Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
Chandra Garahan Mantras : சந்திர கிரகண நாளில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!
கிரகணத்தின் போது எதிர்மறை சக்திகளால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க ஒருசில மந்திரங்களை சொல்ல வேண்டும். அந்த மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இன்று 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் நிகழ்கிறது. இது முழு சந்திர கிரகணம் ஆகும். இதற்கு முன் மே மாதத்தில் 2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. நவம்பரில் நிகழும் சந்திர கிரகணம் மாலை 4.23 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணி வரை இருக்கும். மேலும் சந்திர கிரகணத்திற்கு ஒன்பது மணிநேரத்திற்கு முன்பிருந்தே சூதக் காலம் தொடங்குகிறது. இந்த சூதக் காலத்தில் எந்த ஒரு சுப காரியமும் செய்யக்கூடாது.

பொதுவாக கிரகணத்தின் போது நேர்மறை சக்திகளை விட எதிர்மறை சக்திகள் அதிக ஆதிக்கம் செலுத்துவதாக ஜோதிடம் கூறுகிறது. எனவே தான் கிரகண காலத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் கிரகணத்தின் போது எதிர்மறை சக்திகளால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க ஒருசில மந்திரங்களை சொல்ல வேண்டும். அந்த மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மந்திரம் #1
ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸ்வாஹா:
இந்த மந்திரத்தை சந்திர கிரகண நாளில் கூறுவதன் மூலம் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைவதாக கூறப்படுகிறது.

மந்திரம் #2
ஓம் ஹ்லீம் து துர்காய நமஹ:
இந்த மந்திரத்தை சந்திர கிரகணத்தின் போது கூறுவதன் மூலம், நல்ல பேச்சாற்றல் கிடைப்பதாக கூறப்படுகிறது.

மந்திரம் #3
ஓம் ஹ்லீம் பகலமுகி ஸர்வதுஷ்டானாம் வாச்சம் முகம் பதம் ஸ்தம்பய் ஜிஹ்வாம் கீலே புத்திம் விநாஷே ஹ்ரிங் ஓம் ஸ்வாஹா:
இந்த மந்திரமானது பகுலாமுகி தேவியின் மந்திரமாகும். இந்த மந்திரத்தை சந்திர கிரகணத்தின் போது சொல்வதால், எதிரிகளால் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மந்திரம் #4
ஓம் ஸ்ரீ ஹ்ரிம் ஷ்ரிம் கம்லே கமலாலயே ப்ரஸித்-ப்ரஸித் ஸ்ரீ ஹ்ரிம் ஷ்ரிம் மஹாலக்ஷ்மி நமஹ:
வேலை மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி பெற சந்திர கிரகண நாளில் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

மந்திரம் #5
சந்திர கிரகணத்தன்று மன அமைதிக்காக சொல்ல வேண்டிய மந்திரங்கள் பின்வருமாறு:
ஓம் ஷ்ரம் ஶ்ரீம் ஷ்ரம் ஸஹ் சந்த்ராம்ஸே நமஹ.
ஓம் ஸோம் ஸோமாய நமஹ.
ஓம் சாம் சந்த்ரமஸாயை நமஹ.
ஓம் ஷிதாஞ்சு, விபந்ஷு அமிர்தாஞ்சு நமஹ.
ஓம் ஐம் க்லீம் ஸௌமாயை நமஹ.

மந்திரங்களை சொல்வதற்கான சரியான வழி
கிரகண நாளில் சொல்லும் மந்திரங்களை முழு நம்பிக்கையுடனும், பக்தியுடனும் சொன்னால் மட்டும் தான் அந்த மந்திரம் பலனைத் தரும். மேலும் கிரகண நாளில் மந்திரங்களை சொல்வதாக இருந்தால், ஒரு இடத்தில் அமர்ந்து ஊதுபத்தியை ஏற்றி, மனதை ஒருமுகப்படுத்தி மந்திரத்தை சொல்ல வேண்டும். இப்படி நம்பிக்கையுடன் மந்திரங்களை சொல்லி வந்தால், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நன்மை கிடைப்பதாக கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications