For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!

அனுமன் ஜெயந்தி தென் இந்தியாவில் மார்கழி மாதம் அமாவாசை நாளில் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இதுவே வட இந்தியாவில் அனுமன் ஜெயந்தி வட இந்தியாவில் சைத்ர மாதம் பவுர்ணமி தினத்தில் கொண்டாடப்படுகிறத

|

அனுமன் வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அனுமன் அமைதியாக அமர்ந்து கொண்டிருப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கேசரி மைந்தன் ஆஞ்சநேயர் மார்கழி மாதம் அமாவாசை நாளில் மூலம் நட்சத்திர நாளில் அவதரித்தவர் என்று தென்னிந்தியாவில் கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் சைத்ர மாதம் பௌர்ணமியில் கொண்டாடுகின்றனர். அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படும் இன்றைய தினத்தில் சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வோம்.

Hanuman Jayanti 2020: Devotees to Celebrate Festival Today

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கை கூடும். துன்பம் விலகும். அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து உணவருந்தாமல், ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி வழிபட வேண்டும். வாலில் குங்கும பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானது. அவல், சர்க்கரை, தேன், பானகம், கடலை, இளநீர் முதலிய பொருட்கள் அனுமானுக்கு மிகவும் பிடிக்கும். அதை நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

நித்திய சிரஞ்சீவியாகத் திகழும் அனுமன் இன்றும் நம்மோடு சூட்சும வடிவில் இருக்கும் தெய்வம். மனமுருகிப் பிரார்த்திப்பவர்க்கு பிரத்யட்சமாகத் தோன்றி அருள்புரியும் தெய்வம். அனுமனுக்கு வெண்ணெய், வெற்றிலை மாலை சாத்தி வழிபடுகிறோம். சிலரோ காரமான மிளகு வடை மாலை சாத்துவார்கள். வட இந்தியாவில் ஜாங்கிரி மாலை சாத்தி வழிபடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வடைமாலை

வடைமாலை

தென்னிந்தியர்கள் காரத்தை அதிகம் விரும்பி உண்பார்கள். ஆதலால், எளிதில் கிடைக்கும் உப்புடன், காரமும் இயற்கையாகச் சேர்ந்துவிட்டது வடையுடன். ஆதலால் இங்கு உப்பு மற்றும் மிளகு சேர்த்து காரமாகச் செய்யப்படும் வடைகளினாலான மாலை ஆஞ்சநேயருக்குப் படைக்கப்படுகிறது.

வட இந்தியாவில் கரும்பு அதிகம் விளைவிக்கப்படுகிறது. அதனால் சர்க்கரை உற்பத்தியும் அதிகம். வட இந்தியாவில் இருப்பவர்களுக்கு இனிப்பு மிகவும் பிடித்தமான உணவு. அங்கே பெரும்பாலான மக்களுக்குக் காலை உணவே ஜாங்கிரிதான். அந்த ஜாங்கிரியும் ராகுவுக்குப் பிடித்தமான உளுந்தினால்தான் செய்யப்படுகிறது.

ஜாங்கிரி மாலை

ஜாங்கிரி மாலை

ஆஞ்சநேயருக்கு இனிப்பான ஜாங்கிரி மாலை சார்த்தினாலும், காரமான வடைமாலை சார்த்தினாலும், இரண்டுமே உளுந்தினால் ஆனது என்பதே உண்மை. இரண்டுமே ராகு தோஷத்திலிருந்து நம்மை விடுவித்து, நல்லது செய்யும் என்பது மகிழ்ச்சியான விஷயம்தான் என்று காஞ்சி மகா ஸ்வாமிகள் கூறியுள்ளார்.

அனுமனின் சக்தி

அனுமனின் சக்தி

அனுமானுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால் தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும்.

சகலதோஷம் நீங்கும்

சகலதோஷம் நீங்கும்

ராகுவின் தோஷத்திலிருந்து விடுபட மட்டுமல்லாமல், காரிய சித்திக்காகவும் அனுமனுக்கு வடைமாலை சார்த்தப்படுகிறது. அனுமனுக்குச் சார்த்தப்படும் வடைமாலை செய்வதற்கு, தோல் நீக்காத கறுப்பு உளுந்துதான் பயன்படுத்தப்படுகிறது. ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்' என்ற அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.

துன்பம் போக்கும் வெண்ணெய்

துன்பம் போக்கும் வெண்ணெய்

ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றினால் நம் துன்பங்கள் சூரியனைக் கண்டு உருகும் வெண்ணை போல உருகி விடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும் என்பது நம்பிக்கை. அவருக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் முடியும்.

சொல்லின் செல்வன் அனுமன்

சொல்லின் செல்வன் அனுமன்

அனுமனை சொல்லின் செல்வன் என சிறப்பித்துக் கூறுவார்கள். இவரை வணங்குவதன் மூலம் சிறந்த பேச்சாளராக ஆக முடியும். அனுமனை பக்தியுடன் வழிபட்டால் நாவன்மை மேலோங்கும். அனுமன் ஜெயந்தி நாளில் அருகில் இருக்கும் ராமர் கோயில் அல்லது ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்வில் சகல நலன்களையும் பெறலாம்.

தோஷம் நீங்கும் ஆஞ்சநேயர்

தோஷம் நீங்கும் ஆஞ்சநேயர்

சனிப் பெயர்ச்சி நடப்பவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும். தீய சக்திகள், காத்து கருப்பு, செய்வினை, மனநோய், சகல தோஷ தடைகள் நீங்குவதற்காக பக்தர்கள் ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்யலாம். வாஸ்து கோளாறு உள்ள வீட்டின் வாசல் படியில் அனுமன் படம் வைப்பதால் தோஷ கோளாறுகள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hanuman Jayanti 2020: Devotees to Celebrate Festival Today

Hanuman Jayanti is observed during the month of Chaitra on full moon day, which usually falls in the month of April.
Story first published: Wednesday, April 8, 2020, 14:01 [IST]
Desktop Bottom Promotion