Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு பெரிய நஷ்டம் தேடிவரப்போகுதாம் -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க.. -
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
2023 பிப்ரவரி 15 ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசியில் இருந்து அந்த உச்ச ராசியான மீன ராசிக்கு செல்லவுள்ளார். சுக்கிரன் மீன ராசிக்கு சென்றதும், அந்த ராசியில் மாளவியா யோகம் உருவாகவுள்ளது.
நவகிரகங்களில் ஆடம்பரம், அழகு, செழிப்பு, காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசியில் இருந்து அந்த உச்ச ராசியான மீன ராசிக்கு செல்லவுள்ளார். சுக்கிரன் மீன ராசிக்கு சென்றதும், அந்த ராசியில் மாளவியா யோகம் உருவாகவுள்ளது.

மாளவியா யோகமானது 5 மகாபுருஷ யோகங்களில் ஒன்றாகும். ஜோதிடத்தில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த மங்களகரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. மாசி மாதத்தில் உருவாகும் இந்த மாளவியா ராஜயோகமானது பலரது வாழ்வில் மிகப்பெரிய நற்பலன்களைத் தரப் போகிறது. குறிப்பாக ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில், 4 ராசிக்காரர்கள் இந்த மாளவியா ராஜயோகத்தால் அபரிமிதமான பலன்களைப் பெறப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மாளவியா ராஜயோகம் எப்படி உருவாகிறது?
வேத ஜோதிடத்தின் படி, சுக்கிரன் அதன் சொந்த ராசி மற்றும் உச்சம் பெறும் ராசியில் இருந்தால், மாளவியா யோகம் உருவாகும். இதில் ரிஷபம் மற்றும் துலாம் ஆகிய 2 ராசிகளின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் கன்னி ராசியில் பலவீனமாகவும், மீன ராசியில் உச்சத்திலும் இருப்பார். எனவே சுக்கிரன் எப்போது ரிஷபம், துலாம், மீனம் ஆகிய ராசிகளின் லக்ன வீட்டில் இருக்கிறாரோ, அப்போது மாளவியா யோகம் உருவாகும். அந்த வகையில் 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி மீனம் வரும் சுக்கிரனால் மாளவியா யோகம் உருவாகப் போகிறது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இது வருமான வீடாகும். இதனால் இந்த ராசிக்காரர்கள் வருமானத்தில் உயர்வைக் காண்பார்கள். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். இதுவரை வேலைகளில் சந்தித்து வந்த தடைகள் நீங்கும், சிக்கிய பணம் இக்காலத்தில் கிடைக்கும். காதல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவுகளில் உள்ள விரிசல் நீங்கும். மாணவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல சம்பள உயர்வைப் பெறுவார்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த யோக காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் திடீரென்று நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெவார்கள். இவ்வளவு பணம் உங்களுக்கு கிடைக்கும் என்று நீங்கள் இதுவரை எதிர்பார்த்திருக்கமாட்டீர்கள். அந்த அளவில் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். கடந்த காலத்தில் செய்த முதலீட்டினால் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். ஆய்வுத் துறையில் இருப்பவர்கள் வெற்றி காண்பார்கள். உறவினர்களுடனான உறவு மேம்படும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். இக்காலத்தில் தாயின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினருடனான உறவு மேம்படும். வீடு, வாகனம், நிலம் போன்றவற்றை வாங்குவதற்கு இது சாதகமான காலம். இக்காலத்தில் எடுக்கும் எந்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டிற்கும், வீட்டில் உள்ளோரின் ஆசையை பூர்த்தி செய்ய நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இது செல்வத்தின் வீடாகும். இதனால் இக்காலத்தில் வாய்க்கு ருசியாக சாப்பிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகைக்கு வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக இக்காலம் சாதகமாகவும், லாபகரமாகவும் இருக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். ஆனால் உணவுகளால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மீன ராசிக்காரர்களின் நடத்தையில் சிறிது மாற்றம் தெரியும். மேலும் இவர்களின் பேச்சை இக்காலத்தில் மற்றவர்கள் கேட்பார்கள். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications