Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
புதன் பெயர்ச்சியால் உருவாகும் சமசப்தம யோகம்: இந்த ராசிக்காரங்க நிறைய பிரச்சனையை சந்திக்கப் போறாங்க..
புதன் கன்னி ராசிக்கு செல்லும் போது குருவுக்கு நேர் எதிராக இருப்பதால், சமசப்தம யோகம் உருவாகிறது. புதன் மற்றும் குரு ஆகிய சுப கிரகங்களினால் உருவாகும் யோகத்தால், அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கம் இருக்கும்.
நவகிரகங்களில் புதன் புத்திக்காரகன். ஒருவரது பேச்சில் புதனின் தாக்கம் அதிகம் உள்ளது. அதனால் தான் ஜோதிடத்தில் புதனுக்கு தனிச்சிறப்பு உண்டு. தற்போது புதன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 ஆகஸ்ட் 21 ஆம் தேதி கன்னி ராசிக்கு செல்கிறார் கன்னி ராசியின் அதிபதி புதன். சொந்த ராசிக்கே புதன் சென்றிருப்பது நல்ல பலனை வழங்குவதாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம்.

முக்கியமாக புதன் கன்னி ராசிக்கு செல்லும் போது குருவுக்கு நேர் எதிராக இருப்பதால், சமசப்தம யோகம் உருவாகிறது. புதன் மற்றும் குரு ஆகிய சுப கிரகங்களினால் உருவாகும் யோகத்தால், சில ராசிக்காரர்கள் நல்ல பலனையும், சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளையும் சந்திக்க வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

நற்பலனைப் பெறும் ராசிகள்:
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத்தினருடனான உறவு வலுவாகும். பணியிடத்தில் நல்ல சாதகமான பலனைப் பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இக்காலத்தில் சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் தகவல் தொடர்பு திறன் மேம்பட்டு சிறப்பாக இருக்கும். இதனால் பணியிடத்தில் உங்களால் சிறப்பாக செயல்பட முடியும். இக்காலத்தில் செழிப்பாக இருப்பீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தெளிவாகவும், திறம்படவும் தொடர்பு கொள்வார்கள். இதனால் நல்ல பலனையும் பெறுவார்கள். வங்கியில் இருப்பவர்கள் புதுமையான யோசனைகளால் வெற்றி பெறுவார்கள். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவும் இக்காலத்தில் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் பணிபுரிபவர்கள் எதை செய்தாலும் அதில் வெற்றி பெறுவார்கள். முக்கியமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மோசமான பலனைப் பெறும் ராசிகள்:
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் சிறப்பாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மோசமான முடிவுகளைப் பெற நேரிடும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கலாம். இக்காலத்தில் வருமானத்தின் கணிசமான பகுதியை புதிய தொழில்நுட்பத்தில் செலவிடுவீர்கள். உங்களின் ஆரோக்கியத்திலும் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கலாம். உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இக்காலம் சவாலாக இருக்கும். ஏனெனில் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. மனரீதியாக கவலையுடனும் அமைதியற்றதாகவும் உணர்வீர்கள். தோல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications
