இந்த 5 ராசிக்காரங்க எதுக்கெடுத்தாலும் எமோஷனல் ஆவாங்களாம்... இவங்க கூட வாழுறது ரொம்ப கஷ்டமாம்!

மேஷ ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். ஆனால், கவலையற்றவர்கள். மேலும் அவர்கள் தங்களைத் திருப்திப்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்

இயற்கையிலே இவ்வுலகில் வாழும் எல்லா மக்களும் ஒரே மாதிரியானவர்கள் இல்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியான விருப்பு, வெறுப்புகள் மற்றும் குணநலன்கள் இருக்கும். அந்த வகையில், சிலர் பொறுமையானவர்களாகவும், கோபமானவர்களாகவும், உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். சிலர் தங்கள் உணர்ச்சிகளை வெளியில் காட்டுகிறார்கள், சிலர் அதை தங்களுக்குள்ளே வைத்துக்கொள்கிறார்கள். இத்தகைய நபர்கள் ஒரு சிறிய விஷயத்திற்கு கூட அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். எந்த இன்ப துன்பங்களையும் அவர்களால் எளிதில் கையாள முடியாது.

Most Emotional Zodiac Signs in tamil

ஏனெனில், அவர்கள் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுபவர்கள் மற்றும் அவர்களின் முடிவெடுக்கும் உணர்திறனைப் பொறுத்து நீங்கள் அவர்களை உணர்ச்சிகரமான முட்டாள்கள் என்று கூட அழைக்கலாம். இவர்களை நீங்கள் அடையாளம் காண ஜோதிடம் உங்களுக்கு உதவும். பனிரெண்டு இராசி அறிகுறிகளின் அடிப்படையில் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய ராசிகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் சிறிய விஷயத்திற்கு கூட அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறார்கள். சிலர் அதை பலவீனமாக பார்க்கிறார்கள், மற்றவர்கள் அதை பலமாக கருதுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் அவர்களின் உணர்ச்சிகளைக் கையாளுவதற்கு மிக நீண்ட நேரம் எடுக்கும். அவர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்கள் மற்றும் பெரும்பாலும் அழும் குழந்தைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஏனெனில், அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார்கள்.

மீனம்

மீனம்

மீனம் ஒவ்வொரு உணர்ச்சியையும் உணர்கிறது. உணர்ச்சிகள் மூலம் இணைப்புகளை உருவாக்குவதில் இந்த ராசிக்காரர்கள் சிறந்தவர்கள். அவர்கள் மிகவும் திறமையானவர்கள், ஆனால் சில சமயங்களில் மனநோயாளிகள் என்றும் அழைக்கப்படலாம். எதிர்மறையான விஷயம் என்னவென்றால், அவர்கள் மனச்சோர்வால் எளிதில் பாதிக்கப்படலாம். ஏனெனில், எந்த உணர்ச்சிகரமான விஷயத்தையும் அவர்களால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதனால், அவர்களால் விஷயங்களை தனியாகக் கையாள முடியாது. அவர்கள் எந்த விஷயத்தையும் எளிதில் மன்னிக்கவும் மறக்கவும் முடியும். ஆனால், அதே நேரத்தில் அவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமான நபர்களாக இருப்பார்கள். மேலும், அவர்கள் ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளுடன் தொடர்புடையவர்கள். இந்த ராசிக்காரர்கள் தீவிர உணர்ச்சியாளராகவும், மிகவும் விசுவாசமானவராகவும் மற்றும் பாதுகாப்பான நபராகவும் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் மீனம் & கடகம் போலல்லாமல், அவர்களின் உணர்ச்சிகளில் சற்று தனிப்பட்டவர்க்ளாக இருப்பார்கள். அவர்கள் எதிர்மறை உணர்ச்சிகளை உணர்ந்தால், எளிதில் சுய அழிவை அடையலாம்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். ஆனால், கவலையற்றவர்கள். மேலும் அவர்கள் தங்களைத் திருப்திப்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்கள் மிகவும் கணிக்க முடியாதவர்களாகவும், வித்தியாசமானவர்களாகவும் இருக்கலாம். இந்த இராசி அடையாளம் அதன் உணர்வுகளை நிறைவேற்றுவதற்கும், அதன் உணர்ச்சிகளைப் பயன்படுத்துவதற்கும் அறியப்படுகிறது.

துலாம்

துலாம்

முகத்திற்கு நேராக கேட்டால், துலாம் ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள் என்று எப்போதும் சொல்வார்கள். ஆனால், அவர்கள் சமநிலையை அடைய முடியாமல் பயந்துதான் இருக்கிறார்கள் என்பதே உண்மை. அவர்களின் ஈகோ மிகப்பெரியதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். ஆனால் அவர்கள் அதை தற்காப்பு மற்றும் புண்படுத்தும் கருத்துக்களால் மறைக்க முயற்சிக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, December 16, 2022, 9:39 [IST]
Desktop Bottom Promotion