Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
கருட புராணத்தின் படி இந்த பழக்கங்கள் ஒருவரின் வாழ்நாளை குறைக்குமாம்... உங்ககிட்ட இருந்தா உடனே கைவிடுங்க..
ஒருவரது எந்த செயல்கள் அவரது வாழ்நாளை குறைக்கும் என்பது பற்றியும் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இப்போது அந்த செயல்கள் எவையென்பதைக் காண்போம்.
இந்து மதத்தில் உள்ள 18 மகா புராணங்களில் ஒன்று தான் கருட புராணம். இந்த கருட புராணமானது பறவைகளின் அரசனான கருடன் மற்றும் மூம்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவிற்கும் இடையே நடந்த உரையாடலை தான் வேதவியாசர் கருட புராணமாக எழுதியுள்ளார். இந்த கருட புராணமானது 1000 வருடங்களுக்கு முன்னதாக எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கருட புராணத்தில் மரணத்திற்கு பிறகான வாழ்க்கை பற்றி மட்டுமின்றி, வாழ்க்கை பற்றியும், வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு வாழக்கூடாது, எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது, எது நல்லது, எது கெட்டது என்பன போன்ற பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக ஒருவரது எந்த செயல்கள் அவரது வாழ்நாளை குறைக்கும் என்பது பற்றியும் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இப்போது அந்த செயல்கள் எவையென்பதைக் காண்போம். உங்களிடம் அந்த பழக்கங்கள் இருந்தால் உடனே கைவிடுங்கள்.

தாமதமாக எழுவது
காலையில் தாமதமாக எழுவது ஒருவரது ஆயுர்காலத்தை குறைப்பதாக கருடபுராணம் கூறுகிறது. ஏனெனில் பிரம்ம முகூர்த்தத்தில் நல்ல சுத்தமான காற்று இருப்பதால், அதிகாலையில் ஒருவர் வேகமாக எழும் போது, அவரது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முந்தைய காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் அதிகாலையில் வேகமாக எழுந்ததனால் தான், அவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் அதிகம் இல்லாமல் இருந்தது. எனவே உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க விரும்பினால், தாமதமாக எழுவதை தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், உங்கள் ஆயுட்காலம் தான் குறையும்.

இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது
தயிர் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று தான். ஆனால் அந்த தயிரை இரவு நேரத்தில் சாப்பிடுவது பல நோய்களை வரவழைக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் தயிர் சாப்பிடும் போது, அது வயிறு தொடர்பான நோய்களை அதிகரித்து, அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகும். எனவே இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க பகல் வேளையில் தயிரை சாப்பிடுங்கள்.

பழைய இறைச்சி
நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், முதல் நாள் சமைத்த இறைச்சியை மறுநாள் வரை வைத்திருந்து சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால் அது உடலில் பல பிரச்சனைகளை உருவாக்கும். முக்கியமாக பழைய இறைச்சியை சாப்பிடும் போது, அதனால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு, உடல் ஆரோக்கியம் பலவீனமாகிவிடும். எனவே எக்காரணம் கொண்டும், முதல் நாள் சமைத்த இறைச்சிகளை மறுநாள் வரை வைத்திருந்து சாப்பிடாதீர்கள்.

அதிகாலையில் உடலுறவு கொள்வது
கருட புராணத்தின் படி, அதிகாலையில் உடலுறவு கொள்வது ஆண்களின் ஆயுளைக் குறைக்கும். கூடுதலாக, காலையில் உடலுறவு கொள்ளும் போது, அது உடலை பலவீனமடையச் செய்து, நோய்களை எதிர்த்துப் போராட முடியாமல் செய்துவிடும். அதிகாலையானது யோகா, தியானம், பிராணயாமம் போன்றவற்றை செய்ய ஏற்ற காலமாகும். ஏனெனில் யோகிகளும், ரிஷிகளும் இந்த காலத்தை தியானத்திற்கான நேரமாக நிர்ணயம் செய்ததால், இந்த காலத்தில் இவற்றை செய்யும் போது, உடலின் சக்தி அதிகரிக்கும்.

சுடுகாட்டில் இருந்து வந்ததும் குளிக்காமல் இருப்பது
சுடுகாட்டில் உடலை எரிக்கும் போது, அந்த தீயில் இருந்து வெளிவரும் புகையில் ஏராளமான பாக்ரியாக்கள் கலந்து, சுடுகாட்டிற்கு வந்தோரின் மீது ஒட்டிக் கொள்ளும். எனவே சுடுகாட்டில் இருந்து வீட்டிற்கு வந்ததும், உடனே குளிக்க வேண்டும் மற்றும் அப்போது அணிந்திருந்த ஆடைகளை உடனே துவைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்த பாக்டீரியாக்களால் கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications
