நாம படத்துல பார்த்த டைனோசர் எல்லாமே பொய்யா? உண்மையான டைனோசர்கள் எப்படி இருந்துச்சு தெரியுமா?

டைனோசர்கள் பற்றிய உண்மைகளை பார்க்கும்போது நாம் திரைப்படத்தில் பார்த்ததற்கும், டைனோசர்களின் உண்மையான குணங்களுக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது.

பூமியில் வாழ்ந்த மிகவும் ஆபத்தான அதேசமயம் தனித்துவமான உயிரினங்கள் என்றால் அது டைனோசர்கள்தான். திரைப்படங்களில் பார்க்கும்வரை நமக்கு டைனோசர்கள் என்ற ஒரு மிருகம் இருந்ததோ அல்லது அவை எவ்வளவு ஆபத்தானவையாக இருந்ததோ நமக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் டைனோசர்கள் பற்றிய உண்மைகளை பார்க்கும்போது நாம் திரைப்படத்தில் பார்த்ததற்கும், டைனோசர்களின் உண்மையான குணங்களுக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது.

how did dinosaurs die in real life

திரைப்படங்களில் டைனோசர்களை ஆபத்தானவையாகவும், மனிதர்களை கொல்வதாகவும் அதேசமயம் புத்திக்கூர்மை வாய்ந்தவையாகவும் காட்டுகின்றனர். இவை அனைத்தும் இயக்குனர்களின் கற்பனையில் உதித்தவையே தவிர உண்மையல்ல. கிட்டதட்ட 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் உண்மையான குணத்தை கண்டறிவது என்பதுதான். ஆனால் நம்முடைய அபார தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் அவற்றின் சில விசித்திரமான குணங்களை நம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த பதிவில் டைனோசர்கள் பற்றி சில விசித்திரமான உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெரும்பாலான டைனோசர்கள் சைவம்தான்

பெரும்பாலான டைனோசர்கள் சைவம்தான்

திரைப்படங்களில் காட்டியது போல டைனோசர்கள் உண்மையில் கொலைகார மிருகங்கள் இல்லை. பெரும்பாலான டைனோசர்கள் வகைகள் சைவ உணவு உண்பவையாகவும், தாவர உண்ணிகளாகவும் இருந்தன. அவை இயற்கையை நேசிப்பவையாகவும், இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தவையாகவும் இருந்தன. நான்கு கால்களில் நின்ற அனைத்தும் சைவ உண்ணிகளாகவும, இரண்டு கால்களில் நின்றவை மாமிச உண்ணிகளாகவும் அறியப்பட்டன.

ஸ்டீகோசொரஸின் மூளை

ஸ்டீகோசொரஸின் மூளை

ஸ்டீகோசொரஸ் என்பது டைனோசர்கள் வகைகளில் மிகவும் பருமமான மற்றும் பலசாலியான ஒரு இனமாகும். ஆனால் இவற்றின் மூளையின் அளவானது ஒரு வால்நட் அளவுதான் இருக்குமாம், ஆனால் இவற்றின் எடை கிட்டதட்ட 5 டன் இருக்குமாம். இவற்றின் மூளையின் செயல்திறன் என்பது மிகவும் குறைவானதாகவே இருந்தது.

டைனோசர்களின் வேகம்

டைனோசர்களின் வேகம்

திரைப்படங்களில்தான் டைனோசர்கள் காரில் போகும் மனிதர்களை விரட்டி வந்து கொள்ளும். ஆனால் உண்மையில் டைனோசர்களின் அதிகபட்ச வேகமே 40 கிலோமீட்டர்தான். அதுவும் சில வகைகளுக்கு மட்டுமே இந்த வேகம் மற்ற டைனோசர்களின் வேகம் இவற்றை விட குறைவாகத்தான் இருக்கும். அடிப்படையில் டைனோசர்கள் ஒரு சோம்பேறி மிருகமாகும்.

பிரச்சியோசரஸ்

பிரச்சியோசரஸ்

பிரச்சியோசரஸ் என்பது டைனோசர்கள் வகைகளில் மிகவும் பெரியதாக அறியப்படும் ஒரு இனம் ஆகும். இப்போது பூமியில் வாழும் மிகப்பெரிய உயிரினமாக கருதப்படுவது மம்மூத் என்னும் யானை வகைதான். ஆனால் பிரச்சியோசரஸ் என்பது மம்மூத்தை விட 17 மடங்கு எடையில் அதிகமாக இருக்குமாம். இப்போது அவை உயிரோடு இருந்தால் அவற்றை அடைக்க எவ்வளவு பெரிய கூண்டு தேவைப்படும் என்று கற்பனை செய்துபார்க்கவே பயமாக உள்ளது.

பல டைனோசர்களுக்கு இறகுகள் இருந்தது

பல டைனோசர்களுக்கு இறகுகள் இருந்தது

டைனோசர்கள் நமது கற்பனையில் செதில்களை கொண்ட பல்லி உருவத்தில்தான் இருக்கிறது. ஆனால் பல டைனோசர்கள் மயிலைப் போல இறகுகள் கொண்டவையாக இருந்தது. மாமிசம் உண்ணும் டைனோசர்கள், சைவ உணவு சாப்பிடும் டைனோசர்கள் இரண்டுமே இறகுகளை கொண்டவையாக இருந்தது.

பல டைனோசர்கள் மனித அளவில் இருந்தது

பல டைனோசர்கள் மனித அளவில் இருந்தது

டைனோசர்கள் பெரும்பாலும் ராட்சத அளவில்தான் திரைப்படங்களில் காண்பிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் சில இனத்தை சேர்ந்த டைனோசர்கள் மட்டுமே இந்த உருவத்தில் இருந்தது. பெரும்பாலான டைனோசர்கள் மனித உருவத்திலும், மனிதர்களை விட சிறிய உருவத்திலேயுமே காணப்பட்டன. டைனோசர்கள் இறந்த போது அவை இயற்கைக்கும், பிற பாலூட்டிகளுக்கும் உணவாக மாறின.

டீ - ரெக்ஸ்

டீ - ரெக்ஸ்

டைனோசர்களின் வகைகளிலேயே மிகவும் ஆபத்தான இனமாக இருந்தது டீ - ரெக்ஸ்தான். வேட்டையாடும் இனத்தை சேர்ந்த இந்த டைனோசரின் பற்கள் 8 முதல் 12 இன்ச் வரை பெரியதாக இருக்கும். இந்து பூமியில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள வேட்டையாடும் உயிரினங்களில் இதுதான் மிகவும் ஆபத்தானதாகும்.

டைனோசர்கள் எப்படி அழிந்தன?

டைனோசர்கள் எப்படி அழிந்தன?

டைனோசர்களின் அழிவு பற்றி பலவிதமான கருத்துக்கள் உள்ளது. அதில் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளவை, பூமியின் மீது ஒரு பெரிய விண்கல் மோதியது இதனால் பூமியின் தட்பவெப்ப நிலை முற்றிலும் மாறியது, மாறிய இந்த வானிலை மாற்றத்தில் டைனோசர்களால் உயிர்வாழ முடியவில்லை. எரிமலைகளில் இருந்து வெளியேறிய சாம்பலும், மாசடைந்த காற்றும் டைனோசர்களை சுவாசிக்க முடியாமல் செய்தது, மேலும் அந்த விண்கல்லால் பலவிதமான நோய்கள் பரவத் தொடங்கியது, மேலும் அவற்றின் உணவுச்சங்கிலியில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இந்த மாபெரும் உயிரினங்கள் அழிவை சந்தித்தன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, December 10, 2019, 10:25 [IST]
Desktop Bottom Promotion