Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
2021 சந்திர கிரகணத்தால் ஒவ்வொரு ராசிக்காரரும் பெறப்போகும் பலன்கள் என்னென்ன தெரியுமா?
2021 ஆம் ஆண்டில் முதல் சந்திர கிரகணம் மே மாதம் 26 ஆம் தேதி நிகழவிருக்கிறது. இந்த சந்திர கிரகணம் மொத்த சந்திர கிரகணமாக இருக்கும். இந்த வான நிகழ்வு, இந்திய நேரப்படி மதியம் 2.17 மணி முதல் இரவு 7.19 மணி வரை இருக்கும்.
2021 ஆம் ஆண்டில் முதல் சந்திர கிரகணம் மே மாதம் 26 ஆம் தேதி நிகழவிருக்கிறது. இந்த சந்திர கிரகணம் மொத்த சந்திர கிரகணமாக இருக்கும். இந்த வான நிகழ்வு, இந்திய நேரப்படி மதியம் 2.17 மணி முதல் இரவு 7.19 மணி வரை, மிகவும் நீண்ட நேரம் நிகழவிருக்கிறது. சந்திர கிரகணம் பகல் வேளையில் நிகழ்வதால், இந்தியாவில் சந்திர கிரகணத்தை காண முடியாது.

சூரியன்-பூமி-சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது நிகழ்வதே சந்திர கிரகணம் ஆகும். ஜோதிட சாத்திரத்தில், சந்திர கிரகணங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே சந்திர கிரகணம் காரணமாக ஒவ்வொரு ராசிக்காரர்களும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
2021 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மேஷ ராசியில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக உடன்பிறப்புகளுடனான உங்கள் உறவு பாதிக்கப்படலாம். எனவே அமைதியாக இருங்கள் மற்றும் பிடிவாதமாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள். சில நேரங்களில், நீங்கள் மிகவும் உற்சாகமாக உணரலாம் மற்றும் வணிக விஷயத்தில் பல தைரியமான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று கடினமான நேரமாக இருக்கும். இந்த நேரம் நிதி ரீதியாக நன்றாக இருக்கும்.

ரிஷபம்
சந்திர கிரகணத்தால் ரிஷப ராசிக்காரர்கள் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். நிதி விஷயத்தில் நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். அதே சமயம் திடீர் செலவுகளையும் செய்ய வேண்டியிருக்கும். சில வேலைகளை செய்து முடிக்க தாமதமாகலாம். கடுமையாக பேசுவதைத் தவிர்க்கவும். இல்லாவிட்டால், அது உங்கள் அன்பானவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த சந்திர கிரகணத்தால் செலவினங்களைக் குறைப்பார்கள். உங்கள் எதிரிகளை உங்களால் தோற்கடிக்க முடியும். இலக்குகளை அடைய கொஞ்சம் கடினமாக உழைத்தால், நிச்சயம் அடைவீர்கள். இக்காலத்தில் வாதங்களில் சிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

கடகம்
சந்திர கிரகணத்தால் உங்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இது உங்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும். உங்களின் வேலைகளை சிறப்பாக செய்வீர்கள். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். முக்கியமாக நீங்கள் நன்கு பணம் சம்பாதிக்கும் திறனைப் பெறுவீர்கள்.

சிம்மம்
உறவில் உள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு இது ஒரு நல்ல காலம். இக்காலத்தில் கொஞ்சம் பணத்தை இழக்க நேரிடும். முக்கியமாக தேவையில்லாத விஷயங்களுக்கு அதிக பணம் செலவழிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் ஒரு புதிய வேலையை தேடுபவரானால், அதை பெறுவீர்கள். உங்கள் குடும்பம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

கன்னி
உங்களின் பணி வாழ்க்கை நிலையானதாகவோ அல்லது சிறப்பாகவோ இருக்கலாம். இந்த நேரத்தில் லாபம் மற்றும் முன்னேற்றத்திற்கு வாய்ப்புள்ளது. அவசர முடிவுகளை எடுக்க முயற்சி செய்யாதீர்கள். வேலை தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும்.

துலாம்
சந்திர கிரகணத்தால், துலாம் ராசிக்காரர்கள் ஒழுங்கற்ற ஆற்றல் மட்டத்தால் பாதிக்கப்படக்கூடும். ஆரோக்கியம் குறித்து அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். உங்கள் தொழில் திட்டமிடலில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் புதிய உத்திகளை செயல்படுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்
சந்திர கிரகணம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆன்மீகம் மற்றும் தியானத்தில் ஆர்வத்தை உருவாக்கும். எதிர்பாராத உணர்ச்சிகளால் பாதிக்கப்படக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்த்திடுங்கள். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சண்டையிடுவதைத் தவிர்த்து, நிலைமையை புத்திசாலித்தனமாக கையாள முயற்சிக்கவும். பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். தேவையற்ற ஷாப்பிங் செய்து பணத்தை செலவிட வேண்டாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் எதிர்பாராத நிகழ்வுகள் காரணமாக சில மாற்றங்களைக் காணலாம். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முயற்சியுங்கள். வாக்குவாதங்களில் ஈடுபடும் போது தெளிவாக இருங்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். உங்கள் எதிரிகளை வெல்வீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் உடன்பிறப்புகளுடனான உறவைக் கெடுக்கக்கூடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் கடுமையானதாக இருக்கும். இதனால் இது உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இடையிலான தொடர்பை பாதிக்கும். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மன அழுத்தத்தைத் தள்ளி வைக்க வேண்டும். மொத்தத்தில் அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்க முயலுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சந்திர கிரகண காலத்தில் ஒரு சாதகமான நேரத்தை அனுபவிக்கலாம். இக்கால கட்டத்தில் உங்களின் உள் திறன்களை கவனம் செலுத்தி மேம்படுத்த வேண்டும். உங்கள் அன்பானவர்களுடன், குறிப்பாக குழந்தைகளுடன் நட்பாக நடந்து கொள்ள வேண்டும். மறுபுறம், ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். எனவே இக்காலத்தில் ஆரோக்கியம் குறித்து கவனமாக இருங்கள். குறிப்பாக உங்கள் தாய் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவெனில், நீங்கள் செல்வத்தை அல்லது காரை பெறலாம். வணிகர்கள் மற்றும் பெண்கள் சில ஏற்றத்தாழ்வுகளைக் காணலாம். இக்காலத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் நல்லுறவை வைத்திருங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தின் போது பண சிக்கல்கள் எழும் போது, என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போவீர்கள். உங்கள் அன்புக்குரியவரின் அன்பைப் பெற போதுமான நடவடிக்கைகளை எடுக்க முயற்சியுங்கள். இக்காலத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. வாக்கு வாதங்களில் ஈடுபடாதீர்கள். நீதிமன்றம் தொடர்பான பிரச்சினைகளில் நீங்கள் ஈடுபட்டிருந்தால், அதில் வெற்றி பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications











