Latest Updates
-
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம்
எதுனாலும் பிரம்ம முகூர்த்தத்துல பண்ண சொல்றாங்களே அதோ சீக்ரெட் என்னனு தெரியுமா? இதுதான்...
பிரம்ம முகூர்த்தத்தின முக்கியத்துவம் என்ன, அதிலுள்ள ரகசியங்கள் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.
எந்த நல்ல காரியம் பண்ணினாலும் பிரம்ம முகூர்த்தத்துல பண்ணா அது ஜெயமாகும். நல்லபடியா நடக்கும். குறிப்பாக கல்யாணம் போன்ற வாழ்வியல் நிகழ்ச்சிகளைச் செய்கின்ற பொழுது பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் வாழ்க்கை செழிக்கும். அந்த சமயத்தில் செய்கின்ற எல்லா காரியங்களும் நன்மையில் முடியும் என்று சொல்வார்கள். பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 4 மணி முதல் 6 வரை.
பெரியவங்க வீட்ல அதிகாலைல எழுந்திரு. அப்ப தான் அன்னைக்கு நாள் உருப்படும்னு சொல்றாங்களே அது வெறும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம்னு நினைக்கறீங்களா? அவர்கள் சொல்வதற்குப் பின்னால் சில ஆன்மீகக் காரணங்களும் உண்டு. அதைப் பற்றி விளக்கமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அதிகாலை எழுதல்
அதிகாலையில் தூங்கி எழுந்திருக்கும் பொழுது, சூரியனிடம் இருந்து பூமிக்கு வந்து சேருகின்ற சூரியக் கதிர்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அந்த கதிர்கள் நம்முடைய உடலில் படும்போது நரம்புகள் புத்துணர்ச்சி அடையும். கண்களுக்கும் தெளிவு கிடைக்கும். அதனால் தான் அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்யச் சொல்கிறார்கள்.

சனிக்கிழமைகளில்...
சனிக்கிழமையன்று அதிகாலை நேரத்தில் தான் சனி பகவானுடைய கிரகண சக்தி அதிக பலம் பெற்றிருக்குமாம். அதனால் தான் பெரியவர்கள் சனிக்கிழமைகளில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்கிறார்கள்.

வேதங்கள்
ரிக் வேதத்தில் உஷஸ் என்னும் பெண் தெய்வம் இருக்கிறது. பொதுவாக இந்த பெண் தோன்றிய பிறகு தான் தினமும் சூரிய உதயம் நடக்குமாம். அதனால் தான் அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தேவதையினுடைய செழிப்பான கதிர்வீச்சுக்கள் பூமியை வந்தடைகிற அதிகாலை நேரத்தில் அதனால் தான் குளித்து உடலையும் மனதையும் தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எப்போது ஆரம்பமாகும்?
சூரியன் பூமியில் உதிப்பதற்கு முன்பாக 48 நிமிடங்களுக்கு முன்பான நேரம் தான் பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்லப்படுகிறது. பிரம்ம முகூர்த்தம் என்பது படைக்கும் கடவுளான பிரம்மனைக் குறிக்கிறது. பிரம்மன் தான் நம்முடைய நாக்கினில் சரஸ்வதியை அமர வைத்து, 24 கலைகளையும் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.

திருமணம், கிரகப் பிரவேசம்
எந்தெந்த காரியங்களை பிரம்ம முகூர்த்தத்தில் செய்யலாம் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். எந்த காரியமாக இருந்தாலும் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யலாம். குறிப்பாக திருமணம் மற்றும் வீடு கிரகப் பிரவேசம் ஆகியவற்றை பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது மிகவும் நன்மை தரும்.

ஏன் இந்த பெயர்
பொதுவாக இறவில் உறங்கும் உயிர்கள் அடுத்த நாள் காலையில் உயிர்ப்பித்து தூங்கி எழுந்து இயங்குதல் தான் சிருஷ்டி படைத்தல் என்பார். இந்த படைத்தலைச் செய்வது பிரம்மன் என்பதால் தான் அதிகாலை நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications