Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
Libra Horoscope 2022: துலாம் ராசிக்காரர்களுக்கு 2022 எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
வேத ஜோதிடத்தின் படி, 2022 ஆம் ஆண்டின் ஆரம்பம் துலாம் ராசிக்காரர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மற்றும் தொழில் ரிதியாகவும் சாதகமான பலன்களைத் தரும்.
வேத ஜோதிடத்தின் படி, 2022 ஆம் ஆண்டின் ஆரம்பம் துலாம் ராசிக்காரர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மற்றும் தொழில் ரிதியாகவும் சாதகமான பலன்களைத் தரும். ஆனால் வியாபாரம் மற்றும் குடும்பத்தில் தான் விஷயங்கள் சற்று மோசமாக இருக்கும். ஜனவரி மாதத்தின் நடுவில் செவ்வாய் தனுசு ராசிக்கு செல்வதால், நிதி ரீதியான முடிவுகள் சாதகமாக இருக்கும் மற்றும் லாபம் உண்டாகும். மார்ச் மாத தொடக்கத்தில் சனி, செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஒன்றிணைந்து சதுர் கிரஹ யோகம் உண்டாவதால், பண வரவு சீராக இருக்கும் மற்றும் பொருளாதாரத்தில் வெற்றியும் கிட்டும்.

குரு பெயர்ச்சியால் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் படிப்பில் நம்பிக்கைக்குரிய பலன் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்பான வேலை அல்லது கல்வி தொடர்பான விஷயங்கள் மே மற்றும் நவம்பர் மாதங்களுக்குள் நிறைவேறும். ராகு பெயர்ச்சியால், திருமணமானவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். திருமணமாகாதவர்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது. இப்போது 2022 ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை விரிவாக காண்போம்.

2022-ல் காதல் வாழ்க்கை
துலாம் ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை ஓரளவு சீராக செல்லக்கூடும். காதலிப்பவர்கள் இந்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணமாகாதவர்கள் புதிய உறவைப் பெறலாம். திருமணமான தம்பதிகளுக்கு அன்பும் அமைதியும் அப்படியே இருக்கும். கடுமையான வாக்குவாதங்கள் மற்றும் தவறான நடத்தைகளைத் தவிர்த்து, உங்கள் துணையிடம் கொஞ்சம் மரியாதை மற்றும் புரிதலைக் காட்ட முயற்சிக்கவும். 2022 ஆம் ஆண்டில் நீங்கள் நல்ல ஆரோக்கியமான உறவை அனுபவிக்க இதுவே சிறந்த வழியாகும்.

2022-ல் தொழில் வாழ்க்கை
துலாம் ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு தொழிலைப் பொறுத்தவரை சராசரியாக இருக்கும். கார்ப்பரேட் வேலையாட்களுக்கு சராசரி முதல் நல்ல ஆண்டாக இருக்கும். ஆண்டின் முதல் சில மாதங்களில் பதவி உயர்வைப் பெறலாம். ஆனால் இரண்டாவது பாதி பணியிடத்தில் மிகவும் சவாலானதாக இருக்கும். எனவே சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பேணுவது நல்லது. வேலையை மாற்ற விரும்புபவர்கள், உங்கள் தற்போதைய வேலையை விட்டு வெளியேறும் முன் கவனமாக இருங்கள்.

2022-ல் கல்வி
துலாம் ராசிக்கார மாணவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு சிறந்த கல்வி ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த ஆண்டாக இருக்கலாம். மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஜூன் வரை நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டு உங்களின் வரவிருக்கும் தொழிலுக்கு முக்கியமான ஆண்டாகும்.

2022-ல் நிதி நிலைமை
2022 ஆம் ஆண்டில் துலாம் ராசிக்காரர்களின் நிதியைப் பொறுத்தவரை, ஆண்டின் இரண்டாம் பாதியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இரண்டாம் பாதியில் செலவுகள் அதிகமாக இருக்கலாம். அதனால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஆண்டில் சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த ஆண்டில் புதிய வருமானம் வராமல் போகலாம். இந்த ஆண்டில் முடிந்தவரை உஙகள் செலவுகளை சரிபாருங்கள்.

2022-ல் குடும்ப வாழ்க்கை
குடும்பத்தைப் பொறுத்தவரை, 2022 ஆம் ஆண்டில் குடும்பம் மற்றும் சமூகத்துடனான உறவுகள் மேம்படும். உங்களில் சிலருக்கு உங்கள் வீட்டை மேம்படுத்தவும், உங்கள் சுற்றுச்சூழலை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், அதை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றவும் வாய்ப்புகள் கிடைக்கும்.

2022-ல் குழந்தைகள்
துலாம் ராசிக்காரர்களின் குழந்தைகளுக்கு 2022 ஆம் ஆண்டின் ஆரம்பம் சாதகமாக இருக்கும். உங்கள் பிள்ளைகள் உயர்கல்வி பெறுவதில் தீவிரமாக இருந்தால், அவர்கள் உயர்தர கல்வி நிறுவனத்தில் சேரலாம். உங்கள் குழந்தைகள் இந்த ஆண்டு வெற்றியைப் பெறுவார்கள். உங்கள் குழந்தை திருமண வயதில் இருந்தால், இந்த ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படக்கூடும் என்பதால் ஆண்டின் இரண்டாம் பாதி சராசரியாக இருக்கும்.

2022-ல் திருமண வாழ்க்கை
2022 ஆம் ஆண்டு திருமணமான துலாம் ராசிக்காரர்கள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். ஏனெனில் ஆண்டின் தொடக்கத்தில் சில தடைகள் ஏற்படக்கூடும். மேலும் சில குடும்பப் பிரச்சினைகள் மற்றும் உங்கள் மனைவியுடன் நீங்கள் மிகவும் போராடுவீர்கள். இருப்பினும், ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆண்டின் நடுப்பகுதியில் நீங்கள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். இருப்பினும், எதிர்காலத்தில் நீங்களும் உங்கள் துணையும் நம்பிக்கையுடன் உங்கள் வாழ்க்கையை நடத்துவீர்கள்.

2022-ல் வியாபாரம்
வியாபாரம் செய்யும் துலாம் ராசிக்காரர்கள் 2022 ஆம் ஆண்டில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வணிக கூட்டாளிகள் மீது குருட்டு நம்பிக்கை வைப்பதை தவிர்க்கவும். இந்த ஆண்டு சில முதலீடு மிகவும் பயனுள்ளதாக இருக்காது மற்றும் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடலாம். நீங்கள் கூட்டுத் தொழிலைத் தொடங்க திட்டமிட்டால், இந்த ஆண்டு அதைத் தவிர்ப்பது நல்லது.

2022-ல் சொத்து மற்றும் வாகனம்
2022 ஆம் ஆண்டில் துலாம் ராசிக்காரர்கள் சொத்தை வாங்குவதற்கும், விற்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கான சொத்துக்களை வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். ஆனால் பரம்பரை சொத்தை விற்காதீர்கள். சிக்கலான சொத்து பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும். இந்த ஆண்டு நிலம், கட்டிடம், வாகனங்கள் வாங்கும் வாய்ப்பும் உள்ளது.

2022-ல் ஆரோக்கியம்
2022-ல் துலாம் ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு சிறிய உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்கலாம். செரிமானம் மற்றும் வைரஸ் தொற்றுகள் தொடர்பான நோய்கள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நல்ல மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கும் நீங்கள் விரும்பும் செயல்களை முயற்சி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications