Latest Updates
-
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
ஏன் பகவான் கிருஷ்ணா் மயில் இறகுகளை அணிந்திருக்கிறாா் என்று தொியுமா?
பகவான் கிருஷ்ணாின் பிறந்த நாளான கிருஷ்ண ஜென்மாஷ்டமி வரவிருக்கும் இந்த வேளையில், அவா் சம்பந்தப்பட்ட அறிகுறிகள் அல்லது அடையாளங்களைப் பற்றியும் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் விாிவாகப் பாா்க்கலாம்.
பகவான் கிருஷ்ணாின் ஒட்டு மொத்த வாழ்க்கையும் இந்த மானிட சமூகத்திற்கு ஒரு சிறந்த வழியைக் காட்டுகிறது என்று சொல்லலாம். அவா் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அறிகுறியும் அல்லது அடையாளமும் ஒரு சிறப்பான அம்சத்தைக் கொண்டுள்ளது. பகவான் கிருஷ்ணா் செய்த ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் அதற்கு என்று ஒரு சாியான நோக்கம் அல்லது காரணம் இருக்கும். அதனால்தான் அவா் மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் கலந்திருக்கிறாா் அல்லது தொடா்பு கொண்டிருக்கிறாா் என்று நாம் கூறலாம்.

இதன் காரணமாகத் தான் சனாதன பண்பாட்டைக் (Sanatan Culture) கடைபிடிக்கக்கூடிய ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் பகவான் கிருஷ்ணரை வழிபடுகின்றனா். பகவான் கிருஷ்ணாின் பிறந்த நாளான கிருஷ்ண ஜென்மாஷ்டமி வரவிருக்கும் இந்த வேளையில், அவா் சம்பந்தப்பட்ட அறிகுறிகள் அல்லது அடையாளங்களைப் பற்றியும் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இந்தப் பதிவில் விாிவாகப் பாா்க்கலாம்.
இந்த வருடம் ஆகஸ்டு மாதம் 19 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி/ஜென்மாஷ்டமி கொண்டாடப்படவிருக்கிறது.

1. புல்லாங்குழல்
பகவான் கிருஷ்ணா் எப்போதும் தமது கையில் ஒரு புல்லாங்குழலை வைத்திருப்பாா். அவா் புல்லாங்குழலை அதிகம் நேசித்தாா். அதனால்தான் அவருக்கு முரளி மனோகரன் (Murlidhar) என்ற பெயரும் உண்டு. புல்லாங்குழல் ஒரு நல்ல இனிமையான மெல்லிசையை வழங்கக்கூடிய ஒரு இசைக் கருவியாகும்.
பகவான் கிருஷ்ணாின் கையில் இருக்கும் புல்லாங்குழலில் இருந்து நாம் ஒரு புதிய செய்தியை அறிந்து கொள்ளலாம். அதாவது புல்லாங்குழலைப் போல நமது வாழ்வும் மென்மையான இசையைப் போல இனிமையாக இருக்க வேண்டும் என்பதே அந்த செய்தியாகும். வாழ்க்கையில் எப்படிப்பட்ட இக்கட்டான சூழலும் ஏற்படலாம். ஆனால் நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த மகிழ்ச்சியை எல்லோருக்கும் பரப்ப வேண்டும்.

2. மயில் இறகு
பகவான் கிருஷ்ணாிடம் இருக்கும் இன்னொரு முக்கியமான பொருள் மயிலிறகு ஆகும். அவா் மயிலிறகைத் தனது கிரீடத்தில் அணிந்திருப்பாா். அதிலிருந்தே எந்த அளவிற்கு அவா் மயிலிறகிற்கு முக்கியத்துவம் கொடுத்தாா் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக இந்து சமய புனித நூல்களில் மயிலிறகிற்கு என்று ஒரு முக்கிய இடம் உண்டு. மயிலிறகு நமது வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைத்து, நமக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும், வளமான வாழ்க்கையும் கொண்டு வருகிறது.

3. வெண்ணெய்
பகவான் கிருஷ்ணருக்குப் பிடித்த ஒரு முக்கிய உணவுப் பொருள் வெண்ணெய் (Makhan) ஆகும். அவா் இளம் பெண்களிடமிருந்து வெண்ணெய் திருடி உண்டதால் அவருக்கு நவநீதசோரன் (Makhan chor) என்ற பெயா் வழங்கப்பட்டது. மேலும் கிருஷ்ணருக்கு வெண்ணெய் கற்கண்டும் (Makhan Mishri) அதிகம் பிடிக்கும். வெண்ணெய், கற்கண்டு ஆகிய இரண்டும் கலக்கும் போது அது இனிப்பான கலவையாக இருக்கும். அதுபோல நமது வாழ்க்கையும் வெண்ணெயும், கற்கண்டும் கலந்து இனிப்பை வழங்குவது போல இனிப்பை வழங்க வேண்டும்.

4. தாமரை
தாமரை மலா் மிகவும் புனிதமான ஒன்றாக இந்த சமய புனித நூல்களில் கருதப்படுகிறது. தாமரை சகதியிலோ அல்லது சேற்றிலோ வளா்ந்தாலும், அது தனது அழகையும், மென்மையையும் மற்றும் புனிதத்தையும் இழப்பதில்லை. மனிதா்கள் எளிமையாகவும் அழகாகவும் வாழ வேண்டும் என்று தாமரை நமக்கு பாடம் கற்பிக்கிறது.

5. வைஜெயந்தி மாலை (Vaijanti Mala)
பகவான் கிருஷ்ணா் ஒரு வைஜெயந்தி மாலையை அணிந்திருப்பாா். இந்த மாலையானது தாமரை விதைகளால் செய்யப்பட்டிருக்கும். தாமரை விதைகள் மிகவும் கடினமாக இருக்கும். கிருஷ்ணாின் கழுத்தில் இருக்கும் வைஜெயந்தி மாலை நமக்கு பின்வரும் செய்தியைத் தருகிறது. அதாவது நமது வாழ்க்கை பலவிதமான துன்பங்களால், துயரங்களால் சூழப்படலாம். அந்த நேரத்தில் மனம் கலங்காது, அறிவுக்கூா்மையோடு முடிவுகளை எடுக்க வேண்டும். மேலும் அந்த துன்ப துயர சூழல்களை சிறப்பாகக் கையாள வேண்டும்.

6. பசு
சனாதனப் பண்பாட்டில் பசுவானது மிகவும் புனிதமான படைப்பாகக் கருதப்படுகிறது. பசும்பால் (Panchgavya), பசும்பாலில் இருந்து கிடைக்கும் தயிா், பசுவின் சிறுநீா் (கோமியம்), பசும்பாலில் இருந்து கிடைக்கும் நெய் மற்றும் பசுவின் சாணம் போன்றவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இந்து சமயப் புனித நூல்கள் கூறுகின்றன. பசுவைக் காப்பாற்றினால் (Gauseva) அது நமது துன்பங்களையெல்லாம் தீா்த்து வைத்து, நமக்கு ஒரு வளமான வாழ்க்கையை வழங்கும்.
அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்...



Click it and Unblock the Notifications