Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
ஒன்றரை இலட்சம் ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தாய்லாந்து பெண்... அப்படி அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா?
ஒரு குற்றத்தின் தன்மையைப் பொறுத்து பல ஆண்டுகள் நீடிக்கும் நீண்ட சிறைத்தண்டனைகளை பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
குற்றங்களுக்காக நீதிமன்றங்கள் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைகளை தரும் வழக்கம் உலகம் முழுக்க இருக்கிறது. ஒரு குற்றத்தின் தன்மையைப் பொறுத்து பல ஆண்டுகள் நீடிக்கும் நீண்ட சிறைத்தண்டனைகளை பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். இருப்பினும், சில சமயங்களில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முதல் மில்லியன் ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவில் இந்த தண்டனை முறைகள் வழக்த்தில் இல்லை என்றாலும், சில வெளிநாடுகளில் இன்றும் இது வழக்கத்தில் உள்ளது. இந்த தண்டனைகள் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தால் ஆயிரக்கணக்கான மற்றும் மில்லியன் கணக்கான ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மிகப் பெரிய குற்றத்தைச் செய்த சில பிரபலமான குற்றவாளிகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

1,41,078 சிறைதண்டனை பெற்ற பெண்
தாய்லாந்தில் வசித்து வந்த சாமோய் திப்யாசோ, உலகின் மிக நீண்ட சிறைத்தண்டனை பெற்ற பெண் என்று அறியப்படுகிறார். 16,000க்கும் மேற்பட்ட தாய்லாந்து பூர்வீக மக்களை ஏமாற்றிய பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டதற்காக திப்யாசோவுக்கு 1,41,078 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மோசடி வழக்கில் குற்றவாளிக்கு எவ்வளவு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும் 20 ஆண்டுகளுக்கு மேல் அவர்களை சிறையில் அடைக்க முடியாது என்ற சட்டம் தாய்லாந்தில் பிற்காலத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தால்தான் திப்யாசோ 8 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

3,84,912 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற தபால்காரர்
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 22 வயது கேப்ரியல் மார்ச் கிரனாடோஸ் எனும் தபால்காரரருக்கு 1972 இல் 3,84,912 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் மற்றும் பார்சல்களை வழங்கவில்லை என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அவரது தண்டனை 14 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

32,500 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட கற்பழிப்பு குற்றவாளி
1994 ஆம் ஆண்டில், ஆலன் வெய்ன் மெக்லாரின் என்ற நபர் 21, 250 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆலனுக்கு 4 கற்பழிப்பு வழக்குகளில் மொத்தம் 8,000 ஆண்டுகள், 4 கட்டாய இயற்கைக்கு மாறான உடலுறவுக் குற்றங்களுக்கு 8,000 ஆண்டுகள், ஆயுதத்தால் தாக்கியதற்காக 1,500 ஆண்டுகள் மற்றும் சில கொள்ளைச் சம்பவங்களில் 500ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆலனின் கூட்டாளிக்கு மொத்தம் 11,250 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இருவருக்கும் சேர்த்து 32,500 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குழந்தை கற்பழிப்பு குற்றவாளிக்கு 30,000 ஆண்டுகள் சிறைதண்டனை
அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சார்லஸ் ஸ்காட் ராபின்சனுக்கு 30,000 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 1994 முதல் சிறையில் உள்ளார். சார்லஸ் 108 வயதை அடையும் போது அவர் தனது முதல் பரோலைப் பெற தகுதியுடையவராவார் என்று தீர்ப்பு கூறுகிறது.

இஸ்தான்புல் இரவு விடுதி துப்பாக்கிச் சூட்டிற்கு 1,368 ஆண்டுகள் சிறைதண்டனை
2017 இல் இஸ்தான்புல் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக அப்துல்காதிர் மஷாரிபோவ் என்ற உஸ்பெகிஸ்தான் நாட்டவருக்கு 40 ஆயுள் தண்டனைகள் மற்றும் கூடுதலாக 1,368 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.



Click it and Unblock the Notifications