For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுதந்திர தின விழா 2021: இந்தியாவ பத்தி என்ன தெரியும்? இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்...

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கீழே சில வினாடி வினாக்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்தியாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்பதை இந்த கட்டுரையில் விளக்கமாகப் பாருங்கள்.

|

இந்தியா தன்னுடைய 75 ஆவது சுதந்திர தினத்தை 2021 ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடுகிறது. 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தற்போது வரை இந்தியாவை கொஞ்சம் உற்று கவனித்தால் நிறைய வளர்ச்சித் திட்டங்களும் புதுப்புது நம்பிக்கை அலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதை நம்மால் பார்க்க முடியும்.

75th Independence Day 2021 Quiz: How Much Do You Know About India?

நாளுக்கு நாள் நிறைய கனவுகளை இந்தியா சுமந்து கொண்டே தான் வருகிறது. இந்தியாவுக்கு நள்ளிரவில் தான் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் அந்த சுதந்திரத்துக்குப் பின்பக்கம் எவ்வளவு கனவுகளும் வலியும் வலிமையும் அதேபோல், எவ்வளவு வரலாறு இருந்திருக்கும் என்று நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவைப் பற்றியும் சுதந்திர கால கட்டத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கும் தான் தேசப்பற்று இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய இளைஞர்களுக்கு இந்தியாவைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்று நினைக்கிறார்கள். இதோ அதை நிரூபிப்பதற்காக இந்த கீழ்வரும் வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

கேள்வி 1

இந்தியாவில் கொடிகள் உற்பத்தி செய்ய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் எது?

அ. கர்நாடக காதி கிராமோதய சம்யுக்த சங்கம்
ஆ. தாவங்கேரே சேரகா காதி கிராம தொழில்கள் சங்கம்
இ. தார்வாட் மாவட்ட இணைப்பு கிராம தொழில்கள் சங்கம்
ஈ. ஸ்ரீநந்தி காதி கிராமோதய சங்கம்

கேள்வி 2

இந்தியாவின் தேசியக்கொடி முதல்முறையாக எப்போது எங்கு ஏற்றப்பட்டது?

அ. ஆகஸ்ட் 7, 1906, பார்சி பாகன் சதுக்கம், கொல்கத்தா
ஆ. ஆகஸ்ட் 8, 1906, செங்கோட்டை, புதுதில்லி
இ. ஆகஸ்ட் 9, 1906, தி கேட் வே, மும்பை
ஈ. ஆகஸ்ட் 10, 1906, ஜாலியன் வாலாபாக், பஞ்சாப்

கேள்வி 3

தேசிய கீதத்தை எழுதியவர் யார்?

அ. ரவீந்திரநாத் தாகூர்
ஆ. வல்லபபாய் படேல்
இ. பக்கிம் சந்திர சாட்டர்ஜி
ஈ. சுபாஷ் சந்திர போஸ்

கேள்வி 4

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?

அ. மகாத்மா காந்தி
ஆ. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்
இ. டாக்டர் ராஜேந்திர பிரசாத்
ஈ. பண்டித ஜவகர்லால் நேரு

கேள்வி 5

சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்ற முழக்கத்தை முன் மொழிந்தவர் யார்?

அ. மகாத்மா காந்தி
ஆ. லால் பகதூர் சாஸ்திரி
இ. பால கங்காதர திலகர்
ஈ. பண்டித ஜவகர்லால் நேரு

கேள்வி 6

ஜன கண மன என்னும் தேசியகீதப் பாடலை மக்களவையில் முதன் முதலில் எப்போது பாடப்பட்டது?

அ. 1950
ஆ. 1947
இ. 1952
ஈ. 1931

கேள்வி 7

இந்திய பாராளுமன்றத்தை வடிவமைத்தவர் யார்?

அ. ஹபீஸ் கான்ட்ராக்டர் & ஹிமான்ஷு பரிக்
ஆ. ஆக்செல் ஹெய்க் & ஃபிரடெரிக் வில்லியம் ஸ்டீவன்ஸ்
இ. சர் எட்வின் லுடியன்ஸ் மற்றும் சர் ஹெர்பர்ட் பேக்கர்
ஈ. ஹென்றி இர்வின் & சாமுவேல் ஸ்விண்டன் ஜேக்கப்.

கேள்வி 8

சுதந்திர இந்தியாவின் முதல் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் யார்?

அ. ஜவகர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபபாய் படேல்
ஆ. மகாத்மா காந்தி மற்றும் அன்னை தெரசா
இ. ராஜாஜி, ராதாகிருஷ்ணன் மற்றும் சி.வி. ராமன்
ஈ. ராஜேந்திர பிரசாத், ஷாகீர் உசேன் மற்றும் பாண்டுரங்க வாமன் கனே

கேள்வி 9

முதல் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் யார்?

அ. பகத் சிங்
ஆ. கேப்டன் மோகன் சிங்,
இ. சுபாஷ் சந்திரபோஸ்
ஈ. வல்லபபாய் படேல்

கேள்வி 10

மூவர்ணக்கொடியில் உள்ள அசோகர் சக்கரத்தின் பொருள் தான் என்ன?

அ. தர்மத்தைக் குறிக்கிறது
ஆ. மதத்தைக் குறிக்கிறது
இ. கிருஷ்ணரின் சக்கரத்தைக் குறிக்கிறது
ஈ. அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது

கேள்வி 11

செய் அல்லது செத்துமடி என்னும் வசனத்துக்கு சொந்தக்காரர் யார்?

அ. மகாத்மா காந்தி
ஆ. ஜவகர்லால் நேரு
இ. பால கங்காதர திலகர்
ஈ. சுபாஷ் சந்திர போஸ்

கேள்வி 12

சிறையில் உண்ணாவிரதம் இருந்தபடியே இறந்து போன சுதந்திரப் போராட்ட வீரர் யார்?

அ. பகத் சிங்
ஆ. பிபின் சந்திர பால்
இ. ஜதிந்திர நாத் தாஸ்
ஈ. சுபாஷ் சந்திர போஸ்

பதில்கள்

பதில் தெரியாமலும் நமக்குத் தெரிஞ்ச பதில் சரியான்னும் கொஞ்சம் குழப்பமா இருக்கா? இதோ மேலே கொடுக்கப்பட்ட கேளிவிகளுக்காக பதில்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

1. அ,
2. அ
3. அ,
4. இ
5. இ
6. அ
7. இ
8. இ
9. ஆ
10. அ
11. அ
12. ஈ

English summary

75th Independence Day 2021 Quiz: How Much Do You Know About India?

India is celebrating the 74th Independence Day on 15th August 2020. The country is currently under a wave of new hopes and dreams, just like it was on 15th August 1947, when it gained independence from the British Raj at the stroke of midnight.
Desktop Bottom Promotion