Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
வக்ர செவ்வாயால் உருவான விபரீத ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
தற்போது செவ்வாய் வக்ர நிலையில் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். அதனால் எதிர் ராஜயோகமான விபரீத ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றிக் கொண்டிருக்கும். அதில் சில கிரகங்கள் நேர்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, சில பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அந்த வகையில் தற்போது செவ்வாய் வக்ர நிலையில் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். அதனால் எதிர் ராஜயோகமான விபரீத ராஜயோகம் உருவாகிறது.

இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் பணம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது வக்ர செவ்வாயால் உருவான விபரீத ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

விருச்சிகம்
விபரீத ராஜயோகமானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏராளமான நற்பலனை வழங்கும். குறிப்பாக இக்காலத்தில் எதிரிகளை வெற்றி பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்த செய்யும் எந்த முதலீடும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சில சரிவுகளைக் காணலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கும் விபரீத ராஜயோகம் சாதகமான பலன்களைத் தரும். ஏனெனில் 9 ஆவது வீட்டில் இந்த யோகம் உருவாகியுள்ளது. இந்த வீடு அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்தின் வீடாகும். எனவே இந்த யோகத்தால் அனைத்து விஷயங்களிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். அதே வேளையில் வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. மேலும் இந்த யோக காலத்தில் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்புக்கள் அமையும்.

மேஷம்
விபரீத ராஜயோக காலம் மேஷ ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். ஏஎனனில் இந்த யோகம் 3 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இது தைரியம், வீரம் மற்றும் உடன்பிறப்புக்களின் வீடாகும். ஆகவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரித்து இருக்கும். அனைத்து வகையான இன்பங்களையும் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் சகோதர சகோதரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications