Just In
- 3 hrs ago
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- 10 hrs ago
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- 11 hrs ago
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 11 hrs ago
உங்க வீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வீட்டுல வையுங்க...
Don't Miss
- Sports
கோலி, ரோகித்தைவிட அவர் முக்கியமா?.. இந்திய அணியின் முதுகெலும்பு அவர் தான்.. அஸ்வின் சுவாரஸ்ய கருத்து
- News
நிர்பயா நிதி..பெண்கள் படுகொலை..லோக்சபாவில் அனல் கேள்விகள் கேட்ட தமிழக பெண் எம்.பிக்கள்
- Movies
AK 62வில் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட வேதனை.. அஜித் புகைப்படத்தை நீக்கிய விக்னேஷ் சிவன்!
- Technology
Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விருச்சிகத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கும்..
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறும். அப்படி மாறும் போது சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அந்த வகையில் 2022 நவம்பர் 11 ஆம் தேதி செல்வம் மற்றும் செழிப்புக்கு காரணியாக கருதப்படும் சுக்கிரன் விருச்சிக ராசிக்கு சென்றார். அதைத் தொடர்ந்து 2022 நவம்பர் 13 ஆம் தேதி புத்திசாலித்தனம் மற்றும் வியாபாரத்திற்கு காரணியாவான புதன் விருச்சிக ராசிக்கு செல்லவிருக்கிறார்.
இதன் காரணமாக விருச்சிக ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழ்கிறது. இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் சுப யோகமான லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இது பேச்சு மற்றும் செல்வத்தின் வீடாகும். எனவே இந்த யோக காலத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு திடீரென்று பண பலன்கள் கிடைக்கும். வணிகர்கள் பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு இது சிறந்த காலம். இதனால் நல்ல லாபம் கிடைக்கும். மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இந்த யோக காலம் நல்ல லாபத்தைத் தருவதாக இருக்கும்.

மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இது வருமானம் மற்றும் செல்வத்தின் வீடாகும். எனவே இந்த யோகத்தால் மகர ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். வியாபாரிகள் புதிய அல்லது பழைய ஒப்பந்தங்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இக்காலத்தில் உங்களின் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு இந்த யோக காலத்தில் புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வீடு, வாகனம் அல்லது வேறு ஏதேனும் ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். அதோடு பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் உங்களுக்கு வழங்கப்படும். அதாவது வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)