Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
கால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...!
கால பைரவர் என்ற பெயரில் இருக்கும் கால என்பதன் பொருள் காலத்தை கட்டுப்படுத்துபவர் என்பதாகும். கால பைரவர் பக்தர்களிடம் மிகுந்த இரக்கமுள்ளவர், இவரை வழிபடுவது உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும்.
இந்து மதத்தின் மிக முக்கிய கடவுள் என்றால் அது சிவபெருமான்தான். அழிக்கும் கடவுளான சிவபெருமான் ருத்ர அவதாரமாக இருக்கிறார். சிவனின் ருத்ர அவதாரம் என்றால் அது கால பைரவர்தான். மிகவும் உக்கிர கடவுளான கால பைரவர் அதிக அருள்புரியும் கடவுளாகவும் இருக்கிறார். சிவபெருமானின் இந்த ருத்ர அவதாரத்தைதான் காலம் காலமாக முனிவர்களும், யோகிகளும் வழிபட்டு வருகின்றனர்.

கால பைரவர் என்ற பெயரில் இருக்கும் கால என்பதன் பொருள் காலத்தை கட்டுப்படுத்துபவர் என்பதாகும். இவரின் உருவம் பயங்கரமானதாக இருக்கும். கால பைரவர் பக்தர்களிடம் மிகுந்த இரக்கமுள்ளவர், இவரை வழிபடுவது உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும். கால பைரவர் பல வடிவங்களில் இருக்கிறார். இந்த ஒவ்வொரு வடிவ வழிபாடும் உங்களுக்கு ஒவ்வொரு விதமான நன்மைகளை வழங்கும். இந்த பதிவில் கால பைரவ மந்திரத்தின் அர்த்தங்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

சிதாங்க பைரவா
இந்த பைரவர் தங்க நிறத்தில் காட்சியளிக்கிறார், கையில் நான்கு வகையான ஆயுதங்களுடன் அன்ன பறவையின் மீது காட்சியளிக்கிறார். இவரை வழிபடும் மந்திரம்
" ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரம் ஜாம் கிளாம் க்ளீம் க்ளம்
பிராமி தேவி சமேத்ய அசிதாங்க பைரவாய
சர்வ ஷாப் நிவர்த்திதாய ஓம் ஹ்ரீம் பட் ஸ்வாஹா"

பொருள் மற்றும் பலன்
தாய் பிராமி தேவியுடன் தோன்றி அனைத்து சாபங்களையும் நீக்கும் அசிதாங்க பைரவாவை நான் வணங்குகிறேன் என்பது இதன் அர்த்தமாகும். இந்த மந்திரம் உங்களின் படைப்பாற்றலை அதிகரிக்கும், மேலும் உங்களை அனைத்து துறையிலும் வெற்றியாளர்களாக மாற்றும்.

ருரு பைரவா
இவர் மாணிக்கங்களால் அலங்கரிக்கப்பட்ட பல ஆபரணங்களுடன் வெள்ளை நிறத்தில் தோன்றுவார். கையில் அக்ஸமாலை, அங்குசம், புத்தகம் மற்றும் வீணையுடன் காளை மீது சவாரி செய்வார்.இவரை வழிபாடும் மந்திரம் எதுவெனில்
" ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீம் ஷ்ரீம் ஸ்ரீம் க்ளீம் ஸ்ரீம்
சர்வ ராஜ வசீகராய சர்வ ஜனா மோகனாயா
சர்வ வஸ்யா ஷீக்ராம் ஷீக்ராம் ஸ்ரீம் க்ளீம் ஸ்ரீம் ஸ்வாஹா "

பொருள் மற்றும் பயன்கள்
அனைவரையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக்கூடிய ருரு பைரவாவுக்கு நான் வணங்குகிறேன். வாழ்க்கையின் தடைகளை வெல்ல என்னை ஆசீர்வதிப்பீராக. இந்த பைரவரை வழிபடுவது உங்களின் எதிரிகளை அழித்து அனைவரையும் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும்.

சந்தா பைரவா
இனிமையான முகத்துடன் நீல நிறத்தில் தோன்றும் இவர் மயிலின் மீது சவாரி செய்கிறார். இவரை வழிபடும் மந்திரம்
" ஓம் ஹரீம் சர்வ சக்தி சக்தி ரூபய நீலா வர்ணயா
மகா சந்தா பைரவய நமஹா "

பொருள் மற்றும் பலன்கள்
நீல நிறத்திலும், அனைத்து சக்திகளின் களஞ்சியமாகவும் இருக்கும் சந்தா பைரவாவுக்கு நான் தலைவணங்குகிறேன். இவரை வழிபடுவதால் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் மேலும் உங்களின் எதிரிகளை வெல்லும் வலிமையை வழங்கும்.

குரோத பைரவா
சாம்பல் நிறத்தில் தோன்றும் இவர் நீண்ட வாள் மற்றும் கோடரியுடன் கழுகின் மீது சவாரி செய்கிறார். இவரை வழிபடும் மந்திரம்
" ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் க்ளீம்
சர்வ விக்னா நிவாரணயா மகா க்ரோதா பைரவய நமஹா "

பொருள் மற்றும் பலன்
எல்லா தடைகளையும் நீக்கும் மகா க்ரோதா பைரவுக்கு நான் வணங்குகிறேன். வாழ்க்கையில் சாத்தியமான மற்றும் முக்கியமான முடிவுகளை எடுக்கும் சக்தியை உங்களுக்கு வழங்குகிறது.

உமைந்த பைரவா
கையில் ஆயுதங்களுடன் வெள்ளை நிறத்தில் தோன்றும் இவர் குதிரையின் மீது சவாரி செய்கிறார். இவரை வழிபடும் மந்திரம்
" ஓம் ஹ்ரீம் வராஹி சமேதயா மகா உன்மத்தா பைரவய
ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா "

பொருள் மற்றும் பலன்
தாய் வராஹியுடன் தோன்றும் உன்மத்தா பைரவாவுக்கு நான் தலைவணங்குகிறேன். அவர் என்னை ஒரு சக்திவாய்ந்த பேச்சால் ஆசீர்வதிப்பாராக. இவரை வழிபடுவதால் உங்கள் பேச்சின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவீர்கள் மேலும் உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்டு நடக்கும் ஆற்றலை பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications