Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
10 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி அன்று உருவாகும் சுப யோகம்!
இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி அன்று உருவாகியுள்ள சுப யோகமானது 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2012 இல் உருவாகியிருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத சுக்ல சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் பிறந்த நாள் தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி நாளன்று பக்தர்கள் விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வந்து வழிபடுவார்கள்.

2022 ஆம் ஆண்டு விநாயகரின் பிறந்த நேரத்தைப் பற்றி சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி அன்று உருவாகியுள்ள சுப யோகமானது 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2012 இல் உருவாகியிருந்தது. பொதுவாக விநாயகரை முறையாக வழிபட்டு வரும் பக்தர்களின் வேண்டுகோள் விரைவில் நிறைவேறுவதோடு, விநாயகரின் சிறப்பு அருளும் கிடைக்கும். இப்போது 2022 விநாயகர் சதுர்த்தி அன்று நிகழும் சுப யோகம் குறித்து விரிவாக காண்போம்.

10 ஆண்டுகளுக்கு பின்...
கணேச புராணத்தின் படி, விநாயகர் பத்ரபத சுக்ல சதுர்த்தி அன்று நண்பகலில் பிறந்தார். அதுவும் விநாயகர் புதன்கிழமை அன்று பிறந்தார். இந்த ஆண்டு பத்ர சுக்ல சதுர்த்தி திதி ஆகஸ்ட் 31 ஆம் தேதி புதன்கிழமை அன்று பிற்பகல் வரை இருப்பது மிகவும் சிறப்பு. சதுர்த்தி திதி ஆகஸ்ட் 30 ஆம் தேதி செவ்வாய் கிழமை மதியம் 3.33 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஆகஸ்ட் 31 மதியம் 3.22 வரை உள்ளது. நண்பகல் வரை சதுர்த்தி திதி இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.. நம்பிக்கையின் படி, இது மிகவும் நல்ல தற்செயல் நிகழ்வு. இந்நாளில் விநாயகரை வழிபடுவதால், பக்தர்களின் ஆசைகள் நிறைவேறுவதோடு, வாழ்க்கை சந்தோஷமாகவும் இருக்கும்.

ரவி யோகம்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பைப் போலவே, இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ரவி யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் போது வீட்டிற்கு விநாயகரின் சிலையைக் கொண்டு வரும் போது, வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும். ஏனெனில் ரவி யோகம் அசுப யோகங்களின் விளைவுகளை அழிக்கும் என்று கருதப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி அன்று கிரக நிலைகள்
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று மதியம் வரை சந்திரன் புதன் ஆளும் கன்னி ராசியில் இருப்பார். இதே நாளில் சுக்கிரன் தனது கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்கிறார். குரு தனது சொந்த ராசியான மீன ராசியில் இருப்பார். சனி மகர ராசியில் இருப்பார். சூரியன் சிம்ம ராசியிலும், புதன் அதன் சொந்த ராசியான கன்னி ராசியிலும் இருப்பார்கள். அதாவது இந்நாளில் 4 கிரகங்கள் தனது சொந்த ராசியில் இருப்பார்கள். இது தவிர விநாயகர் சதுர்த்தி அன்று இரண்டு கிரகங்களின் சேர்க்கையும் நிகழ்கிறது.

ரவி யோக பலன்கள்
ரவி யோகம் என்பது ஒரு மங்களகரமான சுப யோகம். இந்த யோகமானது புதிய கார் வாங்குவது, கடைகளைத் திறப்பது, வீடு வாங்குவது போன்றவற்றை செய்ய உகந்ததாக இருக்கும். இது தவிர இந்த ரவி யோகம் எதிர்மறை விளைவுகளைக் குறைக்கிறது.

விநாயகர் சிலை வாங்க சிறந்த நேரம்
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலையை வாங்க நினைத்தால், அதை ஒரு நல்ல நேரத்தில் வாங்கி வீட்டில் நிறுவுங்கள். ஆவணி மாதத்தில் சுக்ல பக்ஷத்தின் சதுர்த்தி திதி ஆகஸ்ட் 30 ஆம் தேதி மதியம் தொடங்கி, ஆகஸ்ட் 31 ஆம் தேதி மதியம் 3.22 வரை உள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் விநாயகர் சிலையை வாங்கி வழிபடுவது நல்லது.

சந்திரனை பார்க்கக்கூடாது
இந்து புராணங்களின் படி, விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனைப் பார்க்கக்கூடாது என்று நம்பப்படுகிறது. இந்த நன்னாளில் சந்திரனைப் பார்த்தால் மித்ய தோஷத்தை உருவாக்கும். பஞ்சாங்கத்தின் படி, ஆகஸ்ட் 30 ஆம் தேதி சந்திரனைப் பார்ப்பதைத் தவிர்க்கும் நேரமானது மதியம் 3.33 மணிக்கு தொடங்கி இரவு 8.40 மணிக்கு முடிகிறது. மற்றும் ஆகஸ்ட் 31 அன்று காலை 9.29 மணிக்கு தொடங்கி, இரவு 9.10 மணி வரை சந்திரனை பார்க்கக்கூடாது.



Click it and Unblock the Notifications