Latest Updates
-
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்!
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் ஏப்ரல் 25 வரை இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமான காலமா இருக்கப் போகுது...
மேஷ ராசியில் புதன் நுழைவது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும், அதில் சில ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் முடிக்கப்படும்.
நவகிரகங்களின் புத்தி, பேச்சு மற்றும் வணிகத்தின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் 2022 ஏப்ரல் 08 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறினார். பின் இந்த மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு 2022 ஏப்ரல் 25 ஆம் தேதி செல்லவிருக்கிறார். ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அவர் எந்த ஒரு விஷயத்தையும் புத்திசாலித்தனமாக திறம்படி பேசி கையாளுவார். அதுவே மோசமான நிலையில் இருந்தால் எதையும் சொதப்புவார்.

மேஷ ராசியில் புதன் நுழைவது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும், அதில் சில ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் முடிக்கப்படும். இப்போது புதன் மேஷ ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதைக் காண்போம்.

மிதுனம்
மேஷ ராசிக்கு புதன் செல்வதால் மிதுன ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் இக்காலத்தில் லாபத்தைப் பெறுவார்கள். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 25 வரை, சில பெரிய பொறுப்புக்களைப் பெறுவார்கள்.

கடகம்
இந்த புதன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வழங்கப் போகிறது. பணியிடத்தில், உங்கள் வேலையால் மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள். இக்காலத்தில் புதிய யோசனையால் வெற்றியைக் காண்பீர்கள். உங்களின் நிதி நிலைமை வலுவாக இருக்கும்.

தனுசு
மேஷம் சென்றுள்ள புதனால் தனுசு ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் நற்செய்திகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குழந்தைகளால் நற்செய்தி கிடைக்கும். காதல் வாழ்க்கையில் சற்று நிதானமாக இருங்கள். உங்கள் கோபத்தை இக்காலத்தில் கட்டுப்படுத்துங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள். ஏப்ரல் 08 முதல் ஏப்ரல் 25 வரையிலான காலம் மிகவும் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் நீங்கள் சொத்துக்களில் முதலீடு செய்யக்கூடும். பணியிடத்தில் நல்ல பண ஆதாயத்தைப் பெறுவீர்கள். உங்களின் வருமானம் அதிகரிக்கும். இருப்பினும், இக்காலகட்டத்தில் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி நல்ல அதிர்ஷ்டமானதாக இருக்கும். நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் ஒரு பெரிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். இதன் மூலம் லாபம் கிடைக்கும். உங்களின் கௌரவம் மேம்படும். முக்கியமாக இக்காலத்தில் கடனில் இருந்து விடுபடுவீர்கள்.



Click it and Unblock the Notifications
