மகரம் செல்லும் புதனால் டிசம்பர் கடைசி நாட்களில் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...

2022 ஆம் ஆண்டின் டிசம்பர் 28 ஆம் தேதி அதிகாலை 04.05 மணிக்கு மகர ராசிக்கு செல்லவுள்ளார். மகரம் சனி ஆளும் ராசி. மேலும் புதனும், சனியும் நட்பு கிரகங்களாகும்.

Mercury Transit In Capricorn On 28 December 2022: Effects On Zodiac Signs In Tamil

ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேலும் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் தற்போது குரு ஆளும் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் 28 ஆம் தேதி அதிகாலை 04.05 மணிக்கு மகர ராசிக்கு செல்லவுள்ளார். மகரம் சனி ஆளும் ராசி. மேலும் புதனும், சனியும் நட்பு கிரகங்களாகும். புதன் மகர ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இப்போது மகர ராசிக்கு புதன் செல்வதால், ஆண்டின் கடைசி நாட்கள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது தொழில், பணியிடம் மற்றும் நற்பெயர் ஆகியவற்றின் வீடாகும். இதனால் பணியிடத்தில் நற்பலன்கள் கிடைக்கும். உங்களின் தகவல் தொடர்பு திறன் சிறப்பாக இருக்கும். ஊடகம், நிதித்துறை மற்றும் வங்கி ஆகிய துறைகளில் பணிபுரிபவர்களுக்கு அற்புதமாக இருக்கும். வேலை காரணமாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவதில் சிறந்து விளங்குவீர்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் இளைய சகோதரர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். குறுகிய பயணத்திற்கு வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்காது. தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சரும பிரச்சனைகள் மற்றும் நரம்பு பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. திடீர் செலவுகளால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். இக்காலத்தில் பேசும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்

கடகம்

கடக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் நல்ல ஆதாயத்தைப் பெறுவார்கள். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது எதிரிகள், ஆரோக்கியம் மற்றும் போட்டியின் வீடாகும். இதனால் நிதி விஷயங்களில் சிரமங்களை சந்திக்க நேரிடும். எதிரிகள் உங்களை வீழ்த்த முயற்சிப்பார்கள். இக்காலம் தொழில் வாழ்க்கைக்கு சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளை எழுதியவர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையாக இருங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது கல்வி, அன்பு, உறவுகள் மற்றும் குழந்தைகளின் வீடாகும். இதனால் இக்காலம் மாணவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது தாய், இல்லற வாழ்க்கை, வீடு, வாகனம் மற்றும் சொத்துக்களின் வீடாகும். இதனால் இக்காலத்தில் துலாம் ராசிக்காரர்களின் வீட்டில் சந்தோஷம் நிரம்பியிருக்கும். வீட்டு வசதிக்காக அதிக பணத்தை செலவழிப்பீர்கள். புதிய தொழில் தொடங்க இது சிறந்த நேரம். குடும்ப தொழிலில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டமும், கடின உழைப்பும் இவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வர உதவி புரியும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இளைய சகோதரர்களுடனான உறவு மேம்படும். குறுகிய பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. எழுத்து, ஆராய்ச்சி போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். முக்கியமாக தந்தையுடனான உறவு மேம்படும்

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் தகவல் தொடர்பு திறன் சிறப்பாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களின் வியாபாரம் வளரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சருமம் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனைகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்

மகரம்

மகர ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் மகர ராசிக்காரர்கள் இக்காலத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். ஆசிரியர், ஆலோசகர், அரசியல்வாதிகள் போன்ற துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் மற்றும் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். தந்தையின் ஆதரவால் நல்ல ஆதாயம் அடைவீர்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வெளிநாட்டில் படிக்க விரும்புவோருக்கு பயனுள்ளதாக இருக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மேலும் உங்கள் செலவுகளும் சற்று அதிகரிக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது நிதி ஆதாயங்கள், ஆசை, மூத்த உடன்பிறப்புகள் மற்றும் தந்தைவழி மாமன் ஆகியவற்றின் வீடாகும். எனவே இக்காலத்தில் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். பொருள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பணியிடத்தில் புகழ் அடைவீர்கள். செல்வம் அதிகரிக்கும். சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சூப்பராக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, December 22, 2022, 16:30 [IST]
Desktop Bottom Promotion