For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த சின்னம் கையில் இருப்பவர்கள் தங்களின் ஆணவத்தால் தோல்வியை சந்திப்பார்களாம் தெரியுமா?

நமது கையில் இருக்கும் ஒவ்வொரு ரேகைகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதேபோல நமது கையில் இருக்கும் சின்னங்களுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது அந்த வகையில் நமது கையில் இருக்கும் கிரில் சின்னத்திற்கும் ஒரு அர்த்தம

|

இந்தியாவில் பல்வேறு விதமான ஜோதிட சாஸ்திரங்கள் உள்ளது. ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும், பகுதிக்கும் ஏற்றவாறு அவர்களின் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கை மாறுபடுகிறது. அந்த வகையில் தென்னிந்தியாவில் அதிகளவு மக்கள் நம்பும் ஒரு விஷயம் நாடி ஜோதிடம் ஆகும். நாடி ஜோதிடம் என்பது நமது கையில் இருக்கும் ரேகைகளை கொண்டு நமது எதிர்காலத்தை அறிவதாகும்.

Grilles On The Palm Meaning

நமது கையில் இருக்கும் ஒவ்வொரு ரேகைகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதேபோல நமது கையில் இருக்கும் சின்னங்களுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது அந்த வகையில் நமது கையில் இருக்கும் கிரில் சின்னத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. கிரில் என்பது கையில் இருக்கும் கட்டங்கள் ஆகும். உங்கள் கையில் இருக்கும் கிரில் சின்னம் உங்களை பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 உள்ளங்கையில் கிரில் சின்னம்

உள்ளங்கையில் கிரில் சின்னம்

கிரில்ஸ் பெரும்பாலும் ஒரு உள்ளங்கையின் ஏற்றங்களில் தோன்றும். அவை எதிர்மறை அறிகுறிகளைக் குறிக்கின்றன, மேலும் சிக்கல்களை தீர்க்கும் அறிகுறிகளையும் உணர்த்துகிறது. கிரில் பெரும்பாலும் ஆற்றலை வெளியிடுகிறது, மேலும் அது உங்கள் வாழ்க்கையில் எங்கிருந்தாலும் பாதுகாப்பற்ற தன்மையைக் குறிக்கிறது. வாழ்க்கையின் முயற்சிகளைப் பொறுத்தவரை அவை தொடக்கங்கள் அல்லது தடைகள் என்பதையும் குறிக்கலாம். இந்த சின்னம் கையில் இருப்பவர்கள் தொடர்ந்து கவலைகள் மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்படுவார்கள்.

 எப்படி இருக்கும்?

எப்படி இருக்கும்?

இவை கோடுகள் போல காட்சியளிக்கும், இது சிதறிய ஆற்றல்களை குறிக்கிறது. குழப்பம், பின்னடைவுகள், பாதுகாப்பின்மை, சந்தேகம், சோர்வு போன்ற காரணங்களால் ஒரு நபர் தங்கள் வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் மெதுவாகச் செல்வார் என்பதே இதன் பொருள். கிரில்ஸ்கள் வலை போன்ற அறிகுறிகளாகவும் காணப்படுகின்றன, அவை உங்கள் உள்ளங்கையில் உள்ள குறுக்கு கோடுகளால் உருவாகின்றன மற்றும் உங்கள் விருப்பம் திருப்தியடையாமல் இருக்கும்போது அடையாளம் பெரும்பாலும் தோன்றும், நீங்கள் ஏங்கும் விஷயம் கிடைக்காமல் இருக்கும்போது இது தோன்றும். கிரில்ஸ் வெவ்வேறு பகுதிகளில் தோன்றலாம் மற்றும் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.

 விரல்களில் கிரில்

விரல்களில் கிரில்

உங்கள் கட்டைவிரலின் இரண்டாவது கணுவில் அமைந்துள்ள கிரில்ஸ், உங்கள் சொந்த முயற்சிகள் மற்றும் கடின உழைப்பு காரணமாக உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கூறுகிறது. உங்கள் ஆள்காட்டி விரலின் நுனியில் கிரில்ஸ் அமைந்திருந்தால், அது செல்வத்துடன் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. இவர்கள் எளிதில் பணம் சம்பாதிப்பார்கள், மேலும் அவர் ஒரு வேலையில் இருந்தாலும் அல்லது ஒரு வணிகத்தை வைத்திருந்தாலும் பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். உங்கள் நடுவிரலின் மூன்றாவது கணுவில் வைக்கப்பட்டுள்ள கிரில்ஸ் நீங்கள் சுயநலவாதி மற்றும் கஞ்சத்தனமானவர் என்பதையும், சேமிப்பதன் மூலம் செல்வத்தைப் பெற்றிருப்பதையும் குறிக்கிறது.

MOST READ:பொய் சொல்றதுல இந்த ராசிக்காரங்கள மிஞ்ச ஆளே கிடையாதாம் தெரியுமா?

குரு மேட்டில் இருக்கும் கிரில்

குரு மேட்டில் இருக்கும் கிரில்

குரு மேட்டில் கிரில் சின்னம் இருந்தால் அது அதிகாரத்தின் மீதான உங்களின் வலுவான விருப்பத்தை குறிக்கிறது. உங்களின் தலைமை ரேகை தவறான வடிவத்தில் இருந்தால் அதன் பொருள் உங்களிடம் ஆணவம் அதிகமாக இருக்கும் என்பதாகும். உங்களின் ஆணவத்தால் நீங்கள் தோல்வியையும், நஷ்டத்தையும் சந்திக்க நேரிடும். உங்களின் தலைமை ரேகை நீளமாக இருந்து லூனா மேட்டை அடைந்தால் நீங்கள் பகுப்பாய்வில் திறமையானவர், சுறுசுறுப்பான எண்ணம் கொண்டவர் மற்றும் சொற்பொழிவாளராக இருப்பார்கள். இவர்கள் நினைத்ததை அடைவார்கள்.

சனி மேட்டில் கிரில்

சனி மேட்டில் கிரில்

கிரில்ஸ் அப்பல்லோ மலையில் நிறுத்தப்பட்டிருந்தால் நீங்கள் உங்களின் பொருளாதார நிலையை மற்றவர்களுக்கு காட்ட நினைக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் பண எண்ணம் கொண்டவர், லட்சியமானவர் மற்றும் அதிக ஆர்வமுள்ளவர். பல பணக்காரர்கள் அத்தகைய அடையாளத்தைக் கொண்டுள்ளனர்.

புதன் மேட்டில் கிரில்

புதன் மேட்டில் கிரில்

புதன் மலையில் அமைந்துள்ள கிரில்ஸ் நீங்கள் தந்திரமானவர், புத்திசாலி, அதிர்ஷ்டசாலி மற்றும் விரைவில் அனைத்தையும் கற்றுகொள்பவர் என்பதைக் குறிக்கிறது. திருமண ரேகைக்கு அருகில் கிரில்ஸ் தோன்றினால், நீங்கள் ஒற்றை ஆள் என்று அர்த்தம், உங்களுக்கு திருமணமானதும் கிரில்ஸ் படிப்படியாக மறைந்துவிடும்.

MOST READ:மரணம் பற்றிய கனவுகளால் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

சுக்கிர மேட்டில் கிரில்

சுக்கிர மேட்டில் கிரில்

சுக்கிர மேட்டில் கிரில் இருந்தால் நீங்கள் ஆடை மீதும், அழகு மீதும் அதிக மோகம் கொண்டவர்களாக இருப்பீர்கள் என்று அர்த்தம். மற்றவர்களின் கவனத்தையும், அன்பையும் பெற நீங்கள் விரும்புவீர்கள். சுக்கிர மேடு இதனால் மூடப்பட்டிருந்தால் நீங்கள் அடிக்கடி அதிகமாக சிந்திப்பதாகவும், சிறிய விஷயங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதாகவும் அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Grilles On The Palm Meaning

Read to know the meaning of grilles symbols in your palm.
Story first published: Wednesday, October 30, 2019, 12:26 [IST]
Desktop Bottom Promotion