Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
குரு வக்ர பெயர்ச்சியால் ஜூலை 29 முதல் அடுத்த 4 மாதம் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
குரு 2022 ஜூலை 29 ஆம் தேதி மீன ராசியில் வக்ரமாகிறார். இந்த வக்ர நிலையில் குரு நான்கு மாத காலம் இருப்பார். குரு மீன ராசியில் வக்ரமாவதால் 12 ராசிகளும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.
நவகிரகங்களில் குரு சுப கிரகமாக கருதப்படுகிறது. இந்த குரு வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இவர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சென்றார். மீன ராசியின் அதிபதி குரு பகவான். குரு தனது சொந்த ராசிக்கே சென்றுள்ளதால், பல ராசிக்காரர்கள் இந்த 2022 குரு பெயர்ச்சியால் ஏராளமான நற்பலன்களைப் பெற்றிருப்பார்கள். ஆனால் இந்த குரு 2022 ஜூலை 29 ஆம் தேதி மீன ராசியில் வக்ரமாகிறார்.

இந்த வக்ர நிலையில் குரு நான்கு மாத காலம் இருப்பார். அதாவது 2022 நவம்பர் 24 ஆம் தேதி வரை இருந்து, பின் மீண்டும் நேர்கதியில் பயணிப்பார். தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதியான குரு கடக ராசியின் வலிமையானவராகவும், மகர ராசியில் பலவீனமானவராகவும் இருப்பார். குரு மீன ராசியில் வக்ரமாவதால் 12 ராசிகளும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும் என்று கூற முடியாது. அதிக செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் சமூகத்தில் அந்தஸ்து மற்றும் மரியாதை அதிகரிக்கும். மதப் பணிகளுக்காகச் செலவுகள் ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் சிறிது காலம் எடுக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். இக்காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை அல்லது குடியுரிமைக்கு முயற்சிக்க விரும்பினால், சில பிரச்சனைகளுக்குப் பிறகு அதில் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைத்தாலும், சற்று சாதகமாக இருக்கும். வருமானம் பெருகும். புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். காதல் திருமணம் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். மூத்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்த சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் வளர அனுமதிக்காதீர்கள். பணியிடத்திலும் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணுங்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் குரு பகவான் இந்த ராசிக்காரர்களுக்கு சிறிது டென்சனைக் கொடுப்பார். இயல்பை விட அதிகமாக கோபம் வரக்கூடும். எனவே உங்கள் பிடிவாதத்தையும் ஆர்வத்தையும் கட்டுக்குள் வைத்திருந்தால், நீங்கள் அதிக வெற்றி பெறுவீர்கள். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும் மற்றும் மரியாதை அதிகரிக்கும். உயரடுக்கு மக்களுடன் தொடர்பு அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் பல எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை அல்லது குடியுரிமைக்காக எடுக்கும் முயற்சிகளும் வெற்றி பெறும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் இளைய சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் வளர அனுமதிக்காதீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் இக்காலம் மிகவும் நன்றாக இருக்கும் என்று கூற முடியாது. ஒவ்வொரு செயலையும் முடிவையும் மிகவும் கவனமாக எடுங்கள். பணியிடத்திலும் சதியால் பலியாவதைத் தவிர்க்கவும். வேலையை முடித்துவிட்டு நேராக வீட்டிற்கு வருவது நல்லது. ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள். அதே சமயம் மூதாதையர் சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். சமூகத்தின் உயரடுக்கு மக்களுடனான தொடர்பு அதிகரிக்கும் மற்றும் இக்காலத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் குரு பகவான் நற்பலன்களை வழங்குவார். திருமண வாழ்வில் இனிமை அதிகரிக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளும் பெற்றி பெறும். இக்காலத்தில் வியாபாரம் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மத்திய அல்லது மாநில அரசு துறைகளில் பயிற்சி பெற்ற பணிகள் முடிக்கப்படும். நீங்கள் எந்த வகையான அரசாங்க டெண்டருக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் பல எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். இல்லையெனில் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். உடலில் ஏற்படும் காயங்களை புறக்கணிக்காதீர்கள். வெளிநாட்டு பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிறைய செலவுகளை செய்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்கும். குழந்தைகள் தொடர்பான கவலை அதிகரிக்கும். காதல் திருமணம் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உங்கள் உறவு மோசமடைய விடாதீர்கள். அரசு வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக அமையும்.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் வெற்றிகள் கிடைத்தாலும், மன அழுத்தத்தையும் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து கெட்ட செய்திகளைப் பெறுவீர்கள். இக்காலத்தில் பயணிக்கும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் உங்களின் பொருட்கள் திருட்டுப் போகலாம். பெற்றோரின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். நீங்கள் வீடு மற்றும் வாகனம் வாங்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் வணிகத்தில் சிறந்த வெற்றி கிடைக்கும். ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயற்சிக்கிறீர்கள் என்றால், அதற்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். எடுத்த முடிவும், செய்த பணியும் பாராட்டப்படும். உங்கள் ஆற்றலின் உதவியால், கடினமான சூழ்நிலைகளை எளிதில் சமாளிப்பீர்கள். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளின் பொறுப்பு நிறைவேறும். திருமணமான தம்பதியருக்கு குழந்தை பிறக்கும் யோகம் உண்டு.

கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் குரு நற்பலன்களை வழங்குவார். பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும். மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். அதே வேளையில் உங்கள் சொந்தக்காரர்கள் உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பார்கள். பணியிடத்திலும் சதியால் பலியாவதைத் தவிர்க்கவும். வேலையை முடித்துவிட்டு நேராக வீட்டிற்கு வருவது நல்லது. நீதிமன்றங்கள் தொடர்பான விவகாரங்களை வெளியிலேயே தீர்த்துக் கொள்வது நல்லது.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் குடும்பத்தில் தகராறு மற்றும் மன உளைச்சல்களை சந்திக்க நேரிடும். எனவே ஒவ்வொரு செயலையும் முடிவையும் மிகவும் கவனமாக எடுங்கள். உணர்ச்சிபூர்வமாக எடுக்கும் முடிவுகள் தீங்கு விளைவிக்கும். பிள்ளைகளின் பொறுப்பு நிறைவேறும். புதுமண தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இக்காலத்தில் உங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்தினால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications