Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
காந்தி ஜெயந்தி 2022: காந்தி ஜெயந்தியின் வரலாறும், முக்கியத்துவமும்...
மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளாகும்.

ஒவ்வொரு ஆண்டும், காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தேச தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளைக் குறிக்கிறது. முதலில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று அழைக்கப்படும் மகாத்மா தேசத்தின் தந்தை என அனைவராலும் அழைக்கப்படுகிறார். அவர் ஒரு அரசியல் நெறிமுறையாளர், ஒரு தேசியவாதி மற்றும் ஒரு வழக்கறிஞர் கூடு. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக நம் நாடு சுதந்திரம் அடைய அகிம்சை வழியைத் தேர்ந்தெடுத்தவர் மகாத்மா. இதனால், ஆயுதங்களை விடுத்து அகிம்சை வழியைத் தேர்ந்தெடுப்பதில் உலகிற்கே பெரும் எடுத்துக்காட்டாக விளங்குபவர் மகாத்மா காந்தி. அன்பு மற்றும் சகிப்புத்தன்மையின் சக்தியை மகாத்மா நம்பினார். ஒவ்வொரு ஆண்டும், இந்த தினத்தை நாடு முழுவதும் மிகவும் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

காந்தியின் பிறப்பு
மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி; தாயார் பெயர் புத்லிபாய் ஆகும். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளாகும்.

வரலாற்று முக்கியத்துவம்
மகாத்மா காந்தி இந்தியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியில் இருந்தபோது சத்தியாகிரகத்தையும் அகிம்சை இயக்கத்தையும் தொடங்கினார். அகிம்சையைப் பின்பற்றி, அன்பின் சக்தியால் மக்களை வெல்வதே அவரது பாதையாக இருந்தது. அதன் பின்னர் இந்த முறை நாட்டில் நிறைய சிவில் உரிமைகளை பாதித்தது. மகாத்மா காந்தி இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை வழிநடத்தியதோடு, நாட்டின் நலனுக்காக தனது இன்னுயிரையே கொடுத்தார்.

சர்வதேச அகிம்சை தினம்
மகாத்மா காந்தியை போற்றும் விதமாகவும், சுதந்திரப் போராட்ட தியாகியான அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அக்டோபர் 2 ஆம் தேதி தேசிய விடுமுறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டில், ஐக்கிய தேசிய பொதுச் சபை காந்தியின் வழிகளைப் போற்றும் வகையில் அக்டோபர் 2 ஆம் தேதியை சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்தது. இந்த நாளில், அகிம்சையின் முக்கியத்துவம் மற்றும் உலகம் முழுவதும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

கொண்டாட்டங்கள்
காந்தி ஜெயந்தி தினத்தன்று நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் முதல் அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள் வரை அனைத்திலும் கொண்டாடப்படுகிறது. காந்தியின் விருப்பமான பாடலான ரகுபதி ராகவா பாடலைப் பாடுவதன் மூலம் அன்றைய தினம் தொடங்குகிறது. பின்னர், மக்கள் மகாத்மாவின் போதனைகளை நினைவுகூரும் விதமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மக்கள் கலாச்சார நிகழ்ச்சிகள், தேசபக்தி பாடல்கள் மற்றும் நடனம் ஆகியவற்றை ஏற்பாடு செய்கிறார்கள். மகாத்மா காந்தியின் போதனைகள் பற்றிய உரையும் வழங்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
