் அவர் ஏன் ஜென்டில்மேன் என்று அழைக்கப்பட்டார் என்பது யாருக்கும் தெரியாது. செல்வந்த பெண்ணை மணந்தாலும் அவர் செட்டில் ஆகவில்லை. செயின்ட் ஜெர்மைன் அவளது நகைகளை எடுத்துக்கொண்டு கான்ஸ்டான்டினோப்பிளுக்கு ஓடிவிட்டார், அன்றிலிருந்து அவர் என்னவானார் என்று யாருக்கும் தெரியவில்லை.

டான் கூப்பர்

டான் கூப்பர்

டான் கூப்பர், டி.பி. கூப்பர் தனது தொழில்முறை பயிற்சியை தனது சொந்த நலனுக்காக பயன்படுத்திய மர்மமான மனிதர். அவர் சுமார் $ 200.000 பணயத்தொகையைப் பெற்றபோது, அவர் விமானத்தில் இருந்து பாராசூட்டைப் பயன்படுத்தி குதித்தார். ஆனால் போலீஸாரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை, இன்றுவரை அவர் விமானத்தில் இருந்து குதித்து எங்கு சென்றார் என்று கண்டறிய முடியவில்லை.

காஸ்பர் ஹவுசர்

காஸ்பர் ஹவுசர்

குழந்தையாக இருக்கும்போது, காஸ்பர் ஹவுசர் இரவும் பகலும் எந்த வெளிச்சமும் வராத ஒரு அறையில் காவலில் வைக்கப்பட்டார். அவரால் யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இளவரசர் பேடனின் உறவினர் என்பதால் சிறுவன் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அவர் முன்பின் தெரியாத ஒருவரால் காப்பாற்றப்பட்டார். இறுதிவரை அவரை காப்பாற்றியது யார், கடத்தியது யார் என்று கண்டறியப்படவில்லை.

ஃபுல்கனெல்லி

ஃபுல்கனெல்லி

ரசவாதி மற்றும் எழுத்தாளர் ஃபுல்கனெல்லி என்று பொதுமக்களால் அறியப்பட்ட இவர் முற்றிலும் மர்மமான பாத்திரம். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் அணு ஆயுதங்களுக்கு அடித்தளம் அமைத்த குழுவில் இவரும் இருந்ததாக கூறப்படுகிறது. இவரைப் பற்றிய மிகவும் விசித்திரமான விஷயம், அவர் வயதாகும்போது, அவர் நாளுக்கு நாள் இளமையாக மாறினார்.

பாபுஷ்கா பெண்மணி

பாபுஷ்கா பெண்மணி

1963 ஆம் ஆண்டில் ஜான் கென்னடி படுகொலை செய்யப்பட்டார், இது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட உண்மை. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து ஒளிபரப்பான படத்தில் புதிய தகவல் ஒன்று கிடைத்தது. அதில், கென்னடியின் காரில் இருந்து வெகு தொலைவில் ரஷ்ய பாபுஷ்காவை ஒத்த தலையை மூடிய ஒரு பெண் கேமராவை வைத்திருந்தார். எல்லோரும் வெளியேறிய பிறகும் அவர் சம்பவத்தை தொடர்ந்து படம்பிடித்தாள். அவர் யார் என்று போலீசாரால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

பச்சை குழந்தைகள்

பச்சை குழந்தைகள்

12 ஆம் நூற்றாண்டில் வூல்பிட்டில் பச்சை தோலுடன் இரண்டு குழந்தைகள் திடீரென காணப்பட்டனர். அவர்கள் தெரியாத மொழி பேசினர் மற்றும் பீன்ஸ் மட்டும் சாப்பிடவில்லை. விரைவில், அவர்கள் ஆங்கில மொழியைக் கற்று மற்ற உணவுகளை உண்ணத் தொடங்கினர். அவர்களின் தோலின் பச்சை நிறமும் காலப்போக்கில் மறைந்தது. சிறுவன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டான், ஆனால் அவர்கள் பூமிக்கடியில் சூரியனே இல்லாத செயின்ட் மார்ட்டின்ஸ் லேண்ட் என்ற இடத்திலிருந்து வந்ததாக சிறுமி கூறினார். அவர்கள் யார் என்பது இன்றுவரை தீர்க்கப்படாத புதிராகவே உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Mysterious People in the History in Tamil

Check out the most mysterious people in the history.
Desktop Bottom Promotion