மார்ச் மாதம் இந்த 5 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்.. உங்க ராசிக்கு எப்படி?

மார்ச் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2022 ஆம் ஆண்டின் மூன்றாவது மாதமான மார்ச் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?

March 2022 Monthly Horoscope In Tamil

2022 ஆம் ஆண்டின் மூன்றாவது மாதத்தில் நுழைய உள்ளோம். கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் பலன்கள் வேறுபடும். அந்த வகையில் மார்ச் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2022 ஆம் ஆண்டின் மூன்றாவது மாதமான மார்ச் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் மார்ச் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என 2022 மார்ச் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இந்த மாதம் தொழிலைப் பொறுத்தவரை வெற்றிகரமாக இருப்பார்கள். இம்மாதத்தில் ஒவ்வொரு சவாலையும் திறம்பட எதிர்கொள்வார்கள். பணியிடத்தில் சிலர் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். ஆனால் அவர்களால் உங்களுக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது. இம்மாதத்தில் அபாயகரமான நிதி முதலீடுகளைத் தவிர்த்து, உங்கள் பட்ஜெட்டில் கவனம் செலுத்துங்கள். திருமணமானவர்கள் தங்கள் குடும்பத்தை விரிவுபடுத்த திட்டமிடலாம். அளவுக்கு அதிகமாக வேலை செய்வதைத் தவிர்த்திடுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இம்மாதம் நீங்கள் நீண்ட பயணத்தை மேற்கொள்ளலாம். பணியிடத்தில் சாதகமற்ற சூழ்நிலை உருவாகலாம். இது இடமாற்றம் அல்லது பணி மாற்றத்திற்கு வழிவகுக்கும். காதல் வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். உங்கள் அன்பானவருடனான உறவு சற்று மோசமாகலாம். உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இம்மாதம் நிதி நிலை சீராக இருக்கும் மற்றும் மனதளவில் நன்கு உணர்வீர்கள். ஆனால் அவசரமாக முதலீடு செய்வதைத் தவிர்த்து, நீண்ட கால முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள். பணியில் சில புதிய சவால்களை சந்திக்கலாம் மற்றும் கூடுதல் வேலைகளும் உங்களுக்கு கொடுக்கப்படலாம். சிலர் வழக்குகளில் சிக்கலாம் என்பதால் முன்கூட்டியே திட்டமிடுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அநாகரீகராக நடப்பதைத் தவிர்த்திடுங்கள்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! பணியிடத்தில் அமைதியாக இருங்கள். தேவையில்லாமல் யாருடனும் பேசாதீர்கள். வியாபாரிகள் இம்மாதத்தில் புதிதாக எதையும் தொடங்குவதைத் தவிர்க்கவும். யாரிடமும் உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள். இல்லாவிட்டால் அது மன கசப்புக்கு வழிவகுக்கும். திருமணமாகாதவர்கள் காதல் வாழ்க்கையில் ஒரு புதிய தீப்பொறியைப் பெறுவார்கள், இது ஒரு புதிய உணர்வைத் தரும். வயிற்றுப் பிரச்சினைகளைத் தவிர்ப்பது முக்கியம். இம்மாதத்தில் வயிற்றுப் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இம்மாதம் நீங்கள் போட்டி நிறைந்த சூழலில் இருப்பீர்கள். விரும்பியதைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் தொழில் ரீதியாக இது ஒரு நல்ல விஷயமாகும். ஏனெனில் கடின உழைப்பால் நிறுவனத்தில் பதவி உயர்வு பெறலாம். சட்ட விஷயங்களில் ஈடுபடுபவர்கள் கூடுதல் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இம்மாதம் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். இதனால் பணத் தேவை அதிகமாகலாம். எனவே தேவையில்லாமல் வெளியே சுற்ற திட்டமிடாதீர்கள். இருப்பினும், இம்மாதம் நிதி வளர்ச்சிக்கு நல்லது. ஏனென்றால் இம்மாதத்தில் பணியிடத்தில் சம்பள உயர்வைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையைக் கையாளும் போது அதிகம் கோபப்படாமல் பொறுமையாக இருங்கள். ஆரோக்கியமாக இருக்க தினமும் உடற்பயிற்சியை செய்யுங்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த மாதம் உங்களுக்கு மிகவும் பிஸியான மாதமாக இருக்கும். பணியிடத்தில் அதிக பணிச்சுமையை பெற வேண்டியிருக்கும். இதனால் குடும்பத்தினருடன் ஏற்கனவே போட்டப்பட்டுள்ள திட்டங்களை அழிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளால் போதுமான வெகுமதி கிடைக்கும். சொத்து வாங்க அல்லது புதிய வீட்டிற்கு மாறுவதற்கு சாதகமான மாதம். உங்கள் தாயாரின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் நோய்களால் அவதிப்படலாம். கவனமாக இருங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இம்மாதத்தில் மிகவும் ஆற்றல் நிறைந்திருப்பீர்கள். இது உங்கள் இலக்குகளை அடைய ஊக்குவிக்கும். தொழில் காரணமாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இது உங்களுக்கு நற்பலன்களை அளிக்கும். கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் இப்போது சாதகமானதாக இருக்க ஆரம்பிக்கும். உங்களின் இளைய சகோதர்கள் உங்களுக்கு அதிர்ஷ்டசாலிகளாக இருப்பர். ஆரோக்கியத்தைப் பொறுத்தரை, ஏற்கனவே அவதிப்படும் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இம்மாதம் உங்கள் போட்டியாளர்கள் உங்கள் பெயரைக் கெடுக்க முயற்சிப்பதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆவணங்களில் கையொப்பமிடும்போது கவனமாக இருங்கள். யாரையும் துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்க்கவும் மற்றும் அலுவலக வதந்திகளில் பங்கேற்காதீர்கள். மொத்தத்தில், அலுவலகம் சென்றால் உங்கள் வேலையை மட்டும் செய்யுங்கள். தனிப்பட்ட வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். ஆனால் உங்கள் வாழ்க்கைத் துணை சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! பண விஷயத்தில் சரியாக இருப்பீர்கள். எந்த ஒரு செயலையும் முழு ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள், திறம்பட முடிவெடுப்பீர்கள். இருப்பினும், தேவையற்ற ஆக்ரோஷமான குணம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனையை தூண்டலாம். எனவே கவனமாக இருங்கள். புதிய சொத்து வாங்கவோ அல்லது வீட்டு வேலைகளில் செலவு செய்யவோ இது நல்ல மாதம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க காரமான மற்றும் அமில உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்கவும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு சிறு காயங்கள் ஏற்படலாம். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. சில எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, இதனால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்படலாம். அமைதியாக இருங்கள் உங்களில் சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். இடமாற்றம் அல்லது வெளியூர் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு அது வெற்றிகரமாக நடக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இம்மாதம் உங்கள் செல்வ வளம் பெருகும். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறலாம். இது உங்களுக்கு அதிக முடிவெடுக்கும் சக்தியையும் அதிகாரத்தையும் கொடுக்கும். வியாபாரிகளுக்கு புதிய நிதி ஒப்பந்தம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு இம்மாதத்தில் சரியான வாழ்க்கைத் துணை கிடைக்கும். குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். சிலர் தங்கள் குடும்பத்தில் வளர்ச்சியைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion