Latest Updates
-
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
உங்க பர்ஸில் இந்த பொருட்கள் இருந்தா உடனே தூக்கிப் போடுங்க.. இல்ல பண இழப்பு ஏற்படும்...
பொதுவாக பர்ஸ் என்றால் அதில் பணம் மட்டுமின்றி, பிற பொருட்களையும் வைத்திருப்போம். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, பர்ஸில் வைத்திருக்கக்கூடாத சில பொருட்கள் உள்ளன.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, சில பொருட்கள் எதிர்மறை ஆற்றலை கொண்டிருக்கும். அந்த பொருட்களை ஒருவர் வைத்திருந்தால் அவரைச் சுற்றி எப்போதும் எதிர்மறை ஆற்றல் நிறைந்து பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், உங்கள் பர்ஸில் அந்த பணம் நிலைப்பதில்லையா? எப்போதுமே உங்கள் பர்ஸ் பணம் இல்லாமல் தான் உள்ளதா? அப்படியானால் அதற்கு காரணம் உங்கள் பர்ஸில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் பொருட்கள் உள்ளன என்று அர்த்தம்.

பொதுவாக பர்ஸ் என்றால் அதில் பணம் மட்டுமின்றி, பிற பொருட்களையும் வைத்திருப்போம். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, பர்ஸில் வைத்திருக்கக்கூடாத சில பொருட்கள் உள்ளன. அந்த பொருட்களை பர்ஸில் வைத்திருந்தால், அது பணத்தை நிலைக்கவிடாமல் தடுக்கும் மற்றும் நிறைய செலவுகளை வைக்கும். இப்போது எந்த பொருட்களை ஒருவர் பர்ஸில் வைத்திருக்கக்கூடாது என்பதைக் காண்போம்.

கிழிந்த நோட்டுகள் அல்லது தேவையில்லாத பேப்பர்கள்
பலர் தங்கள் பர்ஸில் கிழிந்த நோட்டுகள் அல்லது தேவையில்லாத பேப்பர்களை வைத்திருப்பார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, இம்மாதிரி கிழிந்த நோட்டுகள் அல்லது தேவையில்லாத பேப்பர்கள் பர்ஸில் வைத்திருந்தால், அது ஒருவரின் வருமானத்தை பாதிக்கும். எனவே எப்போதும் பணம் வைக்கும் பர்ஸை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பழைய பில்லை வைத்திருக்கக்கூடாது
ஷாப்பிங் சென்றால் அங்கு கொடுக்கும் பில்லை பலரும் பர்ஸில் வைப்போம். அப்படி வைக்கும் பில்லானது பல மாதங்களாக பலரது பர்ஸில் இருப்பதுண்டு. வாஸ்துப்படி, இப்படி பழைய பில் பர்ஸில் இருந்தால், அது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் மற்றும் பர்ஸில் தேவையில்லாத பில்லை வைத்திருப்பது அசுபமானது. பணம் வைக்கும் இடம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமில்லாத இடத்தில் பணம் வைத்தால், அது லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கி, பர்ஸில் பணம் நிலைக்கவிடாமல் தடுக்கும்.

மறைந்தவரின் போட்டோ கூடாது
மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒருவரின் போட்டோவை தான் நாம் எப்போதும் நம்முடனேயே வைத்துக் கொள்ள விரும்புவோம். அப்படிபட்டவர் ஒருவேளை இறந்துவிட்டால், அவரது போட்டோவை மறந்தும் உங்கள் பர்ஸில் வைத்துக் கொள்ளாதீர்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, இறந்தவரின் போட்டோவை பர்ஸில் வைத்திருக்கக்கூடாது. அப்படி வைத்திருந்தால், அது பண பிரச்சனையை சந்திக்க வைக்கும்.

லட்சுமி தேவியின் போட்டோவை வைத்திருக்கவும்
லட்சுமி தேவி செல்வத்தின் அதிபதியாவார். வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவர் தங்களின் பர்ஸில் லட்சுமி தேவியின் போட்டோவை வைத்திருந்தால், அது செல்வத்தை ஈர்க்கும். அதேப் போல் லட்சுமி யந்திரத்தையும் பர்ஸில் வைத்திருப்பது நல்லது. இது லட்சுமி தேவியை மகிழ்விப்பதோடு, அவரது ஆசியையும் பெற உதவும்.

அட்சதையை பர்ஸில் வைத்திருப்பது நல்லது
உங்கள் பர்ஸில் பணம் நிலைப்பதில்லையா? அப்படியானால் பர்ஸில் சிறிது அட்சதையை வைத்திருங்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, பணம் வைக்கும் பர்ஸில் அட்சதையை வைத்திருக்கும் போது லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைவாள். அதேப்போன்று, பர்ஸில் நோட்டுக்களையும், நாணயங்களையும் ஒன்றாக வைத்திருக்கக்கூடாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications