Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
உங்க வீட்ல இந்த பொருள் இருந்தா உடனே தூக்கி போடுங்க.. இல்லன்னா அது துரதிர்ஷ்டத்தை கொண்டு வரும்...
வாஸ்துப்படி, வீட்டில் ஒருசில பொருட்களை வைத்திருப்பது கெட்டதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த பொருட்களை வீட்டில் வைத்திருப்பதால், அந்த வீட்டில் குடியிருப்போருக்கு துரதிர்ஷ்டத்தை தான் உண்டாக்கும்.
வீட்டைக் கட்டுவது முதல் வீட்டை அலங்கரிப்பது வரை, மனிதர்கள் சந்தோஷம் மற்றும் செழிப்புடன் நேரடி தொடர் கொண்டுள்ள பல விஷயங்களைப் பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. ஒருவரது வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டுமானால், அவர் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருக்க வேண்டும். வீட்டில் சிறு வாஸ்து தோஷம் இருந்தால், அது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை உருவாக்கிவிடும். இது தவிர வீட்டினுள் வைத்திருக்கும் சில தவறான பொருட்களினாலும் ஒருவர் வாழ்க்கையில் துன்பங்களை சந்திக்க நேரிடும்.

வாஸ்துப்படி, வீட்டில் ஒருசில பொருட்களை வைத்திருப்பது கெட்டதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த பொருட்களை வீட்டில் வைத்திருப்பதால், அந்த வீட்டில் குடியிருப்போருக்கு துரதிர்ஷ்டத்தை தான் உண்டாக்கும். அதுமட்டுமின்றி, அப்பொருட்கள் வீட்டினுள் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இப்போது வீட்டில் எந்த பொருட்களை வைத்திருந்தால், வீட்டில் பிரச்சனை அதிகரிப்பதோடு, துரதிர்ஷ்டத்தை உண்டாக்கு என்பதை காண்போம்.

போர் படங்கள்
ராமாயணம் முதல் மகாபாரதம் வரை எந்த விதமான போர் படங்களையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது. இதுப்போன்ற போட்டோக்களை வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் உள்ளோர் இடையேயான பகையை அதிகரித்து, வீட்டின் அமைதியை சீர்குவைக்கும்.

கள்ளிச்செடி அல்லது முட்கள் நிறைந்த செடி
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் முட்கள் நிறைந்த கள்ளிச்செடியை வளர்க்கக்கூடாது. ரோஜாவில் முட்கள் இருந்தாலும், இந்த ரோஜா செடியைத் தவிர வேறு எந்த முட்கள் நிறைந்த செடிகளையும் வீட்டினுள் வளர்க்கக்கூடாது. வேண்டுமானால் வீட்டின் வெளியே வைத்து வளர்க்கலாம்.

எதிர்மறை படங்கள்
குறிப்பிட்ட சில வகையான போட்டோக்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. அதில் பூக்கள் இல்லாத மரம், கப்பல் நீரில் முழ்குவது, நிர்வாண போட்டோ, போரில் வாள் அசைப்பது, வேட்டையாடும் காட்சிகள், சிறையில் அடைக்கப்பட்ட யானைகள், சோகம் அல்லது அழுவது போன்ற போட்டோக்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. இம்மாதிரியான போட்டோக்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

தாஜ்மஹால்
தாஜ்மஹால் அல்லது அதன் போட்டோவை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. தாஜ்மஹால் என்னதான் உலக அதிசயங்களுள் ஒன்றாக இருந்தாலும், இது ஒரு கல்லறை மற்றும் மரணத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இதை வீட்டில் வைத்திருந்தால், பிரச்சனைகள் அதிகரிப்பதோடு, அது துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.

மிருகங்களின் சிலைகள் மற்றும் ஓவியங்கள்
பன்றி, பாம்பு, கழுதை, சீன ஆந்தை, வௌவால், கழுகு, காகம், புறா போன்ற பறவைகள் அல்லது விலங்குகளின் போட்டோக்கள் அல்லது சிலைகளை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இம்மாதிரியான போட்டோக்கள் அல்லது சிலைகளை வீட்டின் படுக்கை அறையில் வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால் தம்பதிகளிடையே சண்டைகள் அதிகரிக்கும்.

பேய்
மரம் அல்லது உலோகத்தால் ஆன பயங்கரமான பேய் அல்லது பிசாசின் போட்டோ அல்லது சிலைகளை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. அதேப்போல் காட்டு மிருகங்களான புலி, ஓநாய், கரடி, சிங்கம், குள்ளநரி போன்றவற்றின் படங்கள் அல்லது சிலைகளை வீட்டில் வைத்திருக்கக்கூடாது.

உடைந்த கண்ணாடி
வீட்டில் உடைந்த முக கண்ணாடி அல்லது பிற கண்ணாடி பொருட்களை வைத்திருப்பது நல்லதல்ல. இது தவிர உடைந்த கடவுள்களின் சிலைகளையும் வீட்டில் வைத்திருப்பது கெட்டதாகும்.



Click it and Unblock the Notifications
