Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது?
திருமணத்திற்கு இந்த பொருத்தங்கள் ரொம்ப அவசியம் - பரிகாரமும் இருக்கு
இருமனம் இணைவது திருமணம். காதல் திருமணம் என்றால் இரு மனங்கள் மட்டும் இணைவது போதுமானது. பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணத்திற்கு பத்து பொருத்தமும் பார்க்க வேண்டியது அவசியம். அதோடு ஜாதகப்பொருத்த
திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது ஆண், பெண் ஜாதகத்தில் யோனி பொருத்தம் ரஜ்ஜுப் பொருத்தம் அவசியம் இருக்க வேண்டும்.மணமக்கள் தாம்பத்ய உறவில் திருப்திகரமாக இருப்பார்களா? என்பது யோனிப் பொருத்தம் மூலம் கணிக்கப்படுகிறது. கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை குறிப்பது யோனி பொருத்தம். இது முக்கியமான ஒன்றாகும். தாம்பத்ய உறவின் சுகம், திருப்தி நிலை இவற்றை தீர்மானிக்கும் அளவுகோள் எனலாம். ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறை இது. நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆண் பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது.

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது பிறந்த நட்சத்திரங்களைக் கொண்டு ஆண் பெண் இருவருக்கும் பத்து பொருத்தங்கள் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். சில பொருத்தங்கள் இல்லாவிட்டால் அந்த ஜாதகத்தினை இணைக்காமல் தவிர்த்து விடுவது நல்லது. பத்து பொருத்தமும் சரியாக பொருந்தி வந்திருந்தாலும் ஜாதக கட்டமும் சரியாக இருக்கிறதா என்று அவசியம் பார்க்க வேண்டும்.
பத்துப்பொருத்தங்களில் தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி,வசியம், ரஜ்ஜூ, வேதை ஆகியவைகளில் முக்கியமான பொருத்தங்கள் சரியாக அமையவேண்டும். மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு உண்டு. ஒன்று யோனிப்பொருத்தம் மற்றொன்று ரஜ்ஜுப் பொருத்தம். இந்த இரண்டில் எந்தப் பொருத்தம் ஒன்று இல்லை என்றாலும் திருமணம் செய்யக்கூடாது.

திருமணப்பொருத்தம்
தம்பதியர் இருவருமே ஆரோக்கியத்துடன வாழ தினப்பொருத்தம் அவசியம். அதே போல குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு, பாசம் எப்படி இருக்கும்? சயன, சுக,போக பாக்கியத்தை இருவரும் அனுபவிக்க கணப்பொருத்தம் இருக்க வேண்டும்.

தாம்பத்ய வாழ்க்கை
குடும்ப ஒற்றுமைக்காகவும், உறவினர்களிடையே எந்தவித கருத்து வேறுபாடும் இன்றி ஒற்றுமையாக இருப்பதற்கு ராசிப்பொருத்தம் இருக்க வேண்டும்.
தம்பதிகளிடையே உறவு மனைவிக்கிடையே உள்ள ஈர்ப்பு,அன்பு ஆகியவை குறித்து அறிவது வசியப் பொருத்தம் என அழைக்கப்படுகிறது.வசியப் பொருத்தம் சிறப்பாக இருக்கும் தம்பதிகளுக்கு இடையே தாம்பத்ய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

கணவன் மனைவி உறவு
மணமக்கள் தாம்பத்ய உறவில் திருப்திகரமாக இருப்பார்களா? என்பது யோனிப் பொருத்தம் மூலம் கணிக்கப்படுகிறது. கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை குறிப்பது யோனி பொருத்தம் முக்கியமானது. ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறை இது. நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆண் பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது. பகை மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது.

ரஜ்ஜுப்பொருத்தம்
ரஜ்ஜுப்பொருத்தம் கணவன் மனைவி நீண்ட காலம் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழும் பாக்கியத்தை தரக்கூடியது. அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் தலை முதல் பாதம் வரை நட்சத்திரங்களைக் கொண்டு கணிக்கின்றனர். ஆணும் பெண்ணும் ஒரே ரஜ்ஜுவில் வரக்கூடாது. அப்படி வந்தால் பாதிப்பு ஏற்படும். திருமணம் முடிந்து குழந்தை பேறு குறித்து கணிக்கப்படுவது மகேந்திரப் பொருத்தம் என அழைக்கப்படுகிறது. புத்திரபாக்கியத்திற்கு இந்த பொருத்தம் அவசியம்.

குடும்பம் களத்திரம்
பத்து பொருத்தம் பார்ப்பதோடு ஆண் பெண் ஜாதகத்தில் என்னென்ன சரியாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். குடும்ப ஸ்தானம் எனப்படும் 2ஆம் இடம் களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் இடம் வலிமையாக இருக்க வேண்டும். தம்பதியர் ஒற்றுமை, குடும்பம் சந்தோசமாக அமைய இவை முக்கியம்.
குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களின் சேர்க்கை, பார்வையும் சுபமானதாக இருக்க வேண்டும்.

பூர்வ புண்ணிய ஸ்தானம்
ஐந்தாம்பாவகம் எனப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானம் சரியாக இருக்க வேண்டும். அடுத்த சந்ததியை நிர்ணயம் செய்யப்போவது அந்த பாவகம்தான். அதேபோல ஆறாம்பாவம் எனப்படும் நோய் கடன் ஸ்தானம், 8ஆம் பாவகம் எனப்படும் ஆயுள், மாங்கல்ய ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும். பொருளாதார முன்னேற்றம், தம்பதியர் ஒற்றுமை திடீர் அதிர்ஷ்டம் பற்றி சொல்லும் இடங்கள். இதேபோல 12ஆம் பாவகம் வலிமை பெற வேண்டும். தம்பதியர் இடையே அந்தரங்க வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். சிலருக்கு பத்து பொருத்தம் இருக்கிறது என்று பார்த்து திருமணம் முடித்து வைத்தால் சிலரது வாழ்க்கை பிரிவில் முடிகிறது. ஜாதகப்பொருத்தமும் சரியாக அமைந்தும் பிரிவு ஏற்படக்காரணம் முன்வினைப் பயன் என்று கூறுவதைத் தவிர வேறொன்றும் இல்லை.



Click it and Unblock the Notifications