For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செவ்வாய் விருச்சிக ராசிக்கு செல்வதால் சற்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

நவகிரகங்களில் செவ்வாய் துலாம் ராசியில் இருந்து தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்கு டிசம்பர் 05 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05:01 மணிக்கு இடம் பெயர்கிறார்.

|

நவகிரகங்களில் செவ்வாய் துலாம் ராசியில் இருந்து தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்கு டிசம்பர் 05 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05:01 மணிக்கு இடம் பெயர்கிறார். இந்த விருச்சிக ராசியில் ஜனவரி 04 ஆம் தேதி வரை இருந்து பின் தனுசு ராசிக்கு செல்லவிருக்கிறார். மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் ஒரு உமிழும் கிரகம். அதோடு செவ்வாய் "கடவுளின் தளபதி" என்றும் அழைக்கப்படுகிறது.

Mangal Rashi Parivartan Mars Transit in Scorpio On 05 December 2021 Effects on Zodiac Signs in Tamil

சுறுசுறுப்பான மற்றும் உமிழும் கிரகமான செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் முதல், நான்காவது, ஏழாவது, எட்டாவது மற்றும் பன்னிரெண்டாவது வீட்டில் இருந்தால், அது மங்கள தோஷம் உருவாக்கும். இத்தகைய செவ்வாய் துலாம் ராசியில் இருந்து சொந்த ராசியான விருச்சிக ராசிக்கு செல்வதால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

செவ்வாய் பெயர்ச்சியால், மேஷ ராசிக்காரர்கள் தங்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் சவால்களை சந்திக்க நேரிடும். உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க உங்களுக்கு எதிராக சிலர் சதி செய்வார்கள். பெற்றோர் உங்களைப் புரிந்து கொள்ளாததால் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை சிரமமாக இருக்கும். தொழில் ரீதியாக, எவ்வளவு சிறப்பாக பணிபுரிந்தாலும், சிறந்த முடிவைப் பெறமாட்டீர்கள். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான காலமாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

செவ்வாய் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் பேசும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த காலம் நீங்கள் மற்றவர்களுடன் பழகுவதற்கு சாதகமான காலம் அல்ல. நிதி நிலை நன்றாக இல்லாமல் போகலாம். கடன் கூட வாங்க நேரிடு. ஈகோ பிரச்சனைகள் உறவுகளை கெடுக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருப்பினும், இரத்த அழுத்த பிரச்சனைகளை கவனிக்க அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட்டு எனர்ஜியை வீணடிப்பதைத் தவிர்த்திடுங்கள். கடின உழைப்பிற்கான நல்ல பலன் இக்காலத்தில் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவார்கள். ஆரோக்கியம் மேம்படும். நேர்மறையுடன் புதிய முயற்சியை தொடங்குவீர்கள். தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சவால்கள் இருக்கும். பணியிடத்தில் சூழ்நிலை பிடிக்காதவாறு இருக்கும். நிதி ரீதியாக செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் குழந்தைகளின் மீது சற்று கவனம் செலுத்துங்கள். இக்காலத்தில் பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை பிரச்சனை நிறைந்ததாக இருக்கும். இந்த பிரச்சனையைத் தீர்க்க மூன்றாம் நபரின் உதவி தேவைப்படும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள், செவ்வாய் பெயர்ச்சியால் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். வீடு மற்றும் வாகனம் வாங்க ஏற்ற காலம் இது. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வாக உணர்வீர்கள். தேவையில்லாத மன அழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள். ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியை செய்யுங்கள். மாணவர்கள் சில தடைகளை சந்திக்கலாம். புதிய தொழிலை தேர்ந்தெடுக்கும் முன் புத்திசாலித்தனமாக சிந்தியுங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இக்காலம் ஊக்கமளிப்பதாக இருக்கும். இக்காலத்தில் ஆக்கப்பூர்வமாக இருப்பீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனை நேரிடலாம். மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். இக்காலத்தில் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! நீங்கள் உங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்த தவறினால், உறவுகளில் பிரச்சனைகள் ஏற்படும். உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல், பிரச்சனையை சரிசெய்ய முயலுங்கள். திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தால், அது தாமதமாகலாம். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு எல்லாம் சாதகமாக அமையும். உங்களின் அனைத்து முயற்சிகளிலும் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவளிப்பார். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கவனமாக இருங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! செவ்வாய் பெயர்ச்சியால் நீங்கள் உங்கள் நிதி அல்லது முதலீடுகள் குறித்து முடிவெடுக்க வேண்டும். சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். இக்காலத்தில் நிதி விஷயங்கள் உங்களுக்கு சிக்கலை உருவாக்கும். வணிக பயணங்களைத் தவிர்க்க வேண்டும். இக்காலம் சொத்து அல்லது வாகனம் வாங்குவதற்கு சாதகமானது. இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மற்றும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

தனுசு

தனுசு

உங்கள் எதிரிகள் யார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய காலமிது. நீங்கள் ஆற்றலுடன் இருப்பதை உணர்வீர்கள் ஆனால் கோபத்தைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால் பிரச்சனைகள் அதிகரிக்கும். திருமணமான தம்பதிகள் சில தவறான புரிதல்களால், திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். இக்காலத்தில் வெளிநட்டில் குடியேற வாய்ப்புள்ளது. இக்காலத்தில் சில தடைகளை சந்திப்பீர்கள். ஆனால் நம்பிக்கையுடன் இருங்கள். பெற்றோர் மீது கூடுதல் கவனத்தை செலுத்துங்கள்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும். ஆனால் உறவுகளில் சில தவறான புரிதல்கள் இருக்கும். மாணவர்கள் புதிய படிப்பில் சேரலாம். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். பருவகால பிரச்சனைகள் உங்களை தொந்தரவு செய்யும் என்பதால் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். பணி புரிபவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இக்காலத்தில் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள் மற்றும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் செவ்வாய் பெயர்ச்சியால் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவார்கள். தொழில் ரீதியாக திருப்தி அடையாமல் இருக்கலாம். ஆனால் பணியிடத்தில் மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம் என்பதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலை சீராக இருப்பதால், நீண்ட கால முதலீட்டிற்கு இதுவே சரியான காலம். இக்காலத்தில் நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! தினமும் உடற்பயிற்சி செய்து உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். இக்காலத்தில் பயணத்திற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலை நன்றாக இருக்கும். கடினமாக உழைக்கும் மாணவர்கள் விரும்பிய பலன்களைப் பெறுவார்கள். புதிய படிப்பில் சிலர் சேரலாம். இக்காலத்தில் வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mangal Rashi Parivartan Mars Transit in Scorpio On 05 December 2021 Effects on Zodiac Signs in Tamil

Mangal rashi parivartan december 2021 in Vrishchik Rashi; Mars Transit in Scorpio Effects on Zodiac Signs in tamil : TheMars Transit in Scorpio will take place on 05 December 2021. Learn about remedies to perform in tamil.
Story first published: Saturday, December 4, 2021, 16:07 [IST]
Desktop Bottom Promotion