Latest Updates
-
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது!
குரு பூர்ணிமா அன்று உருவாகும் திரிகிரஹி யோகத்தால் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது..
குரு பூர்ணிமா நாளன்று சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய 3 முக்கிய கிரகங்களும் மிதுன ராசியில் ஒன்றாக இணைந்து பயணிக்கின்றன. இப்படி கிரகங்களின் சேர்க்கை அனைத்து ராசிகளிலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்து மதத்தில் குரு பூர்ணிமாவிற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இந்நாளில் மக்கள் தங்கள் குருவை வணங்குவார்கள். இந்த குரு பூர்ணிமாவை வியாஸ் பூர்ணிமா என்றும் அழைப்பதுண்டு. இந்த ஆண்டு குரு பூர்ணிமா ஜூலை 13 ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. வேத ஜோதிடத்தின் படி, இந்த குரு பூர்ணிமா நாளில் கிரகங்களின் சிறப்பு சேர்க்கை உருவாகிறது. முக்கியமாக இந்நாளில் மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் சேர்ந்து திரிகிரஹி யோகத்தை உருவாக்குகின்றன.

குரு பூர்ணிமா நாளன்று சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய 3 முக்கிய கிரகங்களும் மிதுன ராசியில் ஒன்றாக இணைந்து பயணிக்கின்றன. இப்படி கிரகங்களின் சேர்க்கை அனைத்து ராசிகளிலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் திரிகிரஹி யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். அதுவும் நல்ல பண பலன்களைப் பெறவுள்ளார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்நாளில் தங்கள் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள் மற்றும் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். சொல்லப்போனால் இவர்கள் எப்போதும் நிதி நெருக்கடிகளை சந்திக்கமாட்டார்கள். வாழ்க்கையில் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சிறந்த பலனைத் தரும். ஆனால் பட்ஜெட்டிற்குள் முடிவு எடுக்க வேண்டும்.

மிதுனம்
செலவுகள் குறைந்து நிதி நிலைமை மேம்படும். வங்கி இருப்பு அதிகரிக்கும். பல வழிகளில் அதிர்ஷ்டம் அடிக்கும் மற்றும் நிதி நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். குடும்ப பிரச்சனைகள் முழுமையாக நீங்கும். நற்செய்திகள் உங்களைத் தேடி வரும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் சிறந்த பலனை அளிக்கும். இந்த ராசிக்காரர்களைத் தேடி பல வகையான நிதி நன்மைகள் வரும். அனைத்து கடன்களையும் திருப்பி செலுத்திவிடுவார்கள். பணியிடத்தில் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். காதலிப்பவர்கள் திருமணம் குறித்த முடிவு எடுப்பார்கள். காதலிப்பவர்களுக்கு சாதகமான காலமாகும்.

சிம்மம்
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். உத்தியோகத்தில் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக இந்த யோகம் நல்ல விஷயங்களை செய்வதற்கான சிறந்த நேரம். இக்காலத்தில் புதிய விஷயங்களை தொடங்கினால் தோல்வியே கிடைக்காது. மொத்தத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிலையான ஏற்றம் உண்டு.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு வெற்றிக்கான புதிய வழிகள் தானாகவே திறக்கும். இது பணியிடத்தில், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் பணி பாராட்டப்படும். சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு நல்ல நேரம். பங்கு சந்தையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இந்நாள் முதலீடுகளுக்கு நல்ல நேரம். நிதி நிலைமை மேம்படும். அரசு வேலைக்கு தயாராகும் மாணவர்களுக்கு சாதகமான நேரம்.



Click it and Unblock the Notifications
