Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
Maha Shivaratri 2022 Horoscope: மகா சிவராத்திரிக்கு இந்த 5 ராசிக்கு சிவனின் முழு அருளும் கிடைக்குமாம்...
மகா சிவராத்திரி அன்று சிவபெருமான் தன்னை மனமுருகி வேண்டும் பக்தர்களுக்கு அருளைத் தர மறுக்கமாட்டார். இருப்பினும் ஜோதிடத்தின் படி, 5 ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் சிறப்பான அருள் கிடைக்கும்.
மகா சிவராத்திரி என்பது அனைத்து சிவ பக்தர்களும் சிவனை வழிபடுவதற்கு ஏற்ற சிறப்பான காலமாகும். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி நாடு முழுவதும் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. புராணங்களின் படி, மகா சிவராத்திரி நாளின் இரவில் தான் சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடியதாக கூறப்படுகிறது. மகா சிவராத்திரியானது மாசி மாதத்தில் வரும். இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 01 ஆம் தேதி வருகிறது.

மகா சிவராத்திரி அன்று சிவபெருமான் தன்னை மனமுருகி வேண்டும் பக்தர்களுக்கு அருளைத் தர மறுக்கமாட்டார். இருப்பினும் ஜோதிடத்தின் படி, 5 ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் சிறப்பான அருள் கிடைக்கும். அந்த 5 ராசிக்காரர்கள் யார்யார், எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். புராணங்களின் படி, சிவபெருமான் அந்தகாசுரன் என்ற அரக்கனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் போது, சிவனின் வியர்வை துளி நிலத்தைத் தொட்ட போது செவ்வாய் உருவானதாக கூறப்படுகிறது. மேலும் அந்த போரின் போது சிவன் கோபமாக இருந்ததால், செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்கள் எளிதில் கோபப்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட மேஷ ராசிக்காரர்கள், இந்த மகா சிவராத்திரியால் தங்கள் வாழ்க்கையில் சில முக்கிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ஆனால் இக்காலத்தில் வெறித்தனமாகவும், எரிச்சலுடனும் இருக்காதீர்கள். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்நாளில் சில எதிர்பாராத நற்செய்திகளைப் பெறலாம். இந்நாளில் சிவபெருமானின் சிறப்பு ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு. உங்கள் திருமண வாழ்க்கையில் கூட சில மாற்றங்களை கவனிக்கலாம். முக்கியமாக உறவுகளில் ஒரு நல்ல முன்னேற்றங்களைக் காணலாம். உங்கள் துணையுடனான உறவு வலுபெற உங்கள் ஆற்றலைப் பயன்படுத்துங்கள். இதனால் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதியும் செவ்வாய். இந்த ராசிக்காரர்களும் மகா சிவராத்திரி அன்று சிவனின் சிறப்பான அருளைப் பெறுவார்கள். மன அமைதி மற்றும் வாழ்க்கையில் சமநிலையை அனுபவிப்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இவர் சிவபெருமானுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராவார். எனவே தான் மகா சிவராத்திரி அன்று இந்த ராசிக்காரர்கள் சிவன் மற்றும் சனி ஆகிய இருவரின் ஆசியையும் பெறுவார்கள். அதுவும் இந்த ராசிக்காரர்கள் சிவருமானுக்கு வில்வ இலை, கங்கை நீர், மாட்டுப் பால் ஆகியவற்றால் பூஜிப்பது உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறுவதோடு, வாழ்க்கையில் செழிப்பையும், மகிழ்ச்சியையும் தரும்.

கும்பம்
இந்த மகா சிவராத்திரி அன்று கும்ப ராசிக்காரர்கள் சிவபெருமான் மற்றும் சனி பகவானின் முழு அருளையும் பெறுவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் வெற்றி காண்பார்கள். வருமானமும், செல்வமும் அதிகரிக்கும். இந்நாளில் இந்த ராசிக்காரர்கள் சிவனை நினைத்து வழிபடுவது இன்னும் நல்லது.



Click it and Unblock the Notifications