Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உடம்புல இந்த இடத்துல மச்சம் இருக்குறவங்க ரொம்ப அதிர்ஷ்டசாலியாம்... உங்களுக்கு இருக்கா?
இந்து நம்பிக்கைகளின் படி, கரு வளர்ச்சியின் போது கிரக நிலைகள் காரணமாக மச்சங்கள் உருவாகிறது. ஒரு மச்சத்தின் செல்வாக்கு அவற்றின் அமைப்பு, நிறம் முதல் அவை இருக்கும் உடல் பகுதி ஆகியவற்றைக் கொண்டு சொல்லப்படுகிறது.
பொதுவாக மச்சம் ப்ரௌன் மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும். சில நேரங்களில் அவை சிவப்பு, பிங்க் நிறத்திலும் இருக்கும். மச்சமானது சருமத்தில் உள்ள செல்கள் சருமம் முழுவதும் பரவுவதற்கு பதிலாக, நிறமி செல்களுடன் கொத்தாக வளரும் போது உருவாகின்றன. மனித உடலில் உள்ள தனித்துவமான இந்த அடையாளங்கள் ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய நுண்ணறிவைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இது தவிர, மச்சங்கள் ஒருவரின் எதிர்காலம், அதிர்ஷ்டம் மற்றும் குணாதிசயங்கள் ஆகியவற்றிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன.
இந்து நம்பிக்கைகளின் படி, கரு வளர்ச்சியின் போது கிரக நிலைகள் காரணமாக மச்சங்கள் உருவாகிறது. ஒரு மச்சத்தின் செல்வாக்கு அவற்றின் அமைப்பு, நிறம் முதல் அவை இருக்கும் உடல் பகுதி ஆகியவற்றைக் கொண்டு சொல்லப்படுகிறது. இப்போது உடலின் எந்த பகுதியில் இருக்கும் மச்சம் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது என்பதைக் காண்போம்.

நெற்றி
நெற்றியின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், வயது அதிகரிக்கும் போது நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள் என்பதை இது குறிக்கிறது. அதோடு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களையும் பெறலாம். அதே வேளையில், நெற்றியின் இடது பக்கத்தில் மச்சம் இருந்தால், நீங்கள் நிறைய செல்வத்தை சம்பாதித்தாலும், மற்றவர்களுக்கு உதவுவதில் அதிக ஆர்வம் காட்டமாட்டீர்கள் என்பதை இது குறிக்கிறது.

புருவங்கள்
புருவங்களுக்கு இடையே மச்சம் இருந்தால், அபரிமிதமான செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் பெற்று வாழ்வீர்கள். மறுபுறம், மச்சம் ஏதேனும் ஒரு புருவங்களில் இருந்தால், அது திருமணத்திற்கு பிறகு நிறைய அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள் என்பதைக் குறிக்கிறது.

கண்ணிமைகள் மீது
மச்சம் உங்கள் வலது கண்ணிமையில் இருந்தால், நீங்கள் பணக்காரராகவும், பிரபலமாகவும் இருப்பீர்கள் என்று அர்த்தம். மறுபுறம், மச்சம் கண்ணிமைகளின் உட்புறத்தில் இருந்தால், அது நீங்கள் அதிக செலவு செய்பவர் என்பதைக் குறிக்கிறது. எனவே கண்ணிமைகளில் மச்சம் இருப்பவர்கள் நிறைய செல்வத்தைக் குவித்தாலும், அதைக் காப்பாற்றுவது கடினமாக இருக்கும்.

மார்பு
மார்பு பகுதியில் கருப்பு-ப்ரௌன் நிறத்தில் மச்சம் இருந்தால், நீங்கள் உங்களை அதிர்ஷ்டசாலியாக கருதுங்கள். உங்கள் மார்பில் உள்ள ஒரு மச்சம் இருந்தால், அது நீங்கள் மிகவும் லட்சியமானவர் மற்றும் வாழ்க்கையில் பெரிய விஷயங்களை நோக்கி செல்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கை சரியாக திட்டமிட்டால், நீங்கள் மிகவும் வெற்றிகரமாக இருப்பீர்கள்.

காதுகள்
காதுகளின் உட்புறம் அல்லது வெளிப்புறத்தில் மச்சம் இருப்பது, ஆடம்பரத்திற்காக அதிகம் சிந்திக்காமல் மற்றவர்களுக்கு பணம் செலவழிப்பதைக் குறிக்கிறது. இருப்பினும், இந்த மச்சம் நல்லதாக கருதப்பட்டாலும், நீங்கள் உங்கள் நிதிகளை புத்திசாலித்தனமாக திட்டமிடுவது முக்கியம்.

உதடுகள்
உங்கள் உதடுகளின் மேல் விளிம்பில் உள்ள மச்சம் மங்களகரமானதாக கருதப்பட்டாலும், கீழ் உதட்டில் ஒன்று இருந்தால், அது சூதாட்டப் போக்கைக் குறிக்கிறது.

தோள்பட்டை
வலது தோள்பட்டையில் மச்சம் உள்ளவர்கள், தங்கள் நிதியை நன்றாக நிர்வகிப்பார்கள் மற்றும் அவர்களுடைய வளங்களை புத்திசாலித்தனமாக எவ்வளவு பயன்படுத்துவது என்பதை அறிந்திருப்பார்கள். எனவே உங்கள் வலது தோள்பட்டையில் மச்சம் இருந்தால், அது உங்களை வெற்றிக்கான பாதையை அமைத்துத் தரும் என்பதில் உறுதியாக இருங்கள்.

வலது கை
உங்கள் வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால், அது உண்மையிலேயே பணக்கார மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை நோக்கி கொண்டு செல்வதைக் குறிக்கிறது.

உதடுகளுக்கு மேல் அல்லது அருகில் மச்சம்
பிறக்கும் போதிருந்தே உங்களுக்கு உதடுகளுக்கு மேல் ஒரு மச்சம் இருந்தால், அது உங்கள் வங்கியில் ஒரு நல்ல இருப்பை அனுபவிப்பீர்கள் என்பதைக் குறிக்கிறது.



Click it and Unblock the Notifications