Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
பலருக்கும் தெரியாத பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய புராணக் கதைகள்!
பொங்கல் பண்டிகையுடனும் தொடர்புடைய சுவாரஸ்யமான புராணக்கதைகள் உள்ளன. இந்த கதைகள் நிச்சயம் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Legends Of Pongal: பொங்கல் பண்டிகையானது தமிழர்களால் 4 நாட்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஓர் பண்டிகையாகும். இந்த பொங்கல் பண்டிகையை உழவர் திருநாள் என்றும் அழைப்பர். பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 01 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களை அறுவடை செய்து பயனடையும் பருவம் தான் தை மாதம். இந்த தை மாத அறுவடையில் கிடைத்த நெல்லில் இருந்து பெறப்படும் புதிய அரிசியை புது பானையில் போட்டு பால், வெல்லம், நெய் சேர்த்து பொங்கல் வைத்து, அதை சூரியனுக்கும், விவசாயத்திற்கு உதவிய மாடுகளுக்கும் படைத்து மகிழும் விழா தான் பொங்கல் பண்டிகையாகும்.

நான்கு நாள் பண்டிகை
நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் ஒவ்வொரு நாளும் மக்கள் ஒவ்வொன்றை வணங்குவார்கள். அதில் முதல் நாள் போகி பண்டிகை, இரண்டாம் நாள் சூரிய பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல். அதில் போகிப்பண்டிகையன்று மக்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து, மாலை வேளையில் வீடுகளை சுத்தம் செய்து அலங்கரிப்பார்கள். சூரிய பொங்கல் அன்று புதிய பச்சரிசியால் பொங்கலிட்டு, அதை சூரியனுக்கு படைத்து சூரியனை வணங்குவார்கள். மாட்டுப்பொங்கல் அன்று விவசாயத்திற்கு உதவிய மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாடுகளை அலங்கரித்து, பொங்கல் வைத்து மாடுகளுக்கு வழங்குவார்கள். மேலும் மாட்டுப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். காணும் பொங்கல் அன்று குடும்பத்தினருடன் ஒன்றாக சந்தோஷமாக நேரத்தை செலவிடுவார்கள்.

பொங்கலின் புராணக்கதைகள்
பொதுவாக அனைத்து பண்டிகைகளுக்கு பின்னும் சில சுவாரஸ்யமான புராணக் கதைகள் இருக்கும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையுடனும் தொடர்புடைய சுவாரஸ்யமான புராணக்கதைகள் உள்ளன. இந்த கதைகள் நிச்சயம் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது நமது பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய புராணக் கதைகள் என்னவென்பதைக் காண்போம் வாருங்கள்.

கோவர்தன மலையின் கதை
பொங்கல் பண்டிகையின் முதல் நாள் கொண்டாடப்படும் போகிப் பண்டிகையானது இந்திரன் மற்றும் கிருஷ்ணரின் புராணத்துடன் தொடர்புடையது. இந்திரன் மேகங்களுக்கும் மழைக்கும் கடவுளாவார். முன்னதாக மக்கள் தேவர்களின் ராஜாவான இந்திரனை வணங்கி வந்தனர். இதனால் இந்திரன் தன்னை மிகவும் சக்தி வாய்ந்தவன் என்று கர்வம் கொண்டு இருந்தார். அப்போது குழந்தைப் பருவத்தில் இருந்த கிருஷ்ணர் இந்திரனைப் பற்றி அறிந்து, அவருக்கு பாடம் கற்பிக்க நினைத்தார். எனவே ஒரு நாள் கிருஷ்ணர் தனது மாடு மேய்க்கும் நண்பர்களிடம் இந்திரனுக்கு பதிலாக கோவர்த்தன மலையை வணங்கும்படி கூறினார். இதனால் இந்திரன் மிகவும் கோபமடைந்து, மேகங்களை அனுப்பினார். இந்திரனின் கோபத்தால் தொடர்ந்து இடி, மின்னல், கனமழை, வெள்ளப்பெருக்கு போன்றவை ஏற்பட்டது.
புராணத்தின் படி, அந்த நேரத்தில் கிருஷ்ணர் தனது சுண்டு விரலில் கோவர்த்தன மலையை உயர்த்தி, மாடு மேய்ப்பவர்கள், கால்நடைகள் மற்றும் மக்களை பாதுகாத்தார். தொடர்ந்து மூன்று நாட்களாக இந்திரன் கோபத்தால் இடியுடன் கூடிய கனமழையை வரவழைத்தார். இறுதியாக இந்திரன் தனது தவறை ஒப்புக்கொண்டு, கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டார். புராணக்கதையுடன் தொடர்புடைய இந்திரனின் நினைவாக 'போகி' 'இந்திரன்' என்றும் அழைக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய சிவபெருமான்
பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கலானது கால்நடைகள், பசுக்கள் மற்றும் காளைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. புராணத்தின் படி, ஒருமுறை சிவபெருமான் நந்தியை பூமிக்கு செல்லுமாறு கூறினார். அப்போது பூமியில் உள்ள மனிதர்களிடம் தினமும் எண்ணெய் மசாஜ் செய்து, குளிக்கவும், மாதம் ஒருமுறை சாப்பிடவும் கூறுமாறு அனுப்பினார். ஆனால் தவறுதலாக நந்தி மக்களிடம் தினமும் எண்ணெய் மசாஜ் செய்து, மாதம் ஒரு முறை குளிக்கவும், தினமும் சாப்பிடவும் கூறினார்.
இதனால் கோபமடைந்த சிவன் நந்தியை சபித்தார். அதுவும் பூமியில் தானியங்களின் பற்றாக்குறை இருக்கும். எனவே வயல்களில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு எப்போதும் உதவ பூமியில் இருக்க வேண்டும் என்று கூறினார். இப்படி சிவன் விரட்டியதால் பூமிக்கு வந்த நந்தி விவசாயத்திற்கு உதவியாக இருந்தார். எனவே தான் மாட்டுப் பொங்கல் கால்நடைகளுடன் தொடர்புடையது.



Click it and Unblock the Notifications