Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்.. -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
உங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா? அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க...
எந்த வீட்டில் சிரிப்பும் சந்தோஷமும் நேர்மறை எண்ணங்களும் இருக்கிறதோ அந்த வீட்டில் அன்னை மகாலட்சுமியின் அருள் நிரந்தரமாக கிடைக்கும்.
மகாலட்சுமியின் அருள் கிடைக்கவேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். செல்வத்திற்கு அதிபதி, மகாவிஷ்ணுவின் மனைவி மகாலட்சுமியின் அருள் நம் வீட்டில் நிறைந்திருக்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புகின்றனர். நம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூபாய் நோட்டில் மகாலட்சுமி படத்தினை அச்சிட வேண்டும் என்று ஒரு அரசியல்வாதியே ஆலோசனை கூறியுள்ளார்.
நம்முடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் நாம் சந்தோஷமாக இருக்கவேண்டும் நமது வீடு நேர்மறை அதிர்வுகளால் நிறைந்திருக்க வேண்டும் என்கின்றனர் ஆன்மீக பெரியோர்கள். நம் வீட்டிலும் நம்முடைய முகத்திலும் லட்சுமியின் அருள் நிரந்தரமாக கிடைக்க வேண்டும் என்றால் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று ஜோதிடர்களும், ஆன்மீகவாதிகளும் கூறியுள்ளனர்.

துர்வாடை, அழுக்குத்துணிகள்,துன்பம்,புலம்பல்,அலங்கோலமாக ஆடுதல்,எதிர்மறையான எண்ணங்கள்,அடிக்கடி கொட்டாவி விடுதல், தீராத மனக்கஷ்டம்,எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல் இவை அனைத்துமே மூதேவிக்குப் பிடித்த இடங்களாகும். நமது வீட்டில் மூதேவி தங்காமல் இருப்பதற்கு தீபம், உப்பு, மஞ்சள், கண்ணாடி, பட்டு ஆடைகள், தேங்காய், பால், வெண்ணெய், மாவிலை, கோமியம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
நறுமணம் நிறைந்த வீடு, சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்த வீட்டில் எப்போது லட்சுமியின் அருள் இருக்கும். தினசரியும் நம் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். விளக்கு எரியும் வீடுகளில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும்.

குலதெய்வ வழிபாடு
குலதெய்வ வழிபாடும் பித்ருக்கள் வழிபாடும் இடைவிடாமல் செய்துவர குடும்ப முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து மஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகல தோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில் முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்த அளவின் மடங்குகள் பணம் வரும்.

மருதாணி தானம்
வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன் வளையல், மருதாணி சேர்த்து தானம் கொடுப்பதன் மூலம் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும். மஞ்சள் குங்குமம் தரவும், இதனால் பணவரவு ஏற்படும்.
குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு, நெல்லிமரம், வில்வமரம் இருக்க அந்த வீட்டில் லட்சுமிகடாட்சம் ஏற்படும். சொர்ணாகர்ஷண பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர் பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.

பச்சை பயறு
அபிஜித் முகூர்த்த நேரமான பகல் 12 மணி அளவில் அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும். பாசிப்பருப்பை ஒரு பச்சைபையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு பிளாடிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.

வெள்ளி மோதிரம்
பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும். தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லட்சுமி நித்தமும் வாசம் செய்வாள். கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
வெள்ளிக்கிழமை சுக்ரஓரையில் மொச்சை, சுண்டலை மகாலட்சுமிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்துவர குடும்பத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

குளிக்கும் போது இதை செய்யுங்கள்
தினசரியும் குளிக்கும் போதும் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும். குளிக்கும்போது, எடுத்தவுடன் தலைக்கு நீரை ஊற்றிக்கொள்ளக்கூடாது. முதலில் பாதத்தில் ஊற்றி, பிறகு உடலில் ஊற்றிக்கொண்டு கடைசியாகத்தான் தலையில் நீரை ஊற்ற வேண்டும். குளித்து முடித்ததும், துடைத்து கொள்ளும்போது முதலில் தலையை துவட்டக்கூடாது. பின்பக்க முதுகைத்தான் துடைக்க வேண்டும். அப்போது மூதேவி முதுகில் அமர்வாள். அடுத்தது நம் முகத்தில் மகாலட்சுமி அமர்வாள். நாம் சென்ற இடமெல்லாம் நமக்கு அதிக வரவேற்பு கிடைக்கும்.

வலம்புரி சங்கு
தாமரை மணி மாலைக்கு அற்புத சக்தி உள்ளது. பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய தாமரை மணிமாலையை வீட்டில் வைத்திருக்கலாம். மயில்தோகை, வலம்புரி சங்கு, சாளக்கிராமம் என தெய்வீக சக்திகள் நிறைந்த பொருட்களை வீட்டின் பூஜை அறையில் வைத்திருந்தால் பொருளாதார வளம் மேம்படும்.

இலுப்பை எண்ணெய்
நமது வீட்டில் பிரம்ம முகூர்த்த வேளையில் பஞ்சமுகக் குத்துவிளக்கிற்கு இலுப்பெண்ணெய் விட்டு வெள்ளைத் திரியிட்டு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் அஷ்டலட்சுமியின் ஐஸ்வர்யங்கள் யாவும் குறித்த குடும்பத்திற்குக் கிட்டும். இதேபோல் இங்கு மஞ்சள் திரியிட்டு தீபம் ஏற்றிவர குபேர அருளும் திருமண பாக்கியமும் புத்திர பாக்கியமும் உண்டாகும். சிவப்புத் திரியால் தீபமேற்றும் போது வறுமை, கடன், பல்வேறு தோஷங்களும் நீங்கும். இலுப்பெண்ணெய் சகல தேவர்களிற்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது.

திருப்பதி வெங்கடாசலபதி
தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில் காலை எழுந்தவுடன் கண் விழிப்பதன் மூலம் பணம் கிடைக்கும். செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் கிடைக்கும். சம்பாதிப்பதில் ஒரு தொகையை அன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும்.



Click it and Unblock the Notifications