Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
சனிக்கிழமைகளில் காலை எழுந்ததும் 'இத' பார்த்தால், அந்த நாள் முழுவதும் அதிர்ஷ்டமான நாளா இருக்குமாம்....
மத நம்பிக்கைகளின் படி, சனிக்கிழமையில் காலை எழுந்ததும் பின்வரும் 3 விஷயங்களைப் பார்த்தால், அன்றைய தினம் மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
சனிக்கிழமை நீதிமான் சனி பகவான் மற்றும் அனுமனுக்கு உரிய நாளாகும். இதில் சனி பகவானைக் கண்டு பலருக்கும் அச்சம் இருப்பதால், சனிக்கிழமைகளில் சனி பகவானின் அருள் கிடைக்க வேண்டுமென பல விஷயங்களை மக்கள் செய்து வருகிறார்கள். ஆனால் சனி பகவான் தவறு செய்பவர்களை மட்டுமே தண்டிப்பார். ஏழைகள் மற்றும் வயதானவர்களை நன்றாக நடத்துபவர்களுக்கு சனிபகவான் எப்போதும் நல்லதே செய்வார். இதுமட்டுமின்றி, அனுமன் சனிபகவானின் நண்பர் என்பதால், அனுமனை வணங்குபவர்களுக்கு சனி பகவான் எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்துவதில்லை. எனவே சனிக்கிழமைகளில் அனுமனை வணங்குவதுடன், அனுமன் சாலிசாவை சொல்வது நல்லது.

மத நம்பிக்கைகளின் படி, சனிக்கிழமையில் காலை எழுந்ததும் பின்வரும் 3 விஷயங்களைப் பார்த்தால், அன்றைய தினம் மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். அதாவது இந்த 3 விஷங்களை சனிக்கிழமைகளில் ஒருவர் காலையில் எழுந்ததும் பார்த்தால், சனி பகவான் உங்களை மகிழ்விப்பார் என்று அர்த்தம். இப்போது அந்த 3 விஷயங்கள் என்னவென்பதைக் காண்போம். அதோடு சனிக்கிழமைகளில் குறிப்பிட்ட பொருட்களை வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால் சனிபகவானின் கோபத்திற்கு ஆளாகக்கூடுமாம். அந்த பொருட்கள் என்னவென்பதையும் காண்போம்.

பிச்சைக்காரரைக் காண்பது
சனிக்கிழமைகளில் ஒருவர் காலையில் எழுந்ததும் பிச்சைக்காரரைக் காண்பது ஒரு நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. சனிக்கிழமைகளில், ஏழைகளுக்கு தானம் வழங்குங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், சனி பகவான் சந்தோஷமடைவார் மற்றும் உங்கள் செல்வ நிலையை உயர்த்துவார். முக்கியமாக சனிக்கிழமைகளில் ஏழை மக்கள் அல்லது பிச்சைக்காரரை அவமதிக்காதீர்கள். இல்லாவிட்டால், நீங்கள் சனி பகவானின் கோபத்திற்கு உள்ளாவீர்கள்.

பெருக்குபவர்கள்
சனிக்கிழமை காலையில் எழுந்ததும் துடைப்பத்தால் வாசலைப் பெருக்குபவர்கள் அல்லது துப்புரவாளர்கள் துடைப்பத்தால் பெருக்குவதைப் பார்த்தால், அது நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. சனிக்கிழமைகளில் தானம் வழங்குவது நல்லது. எனவே இந்நாளில் துப்புரவு பணியாளர்களுக்கு கருப்பு நிற துணி அல்லது உங்களால் முடிந்த பணத்தை வழங்குங்கள். இதைச் செய்வதன் மூலம், சனி பகவானின் ஆசீர்வாதம் கிடைக்கும் மற்றும் உங்களின் வேலைகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். இது தவிர, உங்களின் பணிகள் அனைத்தும் சுமூகமாக முடிக்கப்படும்.

கருப்பு நாய்
சனிக்கிழமைகளில் காலையில் எழுந்ததும் கருப்பு நாயைக் கண்டால், வருத்தப்படாதீர்கள். கருப்பு நாய் கண்ணில் தென்படுவது ஒரு நல்ல அறிகுறி. ஏனெனில் சனி பகவானின் வாகனத்தின் நிறம் கருப்பு. எனவே சனிக்கிழமைகளில் கருப்பு நிற நாயைக் கண்டால், நெய் ரொட்டி அல்லது பிஸ்கட் வாங்கிக் கொடுங்கள். இது சனி பகவானை மட்டுமல்ல, ராகு மற்றும் கேதுவையும் சந்தோஷப்படுத்தும்.
இப்போது சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாத பொருட்கள் என்னவென்பதைக் காண்போம்.

இரும்பு பொருட்கள்
சனிக்கிழமைகளில் இரும்புப் பொருட்களை வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால், சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். வேண்டுமானால், இரும்பு பொருட்களை தானமாக கொடுக்கலாம். சனிக்கிழமைகளைத் தவிர, வேறு எந்த நாட்களிலும் இரும்பு பொருட்களை வாங்கலாம்.

உப்பு வாங்கக்கூடாது
சனிக்கிழமை நாட்களில் உப்பை ஒருபோதும் வாங்கக்கூடாது. அப்படி சனிக்கிழமைகளில் உப்பு வாங்குவது கடன் சுமையை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. ஜோதிடத்தின் படி, நீங்கள் கடன் சுமையில் இருக்கக்கூடாது என்று நினைத்தால், சனிக்கிழமைகளில் உப்பை வாங்காதீர்கள்.

கருப்பு எள்ளு
சனிக்கிழமைகளில் கருப்பு எள்ளு விதைகளை வாங்கக்கூடாது. இந்நாளில் கருப்பு எள்ளு விதைகளை வாங்குவது வேலைகளில் இடையூறை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. சனி தோஷத்தை நீக்க, சனிக்கிழமைகளில் கருப்பு எள்ளு விதைகளை தானமாக அரச மரத்திற்கு வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது.

கருப்பு நிற காலணிகள்
நீங்கள் கருப்பு நிற காலணிகளை வாங்க விரும்பினால், சனிக்கிழமைகளில் வாங்காதீர்கள். சனிக்கிழமைகளில் கருப்பு காலணியை வாங்குபவர் எதிலும் தோல்வி அடைவார் என்று நம்பப்படுகிறது. ஜோதிடத்தின் படி, நீங்கள் தோல்வியைத் தவிர்த்து வெற்றிபெற விரும்பினால், சனிக்கிழமைகளில் கருப்பு காலணிகளை வாங்காதீர்கள்.



Click it and Unblock the Notifications