Latest Updates
-
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
குரு பூர்ணிமா அன்று உருவாகும் 4 ராஜ யோகங்கள்.. உங்க கடன் பிரச்சனை நீங்கணும்-ன்னா இத செய்யுங்க...
இந்த ஆண்டு குரு பூர்ணிமா 2022 ஜூலை 13 ஆம் தேதி புதன் கிழமை, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டில் வரும் குரு பூர்ணிமா மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் மிகவும் மங்களகரமான 4 ராஜ யோகங்கள் உருவாகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் குரு பூர்ணிமா ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. இது குருவின் முக்கியத்துவத்தை நினைவுக்கூறும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் தான் நமது வழிகாட்டிகள். அவர்கள் பாரபட்சமின்றி நம்மை சரியான பாதையில் எப்போதும் வழிநடத்துவார்கள். அவர்களின் தன்னலமற்ற சேவைக்கு அவர்களுக்கு நன்றி சொல்வது மிகவும் முக்கியம்.

குரு பூர்ணிமா என்பது குரு வேத வியாசரின் பிறந்த நாளாகும். மகரிஷி வேத வியாசர் தான் வேதங்களையும், புராணங்களையும் இயற்றியுள்ளார். இந்த ஆண்டு குரு பூர்ணிமா 2022 ஜூலை 13 ஆம் தேதி புதன் கிழமை, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டில் வரும் குரு பூர்ணிமா மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் குரு பூர்ணிமா அன்று மிகவும் மங்களகரமான 4 ராஜ யோகங்கள் உருவாகின்றன. இந்நாளில் நமது வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு சில விஷயங்களை செய்வதன் மூலம் விடுபடலாம்.

நிதி பிரச்சனைகள் நீங்க...
குரு பூர்ணிமா நாளன்று ஏழை எளியோருக்கு பருப்புக்களை தானம் செய்வதன் மூலம், கடன் பிரச்சனைகள் அல்லது நிதி தொடர்பான பிற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதோடு மஞ்சள் நிற இனிப்புக்களை வழங்குவதன் மூலம் நிதி பிரச்சனைகளைத் தவிர்த்து, நிதி நிலைமையை மேம்படுத்தலாம்.

அதிர்ஷ்டம் மற்றும் வெற்றிக்கு...
குரு பூர்ணிமா நாளில் லட்சுமி நாராயணன் கோவிலுக்கு சென்று, துருவிய தேங்காயால் அர்ச்சனை செய்து விஷ்ணு பகவானை வழிபடுங்கள். மேலும் தானம் செய்யுங்கள். முக்கியமாக மஞ்சள் நிற இனிப்புகள் மற்றும் ஆடைகளை தானம் செய்வது மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் ஜாதகத்தில் உள்ள குரு தோஷம் நீங்கும் மற்றும் அதிர்ஷ்டம் எப்போதும் உடன் இருக்கும்.

திருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்க...
திருமணத்தில் தடைகளை சந்தித்து வருகிறீர்களா? உங்கள் திருமணத்தில் உள்ள தடைளை நீங்க குரு பூர்ணிமா நாளில் வீட்டில் குரு யந்திரத்தை வையுங்கள். இந்த குரு யந்திரத்தை தினமும் பூஜை செய்து வழிபடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், திருமணம் விரைவில் நடைபெறும்.

மாணவர்களின் பிரச்சனைகள் நீங்க...
மாணவர்கள் தங்கள் படிப்பில் சிரமத்தை எதிர்கொண்டால் அல்லது எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் கஷ்டப்பட்டால், குரு பூர்ணிமா நாளன்று மாடுகளுக்கு தீவனம் வாங்கி கொடுங்கள். உங்கள் குருவை மரியாதையுடன் நடத்துங்கள். முடிந்தால், தினமும் பகவத் கீதையில் சில பகுதிகளை படியுங்கள். இதனால் நல்ல பலன கிடைக்கும். மேலும் குரு பூர்ணிமா நாளன்று குருவை சந்தித்து, அவரின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். மஞ்சள் நிற ஆடைகளை தானம் செய்யுங்கள். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்ட வரும்.



Click it and Unblock the Notifications
