Latest Updates
-
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
குரு பெயர்ச்சி 2019 - 20: கும்பம் லக்னத்திற்கு லாபங்களை தரும் குருபகவான்
குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொன்னாலும் இம்முறை கு
நவகிரகங்களில் குருபகவான் சுப கிரகம். குரு பெயர்ச்சியை அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வாக்கியப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 29ஆம் தேதி குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது. விருச்சிகத்தில் இருந்து தனசு லக்னத்தில் அமரப்போகிறார் குரு பகவான். கும்பம் லக்னத்திற்கு லாப ஸ்தானம் மற்றும் தன ஸ்தான வீட்டு அதிபதி குரு பகவான். தனுசுவில் அமரும் குருவின் பார்வை லக்னத்திற்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. இந்த சஞ்சாரம் பார்வையால் கும்பம் லக்னத்திற்கு பலன்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.
குரு அமரும் இடத்தைப் போல குரு பார்க்கும் இடமும் அற்புதமாக அமைந்துள்ளது. குரு பார்வை தனுசு ராசியில் இருந்து மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய லக்னங்களின் மீது விழுகிறது. குருவின் பார்வை உங்க லக்னத்திற்கு ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. குருவின் பார்வை நிறைய மேன்மைகளையும் லாபங்களையும் அள்ளித்தரப்போகிறது.
குரு பெயர்ச்சி கும்ப லக்னகாரர்களுக்கு அபரிமிதான மன மகிழ்ச்சியையும், வாழ்க்கையில் வசதிகளை தரப்போகிறது. குரு பகவான் தன ஸ்தானத்திற்கும் லாப ஸ்தானத்திற்கும் அதிபதி. குடும்ப வாழ்க்கையில் சந்தோஷத்தையும் நிம்மதியையும் வெற்றிகளையும் தரப்போகிறவர் குருபகவான்.

திருமண பாக்கியம்
கும்ப லக்னத்தில் அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்கள் அடங்கியுள்ளன. குரு பார்வையால் மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அவிட்ட நட்சத்திரம் தைரிய ஸ்தானத்தை குரு பார்க்கிறார். எதையும் வெல்வீர்கள். இளைய சகோதரர்கள் உதவி கிடைக்கும். மூத்த சகோதரர்களினால் ஆதாயம் கிடைக்கும். பூர்வ புண்ணியம் பலம் பெறும். உடன் பிறந்தவர்களுக்கு திருமணம் பாக்கியம் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்த கும்ப லக்னகாரர்களுக்கு மகான்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணவரவு கிடைக்கும். சித்தர்களின் அருளாசி கிடைக்கும். பூரட்டாசி நட்சத்திரத்தில் பிறந்த கும்ப லக்னகாரர்களுக்கு தெய்வகாரியங்கள், ஆன்மீக வழிபாடு அதிகம் நடைபெறும். தெய்வீக நம்பிக்கைகள் கூடும்.

லாப குருவினால் லாபம்
இதுநாள் வரை பத்தாம் வீட்டில் இருந்த குருபகவான் இனி பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்தில் அமரப்போகிறார். குரு ஆட்சி வீடான தனுசுவில் ஆட்சி பெற்று அமரப்போவதால் மேன்மைகளும் நன்மைகளும் கிடைக்கும். லக்னாதிபதி சனி கேது உடன் சேர்ந்து லாப ஸ்தானத்தில் இருக்கிறார். கும்ப லக்னகாரர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் குடைச்சல்கள் அதிகரித்தது. உடம்பில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியது. இனி குருபகவான் லாப ஸ்தானத்தில் அமரப்போவதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

கணவன் மனைவி பிரச்சினை தீரும்
சனியோடு இணைந்த கேது உடன் குரு சேருவதால் ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். கடன் தொல்லைகள் நீங்கும் உங்களின் செல்வாக்கு உயரும். குருவின் பார்வை மூன்றாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. தைரிய ஸ்தானத்தினை குரு பார்ப்பதால் உங்க தைரியம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து லாபம் அதிகரிக்கும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். பிசினஸ் மூலம் நல்ல வரும் குரு பகவான் களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் கவலைகள் காணாமல் போகும். பகைவர்கள் விலகுவார்கள்.

ஒளிமயமான எதிர்காலம்
மாணவர்களுக்கு நீங்கள் விரும்பும் உயர்கல்வி தேடி வரும். குறிக்கோளை அடைவீர்கள். அன்பு பிள்ளைகள் ஜெயிப்பார்கள். வேலை கிடைக்கும். திருமணம் கைகூடி வரும். கவுரவம் தேடி வரும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி மேன்மைகளையும் லாபத்தையும் தரும். ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்று பாடப்போகிறீர்கள்.



Click it and Unblock the Notifications
