Latest Updates
-
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா
900 பேரை கொடூரமாக கொன்ற இந்தியாவின் ஆபத்தான தொடர் கொலைகாரன்... இரத்தத்தை உறையவைக்கும் வரலாறு...!
இந்தியாவிலும் சார்லஸ் சோப்ராஜ், ஆட்டோ சங்கர், சயனைடு மோகன் போன்ற தொடர் கொலைகாரரர்கள் இருந்தனர். ஆனால் இவர்கள் எல்லாரையும் விட பயங்கரமான ஒரு தொடர் கொலைக்காரன் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தான்.
கொலை என்பது பொதுவாக ஆத்திரத்தில் செய்யப்படும் விஷயமாகும். ஆனால் தொடர் கொலைகள் என்பது அவசரத்திலோ அல்லது ஆத்திரத்திலோ செய்யப்படுவது இல்லை. திட்டமிட்டு தங்களின் திருப்திக்காகவோ அல்லது குறிக்கோளுக்காகவோ செய்யப்படுவதாகும். தொடர் கொலைகள் என்பது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில்தான் நடக்கும் என்று நினைத்தால் அது தவறாகும்.

இந்தியாவிலும் சார்லஸ் சோப்ராஜ், ஆட்டோ சங்கர், சயனைடு மோகன் போன்ற தொடர் கொலைகாரரர்கள் இருந்தனர். ஆனால் இவர்கள் எல்லாரையும் விட பயங்கரமான ஒரு தொடர் கொலைக்காரன் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தான். அவனால் கிட்டதட்ட 931 பேர் கொல்லப்பட்டனர். இரத்தம் உறைய வைக்கும் இந்த குற்ற வரலாற்றின் பின்னால் இருக்கும் உண்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தக் பெஹ்ராம்
கொள்ளைக்காரர்களை குறிக்கும் ஆங்கிலச் சொல்லான 'Thug' உண்மையில் 'Thag' என்ற ஹிந்தி சொல்லில் இருந்து மருவியதாகும். உண்மையில் இந்த வார்த்தை வடஇந்தியாவின் அவுத் பகுதியில் சுற்றித்திரிந்த கொள்ளைக்காரர்கள் மூலம் உருவானது. இந்த கொள்ளைக்கூட்டத்தின் தலைவரான தக் பெஹ்ராம், கொள்ளைக்காரர்களின் ராஜா என்று அழைக்கப்பட்டார். மனித வரலாற்றிலேயே தனி ஆளாக 931 பேரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர் இவர்தான். இந்த எண்ணிக்கை தோரயமானது மட்டுமே.

கொலைக்கான காரணம்
இவர்கள் மரண தெய்வமான காளியை வணங்கினார்கள். இவர்கள் அப்பாவிகளைக் கொல்வது தங்கள் மதக் கடமையாகப் பார்த்தார்கள். அவர்கள் செய்த கொலைகள் காளியை மகிழ்ச்சி அடைய வைக்கும் என்று அவர்கள் நம்பினர். உண்மையில் அவர்கள் செய்த கொலைகள் எதுவும் பணத்திற்காகவோ அல்லது இன்பத்திற்காகவோ அல்ல. அவர்களின் கடவுள் நம்பிக்கையால்தான்.

தக் பெஹ்ராமின் குழந்தைப்பருவம்
பெஹ்ராம் தனது குழந்தைப்பருவத்தில் மிகவும் கூச்சசுபாவம் உடையவராகவும், மற்றவர்களுடன் பழக விரும்பாதவராகவும் இருந்தார். அதற்குப்பின் அவர் தன்னைவிட 25 வயது மூத்தவரான சையத் அமீர் அலி என்ற தக் உடன் நட்பை வளர்த்துக் கொண்டார். தக் உலகத்திற்கு பெஹ்ராமை அறிமுகப்படுத்தியவரும் அவரை அவர்களுக்கு தலைவராக்கியதும் இவர்தான். பெஹ்ராம் தனது முதல் கொலையை 10 வயதில் தொடங்கியதாக கூறப்படுகிறது. 25 வது வயதில் தக் தலைவராகி தன்னுடைய முழுநேரப் பணியாக கொலை மற்றும் கொள்ளையை மாற்றிக்கொண்டார்.

ஒரே மாதிரியான கொலை
பெஹ்ராம் குழுவை பற்றி அறிந்த வியாபாரிகள் தங்கள் உயிருக்கு பயந்து, டெல்லி, ஜபல்பூர் மற்றும் குவாலியர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் பெஹ்ராம் மற்றும் அவரது சகாக்கள் இருந்த பாதையை தவிர்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் கொலை செய்த முறையானது எளிமையானது ஆனால் ஆபத்தானது. தக் பெஹ்ராம் தனது கைகளால் 125 பேரை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள கொலைகள் இவரின் மேற்பார்வையில் இவரின் கண் முன்னால் செய்யப்பட்டது.

எப்படி கொலை செய்தார்கள்?
இவர்கள் கொலை செய்வதற்கு முன் மூன்றாக பிரிவார்கள். ஒருவர் காலை பிடித்துக்கொள்ள மற்றொருவர் தலையை பிடித்துக்கொள்ள பெஹ்ராம் தனது கைக்குட்டையால் கழுத்தை நெரித்துக் கொலைசெய்வார். அவரது மஞ்சள் கைக்குட்டையில் ஒரு பதக்கம் இருந்தது. அந்த பதக்கம் கழுத்தை இறுக்கி உயிரைப் பறிக்கும். இவர்கள் ஆண்களை மட்டுமே கொலை செய்தார்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்வதைத் தவிர்த்தார்கள். ஏனெனில் இந்த கொலை அவர்களின் தெய்வத்திற்காக செய்யப்பட்டது.

மர்மமாக தொலைந்து போனவர்கள்
1800 களின் முற்பகுதியில், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள், வீரர்கள், ஒரு முழு வேன் கூட மர்மமான முறையில் காணாமல் போயினர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் காவல்துறையினர் குழப்பமடைந்தனர். 809 ஆம் ஆண்டில், மர்மத்தை கண்டுபிடிக்கும் பொறுப்பில் கேப்டன் வில்லியம் ஸ்லீமன் நியமிக்கப்பட்டார். கேப்டன் ஸ்லீமானின் விசாரணையில் பெஹ்ராம் மற்றும் அவரது 200 பேர் கொண்ட குழு இந்த தாக்குதல்களை நடத்தி வருவது தெரியவந்தது. டெல்லி-ஜபல்பூர் பாதையில் பெஹ்ராம் மற்றும் பிற கொள்ளையர்களைப் பிடிக்க அவர்கள் பல பொறிகளை இட்டனர்.

திடுக்கிடும் உண்மைகள்
ஸ்லீமன் பெஹ்ராமை கைது செய்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, கொள்ளைக்காரர்கள் வர்த்தகர்களாக மாறுவேடத்தில் பயணிப்பார்கள் என்று போலீசாருக்குத் தெரிய வந்தது. அவர்கள் பயணிகள் மற்றும் வியாபாரிகளைச் சுற்றி 'ரமோசி' என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட சைகை மொழியில் உரையாடுவார்கள். வருகின்ற வாகனத்தைப் பற்றி குள்ளநரி அழுவது போன்ற ஒலி மூலம் தங்கள் குழுவுக்கு தெரிவிப்பார்கள். அழுகையைக் கேட்டு, மஞ்சள் கைக்குட்டையுடன் பெஹ்ராமும் அவரது கும்பலும் வருவார்கள். இரக்கமின்றி அவர்களைக் கொன்ற பிறகு, அவர்களின் உடல்கள் அருகிலுள்ள கிணற்றில் வீசப்படும்.

பெஹ்ராமின் முடிவு
75 வயதான பெஹ்ராம் இறுதியாக 1840 இல் பிடிபட்டார். அந்த நேரத்தில் அவர் சுமார் 931 பேரைக் கொலை செய்ததாக கூறப்பட்டது. இருப்பினும் அவர் 125 பேரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார், மேலும் 150கொலைகளுக்கு துணையாக இருந்ததாக ஒப்புக்கொண்டார். இறுதியில் பெஹ்ராம் தூக்கிலிடப்பட்டார், குறைந்தது 65 கொலைகளில் பயன்படுத்தப்பட்டதாக அறியப்பட்ட அவரது பதக்கம் இன்றும் ஒரு தனியார் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. உலக தொடர் கொலைகாரர்கள் பட்டியலில் எப்போதும் பெஹ்ராமின் பெயர் கண்டிப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications