Just In
- 1 hr ago
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
- 2 hrs ago
உங்களை அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்டும் உங்க உதட்டை எவ்வாறு பராமரிக்கணும் தெரியுமா?
- 2 hrs ago
தேசிய மருத்துவர் தினத்தன்று மருத்துவர்களை கௌரவிக்க இந்த மெசேஜ்களை அவர்களிடம் கூறுங்கள்...!
- 4 hrs ago
ஜூலை மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
Don't Miss
- News
நோய் பரவல்.. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது.. அரசுக்கு புகழேந்தி கடிதம்
- Automobiles
உலக சந்தைக்கான புதுமுக மின்சார காரை வெளியீடு செய்தது ஹூண்டாய்!.. வேற லெவல் டிசைன்ல காரை வடிவமைச்சிருக்காங்க!
- Movies
கையில் கணவரின் அஸ்தி.. நிலைகுலைந்து போன மீனா.. மீளா துயரத்தில் !
- Technology
Instagram-ல தினமும் Reels பார்க்குறோம்! ஆனால் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?
- Finance
செய்யுற வேலையை ஒழுங்கா செய்யணும்.. வாடிக்கையாளருக்கு ரூ.39,000 கொடுங்க.. MMTக்கு குட்டு..!
- Sports
" இன்று ஒரே இரவு தான்.." ரோகித் சர்மா-க்கு திடீர் கண்டம்.. இங்கி, டெஸ்ட்-க்காக பிசிசிஐ வைத்த செக்!!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பிறவியில் இருந்தே சிவபெருமானின் அருளைப் பெற்றிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மனித வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. என்ன தான் நாம் மார்டனான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், மக்களிடையே சில நம்பிக்கைகள் குறையாமல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜோதிடத்தின் மீது மக்கள் அதிக நம்பிக்கைக் கொண்டுள்ளனர். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மட்டுமின்றி, கடவுள்களும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களிடம் கருணை காட்டுகிறார்கள்.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியது. அந்த வகையில் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் சிவபெருமானை முறையாக வழிபட்டால், அவரின் அருளைப் பெறலாம் என்பது நம்பிக்கை. சிவபெருமானின் அருள் கிடைத்தால் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும் என்பது ஐதீகம். சிவபெருமான் என்னதான் தனது பக்தர்களின் கஷ்டங்களைப் போக்கினாலும், ஜோதிட சாஸ்திரத்தில் சிவபெருமானால் பிறவில் இருந்தே ஆசீர்வதிக்கப்பட்ட சில ராசிக்காரர்கள் உள்ளனர். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம் வாருங்கள்.

மேஷம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் கிரகம் சிவபெருமானின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஆகவே தான் இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானின் சிறப்பான அருளைப் பெற்றுள்ளார்கள். மேஷ ராசியைச் சேர்ந்த மக்கள், திங்கட்கிழமை அன்று சிவபெருமானை முறைப்படி வழிபட்டு வந்தால், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் விலகும் என்பது நம்பிக்கை.

விருச்சிகம்
ஜோதிடத்தின் படி, விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்களுக்கும் சிவபெருமானின் அருள் உண்டு. விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் திங்கட்கிழமைகளில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், சிவனின் அருளால் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். இது தவிர அனைத்துவிதமான பயங்களில் இருந்தும் விடுபடலாம்.

மகரம்
மகர ராசியும் சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளுள் ஒன்றாகும். இந்த ராசியின் அதிபதி சனி. இவர் சிவபெருமானின் தீவிர பக்தர். எனவே மகர ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் சிறப்பான அருள் உண்டு. இந்த ராசிக்காரர்கள் திங்கட்கிழமைகளில் வில்வ இலை, பசும்பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வந்தால், சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. அதோடு இச்செயலால் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்குமாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் அதிபதியும் சனி பகவான். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் சிறப்பு அருளுடன், சிவபெருமானின் அருளும் உண்டு. கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் சிவபெருமானை திங்கட்கிழமைகளில் முறையாக வழிபட்டு வந்தால், சிவனை எளிதில் மகிழ்விக்கலாம். அதுவும் திங்கட்கிழமைகளில் கும்ப ராசிக்காரர்கள் சிவலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்தால் விரும்பிய வரம் கிடைக்கும்.