Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
குடியரசு தினத்தில் டாக்டர் அம்பேத்கருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தெரியுமா?
இந்தியா தனது முதல் குடியரசு தினத்தை ஜனவரி 26, 1950 அன்று கொண்டாடியது. குடியரசு தின அணிவகுப்பு பொதுவாக ராஜ்பாத்திலிருந்து தொடங்கி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் முடிவடையும்.
குடியரசு தினம், சுதந்திரம் தினம் என்றால், குழந்தைகளுக்கு முதலில் ஞாபகம் வருவது கொடியேற்றுவது மிட்டாய் தருவது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் மட்டுமல்ல சில பெரியவர்களும் கூட அப்படிதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்பு இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாள் இந்த குடியரசு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் 73 ஆவது குடியரசு தினம் நாளை( ஜனவரி 26) வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது.

சுதந்திர தினம் எதற்காகக் கொண்டாடுகிறோம் என்ற கேள்விக்கு நிறைய பேர் அதற்கான பதிலை கூறுவார்கள். ஆனால், குடியரசு தினம் எதற்குக் கொண்டாடுகிறோம் என்றால், அதற்கு பதில் வருவது மிகக்குறைவு. குடியரசு தினத்தின் முக்கியத்துவத்தையும், அதற்கு பின் இருக்கும் உழைப்பும் பலருக்குத் தெரிவதில்லை. இங்கு குடியரசு தினம் பற்றியும் அதற்குப் பின்னால் இருக்கும் சில சுவாரஸ்யமான உண்மை தகவலையும் கொடுத்துள்ளோம்.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
உலக தலைவராகப் போற்றப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்தான் இந்நாளில் அதிகமாக நினைவுக்கூறப்பட வேண்டியவர். இன்று மட்டுமல்ல என்றும் அவர் நினைவுக்கூறப்பட வேண்டியவர்தான். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை சாதிய தலைவராகப் பார்க்கும் இந்த இந்திய சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மக்களின் உரிமைகளுக்காகவும் தன் உடலை வருத்தி இரவுபகலாக எழுதிமுடித்தார் சட்டம்.

கூண்டிற்குள் சிலை
மனிதர்களுக்கு மட்டுமல்லாது விலங்குகளின் நலன்கள் மீதும் அக்கறை கொண்டு சட்டம் இயற்றிய அம்பேத்கரை மனிதர்களாக வாழும் சில விலங்குகள் புரிந்துகொள்வதில்லை. பேச்சுரிமை, எழுத்துரிமை, சுதந்திரம் எனத் தனிமனிதனுக்கான அடிப்படை உரிமைகளை இயற்றி கொடுத்த டாக்டர் அம்பேத்கரின் சிலை இன்று வரை சுதந்திரமாக வைக்கப்படாமல், கூண்டிற்குள்தான் வைக்கப்பட்டிருக்கிறது.

குடியரசு தினம்
இந்தியா தனது முதல் குடியரசு தினத்தை ஜனவரி 26, 1950 அன்று கொண்டாடியது. குடியரசு தின அணிவகுப்பு பொதுவாக ராஜ்பாத்திலிருந்து தொடங்கி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் முடிவடையும்.

வீரவணக்கம்
நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் இந்திய பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுவார்.

அரசியலமைப்பு
1947 ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு ஒன்றை உருவாக்கி அதன் தலைவராக டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, அம்பேத்கர் மற்றும் அவரது குழுவினர் இந்திய அரசியலமைப்பை இரண்டு ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்களில் உருவாக்கி கொடுத்தனர்.

இரண்டு மொழிகளில்...
இந்திய அரசியலமைப்பில் இரண்டு பிரதிகள் உள்ளன. ஒன்று ஆங்கிலத்திலும், மற்றொன்று இந்தியிலும் உள்ளன. இவை இரண்டும் கையால் எழுதப்பட்டவை. அரசியலமைப்பின் மூலங்கள் இந்தியாவின் பாராளுமன்ற இல்லத்தில் இன்னும் பாதுகாக்கப்படுகின்றன. ஜனவரி 24 ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட இரண்டு நிரந்தர அரசியலமைப்புமும் கையெழுத்திடப்பட்டது.

94 திருத்தங்கள்
1950 முதல் இன்று வரை அரசியலமைப்பில் கிட்டத்தட்ட 94 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதல் ஜனாதிபதி
டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1950 ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் பதவியேற்ற முதல் ஜனாதிபதி ஆவார்.

உலகின் நீண்ட அரசியலமைப்பு
இந்திய அரசியலமைப்பு உலகின் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பாகும். இதில் 444 கட்டுரைகள் 22 பகுதிகளாகவும் 12 அட்டவணைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசு சட்டம்
இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, இந்தியா பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்திய அரசு சட்டம் 1935 ஐ பின்பற்றியது.

பாடல்
குடியரசு தின அணிவகுப்பின் போது, ‘என்னுடன் இருங்கள்(Abide With Me)' என்ற ஒரு பாடல் மிகவும் பிரபலமானது. இந்த பாடல் மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த பாடல்.

ராஜ்காட்
1950-54 வரை, இர்வின் ஸ்டேடியம் (தற்போது தேசிய அரங்கம் என்று அழைக்கப்படுகிறது), செங்கோட்டை, ராம்லீலா மைதானம் மற்றும் கிங்ஸ்வே ஆகியவற்றில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இது முதன்முதலில் ராஜ்காட்டில் 1955இல் கொண்டாடப்பட்டது.

ஜனாதிபதி சுகர்னோ
இந்தோனேசியாவின் முதல் ஜனாதிபதி சுகர்னோ இந்தியாவின் முதல் குடியரசு தினத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கொடி ஏற்றுதல்
இந்திய குடியரசு தினத்தன்று, ஒவ்வொரு ஆண்டும், கொடி ஏற்றுதல் விழாவின் போது, தேசிய கொடி மற்றும் ஜனாதிபதிக்கு 21 குண்டு முழக்கம் செய்து மரியாதை வழங்கப்படுகிறது. குடியரசு தின உரை இந்திய ஜனாதிபதியால் வழங்கப்படுகிறது. சுதந்திர தினத்தில் இந்தியப் பிரதமர் உரையாற்றுவார். நடப்பாண்டுக்கான குடியரசு தின அணிவகுப்புக்கான 56 திட்டங்களில் 22 அட்டவணையை பாதுகாப்பு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

பெண்கள்
பெண் தின அதிகாரி இராணுவ தின அணிவகுப்புக்குத் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும். குடியரசு தின அணிவகுப்பில் வரலாற்றில் முதல்முறையாக முழுவதும் பெண்கள் நிறைந்த சிஆர்பிஃப் பைக்கர்கள் ஸ்டாண்ட் அரங்கத்தை நிகழ்த்துகிறார்கள்.

விருதுகள்
கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் குடியரசு தின விழாவில் வழங்கப்படுகின்றன. பாரத் ரத்னா, பத்ம பூஷண், கீர்த்தி சக்ரா போன்ற தேசிய விருதுகளில் பெரும்பான்மை குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது.

இந்திய விமானப்படை
குடியரசு தினத்தன்று, இந்திய விமானப்படை நடைமுறைக்கு வந்தது. இதற்கு முன்னர், இந்திய விமானப்படை ஒரு கட்டுப்பாட்டு அமைப்பாக இருந்தது, ஆனால் குடியரசு தினத்திற்குப் பிறகு, இந்திய விமானப்படை ஒரு சுயாதீன அமைப்பாக மாறியது.



Click it and Unblock the Notifications











