Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
குரு அஸ்தமனமாவதால் அடுத்த ஒரு மாதம் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
குரு பகவான் 2022 பிப்ரவரி 19 ஆம் தேதி அஸ்தமனமாகிறது. இந்த அஸ்தமனத்தால் சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். அதில் 4 ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கலாம்.
வேத ஜோதிடத்தில் வியாழன் அல்லது குரு ஒரு நல்ல கிரகமாக கருதப்படுகிறது. இது அறிவு, மதம், திருமணம், குழந்தைகள், வளர்ச்சி போன்றவற்றின் காரணியாகும். இந்த குரு தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதி. இத்தகைய குரு பகவான் கடக ராசியில் உச்சமாக இருந்தாலும், மகர ராசியில் சற்று பலவீனமாக இருப்பதாக கருதப்படுகிறது. வேத ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் ராசியை அல்லது இடத்தை மாற்றும் போது, அது மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த வகையில் குரு பகவான் 2022 பிப்ரவரி 19 ஆம் தேதி அஸ்தமனமாகிறது. இந்த அஸ்தமனத்தால் சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். அதில் 4 ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கலாம். இப்போது அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார், எம்மாதிரியான பிரச்சனைகளை சந்திப்பார்கள் மற்றும் குரு பகவானை மகிழ்விக்க என்ன பரிகாரங்களை செய்வது என்பதைக் காண்போம்.

கடகம்
குரு அஸ்தமன காலத்தில் கடக ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது இக்காலத்தில் எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடாதீர்கள். முதலீடு செய்ய நினைத்தால், அதை தள்ளிப் போடுங்கள். பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரித்து, மன உளைச்சலால் அவதிப்படுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களும் குரு அஸ்தமனமாவதால் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள். இக்காலத்தில் எந்த புதிய வேலையையும் தொடங்காதீர்கள். யாருடனும் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதை செய்யாதீர்கள். குடும்ப பிரச்சனையால் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள்.

தனுசு
குரு அஸ்தமனமாவதால் அடுத்த ஒரு மாத காலத்திற்கு தனசு ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். எதிலும் புதிய முதலீடு செய்யாதீர்கள். பணம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். யாருடனும் சண்டையில் ஈடுபடாதீர்கள். முக்கியமாக புதிய வேலை எதையும் ஆரம்பிக்காதீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் குரு அஸ்தமன காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இக்காலத்தில் அதிக பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். தற்போதைக்கு முதலீடு செய்ய நினைத்தால், அதை ஒத்திப் போடுங்கள். குடும்ப பிரச்சனையால் மன உளைச்சல் ஏற்படும். இக்காலத்தில் எந்த விவாதத்திலும் ஈடுபட வேண்டாம். பேசும் போது வார்த்தைகளை கவனித்து பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

பரிகாரங்கள்
குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பின்வரும் பரிகாரங்களின் மூலம், தாக்கத்தைக் குறைக்கலாம்.
* வியாழக்கிழமை அன்று 'ஓம் பிருஹஸ்பதே நம' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
* வியாழக்கிழமை அன்று தங்கம், மஞ்சள், உளுத்தம் பருப்பு, மாம்பழம் போன்ற மஞ்சள் பொருட்களை தானம் செய்யுங்கள்.
* வியாழக்கிழமை அன்று மகாவிஷ்ணுவிற்கு உளுத்தம் பருப்பு லட்டு செய்து படையுங்கள். இதனால் விஷ்ணு பகவான் மகிழ்வார்.
* குரு தோஷம் நீங்குவதற்கு, வியாழக்கிழமை அன்று விரதம் இருங்கள். மேலும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து உப்பில்லாத உணவை உண்ணுங்கள்.
* ஜாதகத்தில் குரு தோஷம் நீங்க வேண்டுமானால், வியாழக்கிழமை அன்று நீராடுவதற்கு முன் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து குளியுங்கள். குளித்த பின்னர் 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய நம' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.



Click it and Unblock the Notifications
