Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
மீனத்தில் குரு வக்ர நிவர்த்தியடைவதால் நவம்பர் 24 முதல் இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்...
மீன ராசியில் குரு வக்ர நிவர்த்தி அடைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே இருக்கும். அதில் பல ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெற்றாலும், சில ராசிக்காரர்கள் சற்று சிரமத்தை சந்திக்க நேரிடும்.
நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு. இந்த குரு 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து தனது சொந்த ராசியான மீன ராசிக்கு சென்றார். அதன் பின் 2022 ஜூலை 29 ஆம் தேதி குரு மீன ராசியில் வக்ரமாகி பயணிக்கத் தொடங்கினார். இந்நிலையில் குரு 2022 நவம்பர் 24 ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

மீன ராசியில் குரு வக்ர நிவர்த்தி அடைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே இருக்கும். அதில் பல ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெற்றாலும், சில ராசிக்காரர்கள் சற்று சிரமத்தை சந்திக்க நேரிடும். இப்போது மீன ராசியில் குரு வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் பணங்களால் அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பணம் திருட்டுப் போக வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக, பணியிடத்தில் புதிய சவால்களை சந்திப்பீர்கள். வேலையில் அழுத்தத்தை உணர்வீர்கள். வேலையை மாற்ற வேண்டியிருக்கும். வியாபாரத்தில் லாபத்தைக் காண முடியாது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். இக்காலத்தில் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், சிந்தித்து எடுக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மூட்டு வலி, இருமல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் அதிக செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பணியிடத்தில் அதிகப்படியான வேலைப்பளுவால் சிரமப்படுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் வேலைக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்காது. வியாபாரத்தில் லாபம் குறைவாக இருக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தம் செய்வதைத் தவிர்க்கவும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் தீவிரமான வாக்குவாதங்களில் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கழுத்து வலி, தோள்பட்டை வலி மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் இக்காலத்தில் தேவையில்லாத செலவுகளை சந்திக்க நேரிடும். வருமானம் குறைவாகவும், செலவுகள் அதிகமாகவும் இருக்கும். இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காது. வியாபாரிகளுக்கு நஷ்டத்தை சந்திக்க நேரிடும். கூட்டு தொழில் செய்பவர்கள், கூட்டாளருடன் பிரச்சனைகளை சந்திப்பார்கள். காதல் முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள், வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனையை சந்திப்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சளி, இருமல் மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

குருவால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கான பரிகாரங்கள்:
* வியாழக்கிழமைகளில் சிவபெருமானுக்கு விளக்கேற்றி 'ஓம் குருவே நமஹ' என்னும் மந்திரத்தை 21 முறை சொல்லுங்கள்.
* அனுமன் சாலிசாவை தினமும் பாராயணம் செய்யுங்கள்.
* வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு பகவானை வழிபடுங்கள்.
* வியாழக்கிழமைகளில் ஏழை எளியோருக்கு கொண்டைக்கடலை அல்லது கடலைப் பருப்பை தானம் செய்யுங்கள்.
* வியாழக்கிழமை அன்று மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு பகவானை வணங்கி, மஞ்சள் நிற உணவுகளை தானம் செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications